652 புனித அந்தோனியார் ஆலயம் சு. பாப்பம்பாடி

   

புனித அந்தோனியார் ஆலயம்

இடம் : சு. பாப்பம்பாடி 

மாவட்டம் : திருவண்ணாமலை 

மறைமாவட்டம் : வேலூர் 

மறைவட்டம் : திருவண்ணாமலை 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய சகாய மாதா ஆலயம், பவித்ரம் 

பங்குத்தந்தை : அருள்பணி. A. C. சவரிமுத்து

உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. V. சேகர் 

குடும்பங்கள் : 195

அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி காலை 08.00 மணி

செவ்வாய் மாலை 07.30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி 

திருவிழா : ஜூன் 13 -ம் தேதி கொடியேற்றம், 20 -ம் தேதி திருவிழா. 

மண்ணின் இறையழைத்தல்:

அருள்சகோதரி. சாலினி

வழித்தடம் : பவித்ரம் ஊருக்கு தெற்கே ஒன்றரை கி.மீ தொலைவில் சு. பாப்பம்பட்டி அமைந்துள்ளது. 

Location map : 

Su. Pappambadi Tamil Nadu 606808

https://maps.app.goo.gl/rPQoFusagd6eCc1P8

வரலாறு :

பாப்பம்பாடியில் கி.பி 1958 காலகட்டத்தில் ஓலைக்குடிசை ஆலயம் கட்டப்பட்டு, அல்லிகொண்டாபட்டு பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 

1971 ஆம் ஆண்டில் பவித்ரம் தூய சகாய மாதா ஆலயமானது தனிப்பங்கான போது, சு. பாப்பம்பாடி அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. 

பழைய ஆலயம் பழுதடைந்த காரணத்தால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 02.12.1980 அன்று மறைவட்ட முதல்வர் பேரருள்பணி. S. T. இக்னேஷியஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் ஆலய பொறுப்பாளர்.