இடம் : ஆரோக்கியமாதா தெரு, மேட்டுப்பட்டி
மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : திண்டுக்கல்
மறை வட்டம் : திண்டுக்கல்
நிலை : சிற்றாலயம்
பங்கு : வியாகுல மாதா ஆலயம், மேட்டுப்பட்டி
நிர்வாக பங்குத்தந்தை : அருட்பணி செல்வராஜ்
பங்குத்தந்தை : அருட்பணி பன்னீர்செல்வம்
இணை பங்குத்தந்தை : அருட்பணி ரூபன்
ஞாயிறு திருப்பலி : இல்லை
மாதத்திற்கு ஒரு முறை திருப்பலி நடைபெறும்.
திருவிழா : ஆகஸ்ட் மாதம் 29 -ம் தேதி கொடியேற்றப்பட்டு செப்டம்பர் மாதம் 08 -ம் தேதி நிறைவு பெறும்.
வழித்தடம் : மதுரை - திண்டுக்கல் சாலை. இறங்குமிடம் மேட்டுப்பட்டி (அவர்லேடி)
1980 ல் இந்த சிற்றாலயம் கட்டப்பட்டது. பின்னர் போதிய இடவசதி இல்லாததால் இடிக்கப்பட்டு அழகுற புதிய சிற்றாலயம் கட்டப்பட்டு 18-08-2018 அன்று பங்குத்தந்தை அருட்பணி செல்வராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
சிற்றாலயம் கட்ட அடித்தளம் (பேஸ்மென்ட்) தோண்டுகின்ற வேளையில் சுமார் ஏழு அடியிலேயே நீருற்று காணப்பட்டதை அன்னையின் அருளாக எண்ணுகின்றனர். காரணம் இப்பகுதியில் முந்நூறு அடிகளுக்கு மேலே தோண்டினால் தான் தண்ணீர் கிடைக்கும்.
திருவிழாவில் செப்டம்பர் 7 ம் தேதி தேர்பவனி மற்றும் 8 ம் தேதி திருவிழா நிறைவு திருப்பலி மற்றும் அன்பின் விருந்தும் சிறப்பாக நடைபெறும்.
பங்கு ஆலயமான மேட்டுப்பட்டி ஆலயத்திற்கு மிக அருகில் இச்சிற்றாலம் அமைந்துள்ளது.