16 ஆரோக்கிய அன்னை ஆலயம், அன்னை இந்திரா நகர்


ஆரோக்கிய அன்னை ஆலயம்.

இடம் : அன்னை இந்திரா நகர் (அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில்)

மாவட்டம் : தேனி
மறை மாவட்டம் : மதுரை.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : உலக மீட்பர் ஆலயம், தேனி.

குடும்பங்கள் : 15
அன்பியம் : 1

ஞாயிறு திருப்பலி : இல்லை. (தேனியில் உள்ள பங்கு தளத்திற்கு இங்குள்ள மக்கள் செல்வார்கள்)

அதற்குப் பதிலாக மாதத்தில் இரண்டு புதன்கிழமைகளில் மாலை 06.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

பங்குத்தந்தை : அருட்பணி. ஜாண் மார்ட்டின்
இணை பங்குத்தந்தை : அருட்பணி. அந்தோணி சாமி

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும்.

வரலாறு

கிபி 2009 ல் உதயமான இந்த கிளைப் பங்கானது தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி -தேனி நெடுஞ்சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ளது. மேலும் இவ் ஆலயமானது 'தாயகம் திரும்பிய மக்களுக்காக' (குடும்பமாக இந்தியாவிலிருந்து இலங்கை சென்று வாழ்ந்து விட்டு மீண்டும் தாயகம் வந்து வாழ்பவர்கள்) கட்டப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 225 (கத்தோலிக்கர் 15 குடும்பங்கள்) குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதிக்கு சிலோன்காலனி என்று பெயர்.