549 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம், மார்த்தாண்டம்துறை

 
 

புனித சூசையப்பர் ஆலயம் 

இடம் : சூசைபுரம், மார்த்தாண்டம்துறை 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம் 

மறைவட்டம் : தூத்தூர்.

நிலை : சிற்றாலயம் 

பங்கு : புனித வியாகுல மாதா ஆலயம், மார்த்தாண்டம் துறை. 

பங்குத்தந்தை : அருள்பணி. அசிசி ஜோண் சுமேஷ் 

ஞாயிறு காலை 08.00 மணிக்கு திருப்பலி.

புதன் மாலை 06.00 மணிக்கு திருப்பலி. 

திருவிழா : மே 1 ஆம் தேதி நிறைவடைகிற வகையில் மூன்று நாட்கள்.

வழித்தடம் :

நாகர்கோவில் -மார்த்தாண்டம் -களியக்காவிளை -கொல்லங்கோடு 

மார்த்தாண்டம்துறை சூசைபுரம். 

பேருந்துகள் : மார்த்தாண்டம் to bus no : 82, 82A, 82B, 82C, 82K, 82F, 82G, 83C, PCG.

நாகர்கோவில் to bus no : 382, 382A, 382M, 

மணக்குடி, சின்னமுட்டம் to 302, 

கருங்கல் to 383.


வரலாறு :

அழகிய கடற்கரை ஊராகிய மார்த்தாண்டம்துறை -யில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, 1989 -ஆம் ஆண்டு அரசின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் கிடைத்த 133 வீடுளோடு சேர்த்து, 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலிங்கராஜபுரம் தரிசு நிலத்தில் குடியமர்த்தப் பட்டு, 1991 -ஆம் ஆண்டு திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டத்தின் பேராயர் சூசை பாக்கியம் அவர்களால் ஆசீர்வதிக்கப் பட்டது. 

குடியமர்த்தப் பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கிணங்க அருள்தந்தை. ஜோண் டி போஸ்கோ அவர்களின் தீவிர முயற்சியால், இத்தாலியிலுள்ள நல்லுள்ளங்களின் உதவி மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டப்பட்டு 20.03.1997 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

ஆலயம் அமைந்துள்ள இடமானது, இம் மண்ணின் மைந்தரான திருவனந்தபுரம் உயர் மறை மாவட்ட ஆயர் மேதகு சூசை பாக்கியம் அவர்களின் நினைவாகவும்,  பாதுகாவலர் புனித சூசையப்பர் நினைவாகவும் "சூசைபுரம்" என பெயர் சூட்டப்பட்டது.

சூசைபுரம் ஆலயத்தில் நடைபெறும் சமபந்தி (அன்புவிருந்து) விருந்தில் சாதி சமய வேறுபாடின்றி அனைத்து மக்களும் பங்கேற்பது தனிச்சிறப்பு.

வரலாறு : பங்கு ஆலய குடும்ப கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.