இடம் : புன்னைக்காயல்
மாவட்டம் : தூத்துக்குடி
மறைமாவட்டம் : தூத்துக்குடி
மறைவட்டம் : தூத்துக்குடி
பங்கு ஆலயம் : புனித சவேரியார் ஆலயம், புன்னைக்காயல்
பங்குத்தந்தை : அருள்திரு. பிராங்க்ளின் பர்னாந்து
உதவிப் பங்குத்தந்தை : அருள்திரு. ஷிபாகர்
மாதத்தின் முதல் வெள்ளி காலை 08.00 மணிக்கு திருப்பலி.
திருவிழா : ஜுலை மாதம் முதல் வெள்ளி கொடியேற்றம், 2-ம் ஞாயிறு திருவிழா
வழித்தடம் :
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழி, வடக்கு ஆத்தூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள தீவு புன்னைக்காயல்.
அங்ருந்து ஆறு ஆறுகளைக் கடந்து அமைத்துள்ள புனித தோமையார் ஆலயத்திற்கு படகில் அல்லது நடந்தும் செல்லலாம்.
தண்ணீர் குறைவாக உள்ள நேரங்களில் மட்டுமே நடந்து செல்ல வேண்டும்.
Location map : https://goo.gl/maps/HnjWyatxS18pERM68
வரலாறு :
புன்னைக்காயல் ஊரிலிருந்து சற்று தொலைவில் வடதிசையில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் புனித தோமையார் ஆலயம் கட்டப் பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த மரிய சிந்தாத்திரை தொம்மாசியாள் என்னும் பெண்மணி வழங்கிய பொருளுதவியைக் கொண்டு இவ்வாலயம் 1912 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக, அருள்திரு. வெனான்சியுஸ் பர்னாந்து அடிகள் எழுதியுள்ளார். பின்பு இவ்வாலயத்தை அருள்திரு. ஜோசப் மாஸ்கரனாஸ் அடிகள் (1998-2001) முன்புறத்தில் விரிவுபடுத்தி அழகு படுத்தினார்.
இன்றும் புன்னைக்காயலிலிருந்து புனித தோமையார் ஆலயம் செல்ல வேண்டுமென்றால், தாமிரபரணி ஆற்றின் கிளைகளாகிய பல ஆறுகளைக் கடந்து தான் செல்ல வேண்டும்.
தங்களின் பல வேண்டுதல்களுக்காக மக்கள் இங்கு தபசுக்காக (தியானிக்க) போவது உண்டு. அவர்கள் அங்கு சில நாட்களுக்கு தங்குவதுமுண்டு.
இவ்வாறு தங்கியிருக்கும் மக்களுக்காக சிறு சிறு குடில்கள் சதைக்கற்களால் கட்டப் பட்டது. பகல் நேரங்களில் உணவு சமைக்கவும், தங்குவதற்கும் இதனை பயன்படுத்திக் கொள்வார்கள். இரவு நேரங்களில் புனித தோமையார் ஆலயத்தில் படுத்து தூங்குவார்கள். இப்போது மேலும் பல குடில்கள் கட்டப்பட்டுள்ளன. கணக்குப்பிள்ளை ஒருவர் இங்கு தங்கி ஆலயத்தில் நிகழும் செபம் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளை கவனித்து வருவார்.
வரலாறு : அருள்திரு. வெனான்சியுஸ் அடிகள் எழுதிய புகழ் வென்ற புன்னைக்காயல் மற்றும் அருள்திரு. அமுதன் அடிகள் எழுதிய வரலாற்றில் புன்னைக்காயல் ஆகிய நூல்கள்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் பங்கு உறுப்பினர்.