308 புனித சூசையப்பர் ஆலயம், வட்டக்கரை, நாகர்கோவில்


புனித சூசையப்பர் ஆலயம்.

இடம் : வட்டக்கரை, நாகர்கோவில்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டாறு

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி ஆன்ட்ரூஸ்

குடும்பங்கள் : 425
அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு

வாரநாட்களில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி திருப்பலி : காலை 06.00 மணிக்கு

 புதன் திருப்பலி : மாலை 05.30 மணிக்கு

கெபிகள்:
1. பாத்திமா மாதா கெபி
2. லூர்து மாதா கெபி
3. தேவசகாயம் பிள்ளை கெபி
4.கல்லரைத் தோட்டத்தில் வியாகுல மாதா கெபி

திருவிழா : ஏப்ரல் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள்.

வணக்க மாதம் : மார்ச் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை.

சமபந்தி நாள்: மே 1-ம் தேதி.

அசன சாப்பாடு: குருத்தோலை திருவிழா அன்று.

வழித்தடம் :
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து 38-A,B,C ( பீச் ரோடு to ஈத்தாமொழி செல்லும் வழி )Bus stop பெயர் மறவன்குடியிருப்பு Jn.

வரலாறு :

இவ்வாலயமானது 1942 ல் உருவானது ஏறத்தாழ 77 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

திரு பாப்பு தேவசகாயம் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளவிளை அருகில் உள்ள வட்டக்கரை என்ற சிறு கிராமத்திலிருந்து இங்கு வந்து குடிபுகுந்தார். அதனால் அவரை இப்பகுதியினர் வட்டக்கரை நாடார் என்று அழைத்து வந்தனர். காலப்போக்கில் இவ்வூருக்கு வட்டக்கரை எனப் பெயர் வழங்கலாயிற்று.

திரு பாப்பு அவர்கள் முடுதமாக இருந்த போது தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பருக்கு சிறு ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் இவ்வாலயம் விரிவு படுத்தப்பட்டு மேல ஆசாரிப்பள்ளம் பங்குடன் இணைக்கப்பட்டது.

பின்னர் குருசடி பங்குடன் இணைக்கப்பட்டது.

வட்டக்கரையில் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே ஆலயம் மூன்றாம் முறையாக விரிவு படுத்தப்பட்டது.

அக்காலத்தில் போதிய குருக்கள் இல்லாத காரணத்தால் இவ்வாலயத்தில் திருப்பலி நிறைவேற்றப் படாமலே இருந்தது.

மேதகு ரோச் ஆஞ்ஞிசாமி சாமி ஆண்டகை அவர்கள் கோட்டாறு ஆயராக 1934-ல் ஆனபின்னர் இறையழைத்தல் பெருகியது. குருக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1940 -ல் அருட்தந்தை ரிச்சர்ட் ரொசாரியோ குருசடி பங்குத்தந்தையானார்கள். அதன் பயனாக 1943 ஆம் ஆண்டு, புனித சூசையப்பரின் நாளான மார்ச் 19 -ம் தேதி வட்டக்கரையில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு ஞாயிறு, கிறிஸ்துமஸ், இறப்பு, சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

காலஞ்சென்ற மேதகு வேலூர் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோணிமுத்து ஆண்டகை அவர்கள் குருசடி பங்குத்தந்தையாக இருந்து போது, வட்டக்கரை பங்கின் வெள்ளிவிழா 1968 ல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அருட்தந்தை ஜோசப் ராஜ் காலத்தில் 08-03-1992 ல் புதிய ஆலயத்திற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.

26-06-1992 ல் அருட்தந்தை வின்சென்ட் அடிகளார் காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 23-10-1993 அன்று மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அர்ச்சிப்பு விழாவுடன் வட்டக்கரை ஆலய பொன்விழாவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

2006 ல் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

முதல் பங்குத்தந்தை அருட்பணி ஆன்றனி அவர்கள்.

சிறப்புத் திட்டங்கள் :

ஆயர் லியோன் தர்மராஜ் மருத்துவ உதவித் திட்டம்
அருட்தந்தை மரியதாசன் ஏழைகள் கல்வி உதவி திட்டம்.
புனித சூசையப்பர் ஏழை குடும்பங்களை காக்கும் திட்டம்.
புனித மரியாள் பெரியோர்களை பராமரிப்பு திட்டம்.

பவள விழா 29.12.2017 ல் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனிச் சிறப்பு :
ஆலயத்தின் உள்ளே சூசையப்பர் கையில் குழந்தை இயேசு வலது கையில் இருப்பார்.

மண்ணின் மைந்தர்கள் :

அருட்தந்தை M.S.அருள் (Late)
அருட்தந்தை ஜேசுரெத்தினம் (Late)
அருட்தந்தை L. மரிய ஆன்றனி கெர்மன்

மற்றும் 5 -க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளையும் இறைப்பணிக்காக தந்துள்ளது வட்டக்கரை இறைசமூகம்.