இயேசு மரி திரு இருதய ஆலயம்
இடம் : பாலவிளை, நட்டாலம்.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், முள்ளங்கினாவிளை.
குடும்பங்கள் : 260
அன்பியங்கள் : 7
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி கில்பர்ட் லிங்சன்.
திருவிழா : மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள்.
வரலாறு :
கிபி 1970 -1972 ம் ஆண்டுகளில் நட்டாலத்தில் பாலவிளை என்றழைக்கப்படும் இடத்தில் 25 சென்ட் நிலத்தை அன்றைய பங்குத்தந்தை டையனோசியஸ் அடிகளாரால் வாங்கப்பட்டு, புது ஆலயம் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து சிறப்பாக நடந்தது.
கட்டுமான வேலைகளுக்கு கூலியாக கோதுமையே வழங்கப் பட்டு வந்தது. பலர் கூலி ஏதும் பெற்றுக் கொள்ளாமலும் வேலைகளை செய்து கொடுத்தனர்.
ஆலயத்திற்காக நட்டாலம் - இலவுவிளை சாலை புதிதாக அமைக்கப் பட்டது முக்கியமானது.
இவ்வாறு இனிதே நிறைவு பெற்று அர்ச்சிக்கப்பட்ட இவ் ஆலயமானது 1972 ம் ஆண்டு முதல் இயேசு மரி திரு இருதய ஆலயம் என்ற பெயரில் கிளைப் பங்காக செயல்படத் துவங்கியது.
1997 ம் ஆண்டு இயேசு மரி திரு இருதய ஆலய 25ம் ஆண்டு விழாவை சிறப்பாககொண்டாடியதுடன் ஆலயத்தை அடுத்துள்ள 18 சென்ட் நிலம் வாங்கப்பட்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி ஜார்ஜ் அடிகளார் முயற்சியில் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் சிறந்த கலையரங்கம் மற்றும் குடிநீர் தேவைக்காக கிணறும் வெட்டப்பட்டது.
இப்பங்கின் எல்லைக்குட்பட்ட மருதங்குளங்கரை என்ற இடத்தில் பிறந்தவரான இந்தியாவின் முதல் மறைசாட்சியான அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் பிறப்பிடத்தில் அவரது நினைவு குருசடி அன்றைய பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் அடிகளாரின் முயற்சியால் கட்டப் பட்டது.
அன்பியங்கள், பல்வேறு இயங்கங்கள் சங்கங்கள், சபைகள் சிறப்பாக செயல் பட்டு வருவதுடன், தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி கில்பர்ட் லிங்சன் அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்தி இறை பணி செய்து வருகின்றார்.