354 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தவசிமடை

    
ஆரோக்கிய அன்னை ஆலயம்.

இடம் : தவசிமடை

மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : திண்டுக்கல்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி இ. ஜான்சன் எடின்பரோ

திருப்பலி நேரங்கள் :

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி : காலை 07.30 மணிக்கு

வார நாட்கள் திருப்பலி : காலை 05.30மணிக்கு,

சனிக்கிழமை திருப்பலி : மாலை 07.00 மணிக்கு.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருப்பலி : மாலை 06.30 மணிக்கு.

குடும்பங்கள் : 680
அன்பியங்கள் : 10

திருவிழா :

செப்டம்பர் மாதத்தில் புனித ஆரோக்கிய அன்னை திருவிழா மூன்று நாட்கள்.

பிப்ரவரி மாதத்தில் புனித வனத்து அந்தோனியார் திருவிழா 3 நாட்கள் நடைபெறும் மற்றும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

வழித்தடம் :

திண்டுக்கல் To நத்தம் செல்கின்றனர் அனைத்து எண் 1 பேருந்துகளும். இறங்குமிடம் விராலிப்பட்டி.

மற்றும் திண்டுக்கலில் இருந்து காலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து வீதம் தவசிமடைக்கு பேருந்து வசதி உண்டு.

வரலாறு :

கொசவபட்டி பங்கிலிருந்து பிரிந்து 1963 ஆம் ஆண்டு தவசிமேடை தனிப்பங்காக உருமாறியது. தற்போது 56 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது பழைய ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாததால் ஆலயத்தை விரிவாக்கம் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் பங்குத்தந்தை அருட்பணி இ. ஜான்சன் எடின்பரோ அவர்களின் வழிகாட்டுதலில் நடந்து வருகின்றன.

குறிப்பாக ஆலய ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையை மாற்றிவிட்டு கான்கிரீட் போடுவது, ஆலய பின்புறத்தில் நீளம் அதிகரிப்பது, முன்புற கோபுரங்களை கலை நயத்துடன் புதிதாக அமைப்பது ஆகிய பணிகள் பங்கு மக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடந்து வருகின்றன.