452 புனித சந்தியாகப்பர் ஆலயம், செம்பட்டி


புனித சந்தியாகப்பர் ஆலயம்

இடம் : செம்பட்டி

மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : திண்டுக்கல்
மறை வட்டம் : N. பஞ்சம்பட்டி

நிலை : சிற்றாலயம்
பங்கு : ஆரோக்கிய மாதா ஆலயம், செம்பட்டி

பங்குத்தந்தை : அருட்பணி. போஸ்கோ

செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : சித்திரை மாதத்தில் புனித சந்தியாகப்பர் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறும். (ஏப்ரல் மாதத்தில்).

வழித்தடம் : நாகர்கோவில் -பழனி -கோயம்புத்தூர் செல்லும் சாலையில் செம்பட்டி 4 சாலை சந்திக்கும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.


வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமமான செம்பட்டியில், கி.பி 1890 காலகட்டத்தில் ஒரு ஓலைக் கொட்டகை ஆலயம் கட்டப்பட்டு வழிபட்டு வந்தனர். கி.பி 1920 ஆம் ஆண்டு திரு. சவரிமுத்து பிள்ளை அவர்களால் தற்போது காணப்படும் கலை நுட்பத்துடன் கூடிய அழகிய ஆலயம் கட்டப்பட்டது.

இவ்வாலயம் மற்றும் மேட்டுப்பட்டி ஆலயத்திலும் உள்ள இயேசுவின் பாடுபட்ட சுரூபமானது மரத்தில், அக்காலத்தில் திரு. அருமை அவர்களால் செய்யப் பட்டதாகும்.

2020 ஆம் ஆண்டு இவ்வாலயம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனது குறிப்பிடத் தக்கது.

தகவல்கள் : ஆலய பொறுப்பாளர்.