879 தூய நற்கருணைநாதர் திருத்தலம், காட்பாடி

          

தூய நற்கருணைநாதர் திருத்தலம்

இடம்: காட்பாடி, காட்பாடி அஞ்சல், 632007

மாவட்டம்: வேலூர்

மறைமாவட்டம்: வேலூர்

மறைவட்டம்: வேலூர்

நிலை: திருத்தலம்

கிளைப்பங்கு: தூய லூர்து அன்னை ஆலயம், சேவூர்

பங்குத்தந்தை அருட்பணி. M. மார்ட்டின்

குடும்பங்கள்: 216 (கிளைப்பங்கு சேர்த்து)

அன்பியங்கள்: 12 (கிளைப்பங்கு சேர்த்து)

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

திங்கள், புதன், வியாழன் திருப்பலி காலை 06:30 மணி

செவ்வாய், சனி மாலை 06:00 மணி செபமாலை, திருப்பலி 

வெள்ளி மாலை 06:00 மணி நற்கருணை ஆராதனை, திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:00 மணி ஜெபமாலை, திருப்பலி, ஒரு மணி நேர ஆராதனை

முதல் சனி மாலை 06:00 மணி ஜெபமாலை, தேர்பவனி, தொடர்ந்து திருப்பலி (தூய லூர்து மாதா கெபியில்)

திருவிழா: ஜூன் மாதத்தில் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா தினத்தை மையமாகக் கொண்டு நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ராஜ் மைக்கேல், SDB

2. அருட்பணி. ஜான் விண்ணரசு, SDB

3. அருட்சகோதரி.‌ A. மேரி ஜான் (ரோஸ்லின்), St. Clare Adoration Monastery

வழித்தடம்: 

இரயில்: காட்பாடி இரயில் நிலையத்திற்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வேலூர் டவுன் பேருந்தில் பயணித்து, குடியாத்தம் ரோடு நிறுத்தம். இங்கிருந்து பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள சாலையில், உள்ளே சென்றால் இவ்வாலயத்தை அடையலாம்.

Location map: https://g.co/kgs/1uNft4

வரலாறு:

தாய்ப்பங்கான கிறிஸ்டியான்பேட்டை -யிலிருந்து, காட்பாடி திருக்குடும்ப ஆலயமானது 15.07.1964 அன்று பங்குத்தளமாக ஆனது. சேவூர் இதன் கிளைப்பங்காக சேர்க்கப்பட்டது. 

1964 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பை மாநகரில், திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் (புனித ஆறாம் சின்னப்பர்) அவர்களால், 38-வது நற்கருணை மாநாடாக நடத்தப்பட்டது.

மேதகு ஆயர் தாவீது மரியநாயகம், SDB அவர்களால் 08.12.1966 அன்று "வேலூர் மறைமாவட்ட நற்கருணை மாநாடு" சிறப்பாக நடத்தப்பெற்றது. அதன் நினைவாக நற்கருணை ஆலயம் கட்டப்பட மறைமாவட்ட வழிபாட்டு மகாசபை முடிவு செய்து, காட்பாடியைத் தேர்ந்தெடுத்து, மறைமாவட்ட நற்கருணை மாநாட்டின் நினைவுச் சின்னமாக, மறைமாவட்ட வழிபாட்டு மகாசபை பொறுப்பில் 08.12.1966 அன்று ஆலயம் கட்டும்பணி தொடங்கப்பட்டது. இந்த ஆலயத்தை பேரருட் பெருந்தகை ஜோசப் கேப்ரியான் அவர்களால் 08.12.1967 அன்று ஆசீர்வதிக்கப்பட்டு, 24.03.1969 அன்று புனிதப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

ஆலய கட்டுமானப் பணிகள் கிறிஸ்டியான்பேட்டை பங்குத்தந்தை அருட்பணி. Y. I. ஆபிரகாம் அவர்களின் பணிக்காலத்தில் தொடங்கப்பட்டு, அருட்பணி.‌ C. P. ஜோசப் பணிக்காலத்தில் நிறைவுற்றது. 

இந்த ஆலயத்தின் வரைபடம் அருட்பணி. பீட்டர் மகியோன், SDB அவர்களால் வரையப்பட்டு, அருட்பணி. ஆரோக்கிய சாமி, SDB அவர்களால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, வேலூர் மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி. ஜார்ஜ் பயத்தா, SDB அவர்களால் முடிக்கப்பட்டது. 

