665 புனித செபஸ்தியார் ஆலயம் ஆண்டிப்பட்டி

     

புனித செபஸ்தியார் ஆலயம்

இடம் : ஆண்டிப்பட்டி, சூரமங்கலம் அஞ்சல்  

மாவட்டம்  : சேலம் 

மறைமாவட்டம் : சேலம் 

மறைவட்டம் : சேலம் 

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்கு : புனித செபமாலை அன்னை ஆலயம், இளம்பிள்ளை

பங்குத்தந்தை : அருட்பணி. ம. கிறிஸ்து ராஜா

குடும்பங்கள் : 50 

அன்பியங்கள்:  04 

வழிபாட்டு நேரங்கள்:  

ஞாயிறு : காலை –7:00 மணி (கிளைப்பங்கு இளம்பிள்ளை)

காலை – 8:30 மணி : (ஆண்டிப்பட்டி பங்கு)

நாள்தோறும் திருப்பலி காலை 06:30 மணி

திருவிழா : ஜனவரி 20 ம் தேதி (7 நவநாட்கள்)

வழித்தடம் : https://g.co/kgs/GeQQgB

ஆலய வரலாறு:

சேலம் மறைமாவட்டத்தில் ஆண்டிப்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலய வரலாற்றைக் காண்போம்....

ஆண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள இறைமக்கள் சூரமங்கலம் பங்கு ஆலயத்திற்கு சுமார் 5 கிலோ மீட்டர் கால்நடையாக நடந்து வந்து ஞாயிறுத் திருப்பலி மற்றும் திருவிழாக்களில் பங்கேற்று வந்தார்கள். ஆகவே இவர்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக அருட்திரு. அமல்ராஜ் அடிகள் ஆண்டிப்பட்டி கிராமத்தில் ஆலயம் கட்ட நிலம் வாங்கினார். 

1995 – ஆம் ஆண்டு அருட்திரு. அ. செபஸ்டியான் அடிகள் அந்த நிலத்தில் ஒரு சிற்றாலயம் கட்டி, அதற்கு புனித செபஸ்தியார் ஆலயம் எனப் பெயர் சூட்டினார். பின்னர் ஆயரின் அனுமதி பெற்று ஆலயத்தை, சூரமங்கலம் பங்கின் கிளைப்பங்காக அறிவித்தார். 2005-ஆம் ஆண்டில் 27 குடும்பங்கள் அங்கு இருந்தன.

11-11-2011 ஆம் நாள் அருட்திரு. அந்தோணி மரிய ஜோசப், சூரமங்கலம் பங்குத்தந்தையாக இருந்த போது, சேலத்தாம்பட்டி மெயின் ரோட்டில் பூ நிலா நகரில் ஆலயம் கட்ட புதிய நிலம்  வாங்கப்பட்ட்து.

புதிய ஆலயம் கட்டப்பட்டு 2013 ஆம் ஆண்டு மே மாதம் மேதகு ஆயர். செ. சிங்கராயன் அவர்கள் புனிதப்படுத்தி, இச்சிற்றாலயத்தை நிர்வகிக்க அருட்திரு. ஆரோக்கியசாமி அவர்களை நியமித்தார்.

20.05.2015 ஆம் நாள் மேதகு ஆயர் சிங்கராயன் அவர்கள் சூரமங்கலம் பங்கில் இருந்து ஆண்டிப்பட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தை பிரித்து,  தனிப்பங்காகத் தரம் உயர்த்தி, முதல் பங்குத்தந்தையாக அருட்திரு. ஆரோக்கியசாமி அவர்களை நியமித்தார். 

தற்போது 50 குடும்பங்கள் இப்பங்கில் உள்ளன. கிழக்கு – மேற்காக கந்தம்பட்டி நெடுஞ்சாலையிலிருந்து, சிவதாபுரம் முதல் இளம்பிள்ளை வரை உள்ள கிராமங்கள். 

தற்போது அருட்திரு. ம. கிறிஸ்து ராஜா அவர்கள் பங்குத்தந்தையாக பணியாற்றி வருகிறார். ஆலய உட்புறம் பீடப் பின்னணி மற்றும் ஆலய உட்புறம் வர்ணம் பூசி புதுப்பிக்கப் பட்டுள்ளது. ஆலய வெளிப்புறம் சிமெண்ட் கற்களால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

33 அடி உயர கொடிக்கம்பம்:

இயேசுவின் தனி வாழ்வு 30 ஆண்டுகளை குறிக்கும் 30 அடி கொடிக்கம்பமும், அதன் மேல் இயேசு பணி வாழ்வைக்  குறிக்கும் 3 அடி சிலுவையும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

கிளைப்பங்கு – இளம்பிள்ளை:

இளம்பிள்ளை கிளைப்பங்கானது செவ்வைநகர் தூய ஜெயராக்கினி அன்னை இணைப்பேராலயத்தின் கிளைப் பங்காக விளங்கியது. ஆலயம் அமைந்துள்ள இந்த இடம் 2006 ல் பங்குத்தந்தை அருட்பணி. மரிய சூசை அவரது முயற்சியால் வாங்கப் பட்டது. இங்கு தற்போது உள்ள சிற்றாலயம் 14.01.2014 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் புனித படுத்தப்பட்டது. தற்போது உள்ள தூய செபமாலை அன்னை சிற்றாலயம் பங்குத்தந்தை அருட்பணி. லூர்து சாமி அவர்களின் முயற்சியால் உருவானது.

ஆண்டிப்பட்டி தனிப்பங்கான போது இளம்பிள்ளை அதன் கிளைப்பங்காக ஆனது.

தற்போது 10 கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. ஞாயிறு காலை 07:00 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. 

பங்கின் சபைகள் இயக்கங்கள்:

1. மரியாயின் சேனை

2. பீடப்பூக்கள்

3. பாடகற் குழு

பங்கில் உள்ள நிறுவனம்:  

Franciscan Sister of Aloysius Gonzaga (கொன்சாகா கன்னியார் இல்லம்) 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர் பட்டியல்: 

1. அருட்திரு. எஸ். ஆரோக்கியசாமி  (2013 ஜூன் (2015 - 2017 மே வரை)

2. அருட்திரு. அ. ஜோதி பெர்னாண்டோ (2017 ஜூன்- 2018 மே வரை )

3. அருட்திரு. ம. கிறிஸ்து ராஜா (2018 ஜூன் முதல் தற்போது வரை...)  

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்திரு. ம. கிறிஸ்து ராஜா