785 புனித பாத்திமா மாதா ஆலயம், எனதிரிமங்கலம்

   

புனித பாத்திமா மாதா ஆலயம்

இடம்: எனதிரிமங்கலம், 607108

மாவட்டம்: கடலூர்

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விழுப்புரம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், விழுப்புரம்

பங்குப்பணியாளர்: அருட்பணி. A. ஆல்பர்ட் பெலிக்ஸ்

குடும்பங்கள்: 47 

திங்கள் மாலை 06:30 மணிக்கு திருப்பலி

திருவிழா: மே மாதம் 24-ம் தேதி 

வழித்தடம்: 

விழுப்புரம் -திருச்சி சாலையில்,  விழுப்புரத்தில் இருந்து 18கி.மீ தொலைவில் எனதிரிமங்கலம் அமைந்துள்ளது.

Location map:

Our Lady of Fatima Church, Enathirimangalam

https://maps.app.goo.gl/w9JFs8iCwzoLBiEe7

வரலாறு:

கடலூர் -விழுப்புரம் மாவட்ட எல்லையில், கடலூரில் உள்ள எனதிரிமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள, புனித பாத்திமா மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்.

விழுப்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கின் எல்லையாக விளங்கிய எனதிரிமங்கலத்தில், சுதந்திர வேட்கையும், ஆலய வேட்கையும் ஒருங்கே கொண்ட மக்களின் ஆன்மீகத் தேவைக்காக, இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டில் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. 18கி.மீ தொலைவில் உள்ள விழுப்புரம் பங்கு ஆலயத்தில் இருந்து அருட்பணியாளர்கள் அவ்வப்போது வந்து வழிபாடுகளை நிறைவேற்றினர்.

தற்போதைய ஆலயமானது அருட்பணி. M. லூர்து சாமி அவர்களின் பணிக்காலத்தில் வெளிநாட்டு மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் கட்டப்பட்டு, 13.05.2005 அன்று பேராயர் A. ஆனந்தராயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

ஆலய முன்புறம் மணிக்கூண்டு கெபி ஒன்று உள்ளது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. ஆல்பர்ட் பெலிக்ஸ் அவர்கள்.