363 சகாய அன்னை ஆலயம், நந்தி வேடந்தாங்கல்


சகாய அன்னை ஆலயம்.

இடம் : நந்தி வேடந்தாங்கல்

மாவட்டம் : வேலூர்
மறை மாவட்டம் : வேலூர்
மறை வட்டம் : அரக்கோணம்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சவேரியார் ஆலயம், சோகனூர்

பங்குத்தந்தை : அருட்பணி A. தேவசகாயம் B.A B.L

குடும்பங்கள் : 45
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : மாலை 06.00 மணிக்கு.

ஒவ்வொரு மாதமும் 24 ம் தேதி மாலையில் சகாய அன்னையின் செபமாலை, தேர்பவனி, திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை வழிபாடு மற்றும் இரவு உணவும் வழங்கப்படுகிறது.

திருவிழா : மே 1 ம் தேதி கொடியேற்றப்பட்டு மே 24 -ம் தேதி மாலையில் திருவிழா திருப்பலி, தேர்பவனி. இதற்கு இடைப்பட்ட நாட்களில் தினமும் மாலையில் செபமாலை, அன்னையின் நவநாள் நடைபெறும்.

மண்ணின் மைந்தர்கள் :
Rev.Fr.M.I.Raj SSS
Rev. Sis. Kalphana

வழித்தடம் : திருத்தணி - குருவராஜ்பேட்டை- நந்தி வேடந்தாங்கல். 7 கி.மீ.

வரலாறு :

நந்தி வேடந்தாங்கல் என்கிற அழகிய இயற்கை எழில் சூழ்ந்த கிராமமானது KG கண்டிகை பங்கின் ஒரு பகுதியாக விளங்கியது. 14-11-1951 அன்று KG கண்டிகை பங்கில் வைத்து அருட்தந்தை பரம்பெட் அவர்களால் நந்தி வேடந்தாங்கல் கிராமத்தின் 21 நபர்களுக்கு திருமுழுக்கு வழங்கப்பட்டு இங்கு ஒரு ஓலைக்குடில் ஆலயம் கட்டப்பட்டது.

சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்தின் இருந்து வேலூர் மறை மாவட்டம் உருவானபோது அரக்கோணம் பங்கின் கிளையாக நந்தி வேடந்தாங்கல் செயல்பட்டு வந்தது.

அருட்தந்தை பரம்பெட் அவர்களின் அயராத முயற்சிகளின் பயனாக பழைய ஓலைக் கொட்டகை ஆலயம் மாற்றப்பட்டு 1973 ல் புதிய ஆலயம் கட்டப்பட்டு, வேலூர் மறை மாவட்ட ஆயர் மேதகு தாவீது மரியநாயகம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

சோகனூர் பங்கு உருவானபோது அதன் கிளைப்பங்காக இணைந்தது.

மிகவும் ஏழ்மையான குடும்பங்களாக இருந்தாலும் குருக்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டு விளங்கும் இம்மக்கள் ஆலய திருவழிபாட்டு நிகழ்வுகளில் பக்தியுடன் பங்கேற்பது சிறப்பு.

மேலும் இளையோர்கள் தூய சகாய அன்னை இளையோர் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்து ஆலய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தூய தொமினிக்கன் சபை அருட்சகோதரிகள் நந்தி வேடந்தாங்கல் கிராமத்தின் மீது மிகுந்த அக்கறை காட்டி பணிபுரிந்து வருகிறார்கள்.

70 ஆண்டுகள் பழமையான இந்த மண்சுவரால் கட்டப்பட்டு, ஓட்டுக்கூரையாலான இவ்வாலயம், தற்போது சுவர்கள் விரிசல் அடைந்தும், ஓடுகள் உடைந்து மழையில் ஒழுகும் நிலையில் திருப்பலி நிறைவேற்ற இயலாமலும், பாதுகாப்பற்று மக்கள் செபிக்க இயலாத வகையில் மிகுந்த பாதிப்படைந்துள்ளது.

ஆகவே புதிய ஆலயம் கட்ட இறைவனிடம் அருளுதவியும், நிதியுதவியும் வேண்டி நாள்தோறும் கண்ணீருடன் செபித்து வருகின்றனர்.

உதவும் நல்லுள்ளம் கொண்டோர் பங்குத்தந்தையை தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண் : 9566418855 Email : a.devasagayam37@gmail.com

நல்லுள்ளம் கொண்ட நல்ல உள்ளங்கள் இவ்வாலயத்திற்கு உதவிட பணிவாய் கேட்கின்றோம்..!