559 புனித மலை சவேரியார் ஆலயம், காரியாங்கோணம்

      

புனித மலை சவேரியார் ஆலயம் 

இடம் : காரியாங்கோணம், பூதப்பாண்டி (P. O) 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : தேவசகாயம் மவுண்ட் 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், மார்த்தால் 

பங்குத்தந்தை : அருள்பணி. K. மரியதாஸ் 

உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. ஆரோக்கிய ஜெனிஷ் 

குடும்பங்கள் : 28

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு. 

திருவிழா : ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையின் போது மூன்று நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்:

அருள்சகோதரி. ஸ்டெல்லா 

வழித்தடம் : நாகர்கோவில் -முக்கடல். 

நாகர்கோவிலிலிருந்து 4 Route bus.

மற்றும் 4 R பேருந்து. 

வரலாறு :

சுற்றிலும் மலைகளையும், பசுமையான மரங்களையும் தன்னகத்தே கொண்ட அழகிய காரியாங்கோணம் ஊரானது, நாகர்கோவில் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முக்கடல் அணை -க்கு அருகே அமைந்துள்ளது. 

காரியாங்கோணம் மலைப் பகுதியில் 1940 ஆம் ஆண்டில் முதன் முதலாக திரு. மனுவேல் -திருமதி. மரியம்மாள் தம்பதியினர், பிடி மண் குருசடியை கட்டினர். இவர்களின் மகன் திரு. பிரான்சிஸ் -திருமதி. ரோணிக்கம் தம்பதியினர் ஆலயம் அமைக்க 1972 ஆம் ஆண்டில் நிலம் கொடுத்தனர். மார்த்தால் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய பங்குத்தந்தையர்கள் இந்த ஆலயத்தை வழிநடத்தி வந்தார்கள். 

அருள்பணி. அருளப்பன் பணிக்காலத்தில் ஆலயம் கட்டப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் அருள்பணி. ஜோசப் அடிகளார் பணிக்காலத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 

அதன் பிறகு அருள்பணி. செல்லையா அடிகளார் திருப்பலி மற்றும் கிறிஸ்துமஸ் திருப்பலி நிறைவேற்றி வந்தார். 

அருள்பணி. பிரான்சிஸ் சேவியர் பணிக்காலத்தில் அன்பியம் துவக்கப் பட்டது. 

அருள்பணி. மரிய மிக்கேல் பணிக்காலத்தில் வளர்ச்சிப் பாதையில் பயணித்தது.

அருள்பணி. அலெக்ஸ் பணிக்காலத்தில் ஆலயத்தை சீரமைத்து, மின்விளக்கு வசதிகள் அமைக்கப் பட்டது. 

அருள்பணி. பெர்பெச்சுவல் பணிக்காலத்தில் மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது. மேலும் ஆலய பீடம் சீரமைக்கப் பட்டு, ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

29.02.2004 அன்று சிலுவைப்பாதை நிலைகள் அமைக்கப்பட்டது. மேலும் மறைக்கல்வி, கிராமப் பெண்கள் முன்னேற்ற சங்கம், மாலைப்பள்ளி ஆகியன துவக்கப்பட்டு புது மறுமலர்ச்சியை அருள்பணி. பெர்பெச்சுவல் அவர்கள் ஏற்படுத்தினார். 

2005 ஆம் ஆண்டு மலை மாதா குருசடி கட்டப்பட்டது. 

தொடர்ந்து அருள்பணி. பென்னோராஜ், அருள்பணி. ஆன்டனி கோமஸ் ஆகியோர் பணிக்காலத்தில் ஆன்மீகப் பாதையில் சிறப்பாக பயணித்து வந்தது. 

புதிய ஆலயத்திற்கு 14.01.2017 அன்று அருள்பணி. மார்சலின் தே போரஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 

அருள்பணி. புஷ்பராஜ் மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருள்பணி. லிகோரியஸ் ஆகியோரின் பணிக்காலத்தில், காரியாங்கோணம் மக்களின் கடின முயற்சி மற்றும் உழைப்புடனும், பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடனும் ஒன்றேகால் கோடி ரூபாய் செலவில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 24.04.2019 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

மலையின் மீது இவ்வாலயம் அமைந்து மக்களுக்கு அருள் வரங்களை அள்ளித் தருவதால், புனித மலை சவேரியார் ஆலயம் என்ற சிறப்புப் பெயருடன் இவ்வாலயம் விளங்குவது தனிச்சிறப்பு.