ஏற்கனவே 1964 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் நாள் திருக்குடும்ப ஆலயம் என்ற பெயரில் வழிபாடு தடந்து கொண்டிருந்த ஆலயத்தை, தூய நற்கருணைநாதர் திருத்தலமாக உயர்த்தினர்.

கல்லறைத்தோட்டம்:

08.04.1975 அன்று கல்லறைத்தோட்டத்தில், கல்லறை சிற்றாலயம் கட்டப்பட்டு மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது. 

தொன்போஸ்கோவின் சலேசிய சபையினர் வழிநடத்தி வந்த காட்பாடி திருத்தலமானது, 1983 ஆம் ஆண்டு முதல் மறைமாவட்ட குருக்களின் வழிகாட்டலில் வந்தது.

1994 ஆம் ஆண்டு அருட்பணி. அந்திரியாஸ் பணிக்காலத்தில் திருத்தலத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.

அருட்பணி. குரியாகோஸ் காரிக்காட் பணிக்காலத்தில் ஆராதனை சிற்றாலயம் கட்டப்பட்டு, அதனுள் புனித அல்போன்சாவின் புனித திருப்பண்டம் வைக்கப்பட்டது.

பொன்விழா:

அருட்பணி. மார்ட்டின் அவர்களின் வழிகாட்டலில் திருத்தலம் புதுப்பிக்கப்பட்டது. 

பொன்விழா கொண்டாட்டங்கள் 11.01.2019 முதல் 20.01.2019 வரை சிறப்பாக கொண்டாடப் பட்டது. 

11.01.2019 அன்று கொடிமரமானது சென்னை மயிலை முன்னாள் பேராயர்A. M. சின்னப்பா அவர்களால் கொடிமரம் அர்ச்சிக்கப்பட்டது.

ஆலய வெளிப்புறம் சிலுவைப் பாதை நிலைகள் வைக்கப்பட்டு, 18.01.2019 அன்று சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு சிங்கராயர் அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

திருத்தல கோபுரம் நிறுவப்பட்டு அதன் உச்சியில் நற்கருணை கதிர்பாத்திரம் அமைக்கப்பட்டு,  19.01.2019 அன்று மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

திருத்தல பொன்விழா நினைவாக ஆலயமானது விரிவாக்கம் செய்யப்பட்டு மற்றும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, 20.01.2019 அன்று மேதகு ஆயர் சௌந்தரராஜூ அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டு, பொன்விழா கொண்டாடப் பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. புனித செசிலியா பாடற்குழு

4. மறைக்கல்வி

5. இளையோர் சங்கம்

6. பீடச்சிறுவர்கள்

அருட்சகோதரிகள் இல்லங்கள்:

1. கொன்சாகா சபை 

2. குளூனி சபை

பங்கில் உள்ள கெபிகள்:

1. தூய லூர்து மாதா கெபி

2. புனித ஜான் மரிய வியான்னி கெபி

3. புனித தேவசகாயம் கெபி

திருத்தலத்தில் பணிபுரிந்த பங்குப் பணியாளர்கள் பட்டியல்:

1. அருட்பணி. Y. I. ஆபிரகாம் (1964-1966)

2. அருட்பணி.‌ C. P. ஜோசப், SDB (1966-1970)

3. அருட்பணி. A. அந்தோணிசாமி, SDB (1970-1971)

4. அருட்பணி. N. பகவந்தம் ராஜூ, SDB (1971-1972)

5. அருட்பணி.‌ A. J. ஜோசப், SDB (1972-1976)

6. அருட்பணி. C. C. ஜார்ஜ், SDB (1976-1977)

7. அருட்பணி. K. C. ஜார்ஜ், SDB (1977-1978)

8. அருட்பணி. சாந்தோ டி விதா, SDB (1978-1983)

9. அருட்பணி. P. சேவியர் (1983-1986)

10. அருட்பணி. A. அமிர்தநாதன் (1986-1991)

11. அருட்பணி. அந்திரியாஸ் பத்தி (1991-1995)

12. அருட்பணி. D. பன்னீர்செல்வம் (1995-1997)

13. அருட்பணி. V. C. ஜோசப் (1997-2004)

14. அருட்பணி. குரியாகோஸ் காரிக்காட் (2004-2011)

15. அருட்பணி. இயேசு ஜெயபாலன் (2011-2014)

16. அருட்பணி. M. மார்ட்டின் (2014---)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் அவர்களின் வழிகாட்டலில் இன்னாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள்.

திருத்தல வரலாறு: திருத்தல பொன்விழா நினைவு மலர் 2019.