518 தூய திரு இருதய ஆண்டவர் ஆலயம், செந்தாரப்பட்டி

    

தூய திரு இருதய ஆண்டவர் ஆலயம்
இடம் : செந்தாரப்பட்டி, செந்தாரப்பட்டி அஞ்சல், கெங்கவல்லி வட்டம், 636110.

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : ஆத்தூர்

நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருட்பணி. பாஸ்கல் செல்வநாதன் (CSC)

குடும்பங்கள் : 400
அன்பியங்கள் : 10

திருவழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு காலை 08.30 மணிக்கு திருப்பலி.
திங்கள் முதல் சனி வரை : காலை 06.30 மணிக்கு திருப்பலி.
மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை.
மாதத்தின் முதல் சனி : மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி.

திருவிழா : மே மாதம் மூன்றாம் வாரம்.

மண்ணின் மைந்தர்கள் : 

1. அருட்பணி. சகாயராஜ்
2. அருட்பணி. கிரகோரி ராஜன்
3. அருட்பணி. ஜெயசீலன்
4. அருட்பணி. இராபர்ட், MSFS
5. அருட்பணி. சாமுவேல், MSFS
6. அருட்பணி. அமல்ராஜ்
7. அருட்பணி. ஹென்றி கிஷோர்

1. அருட்சகோதரி. அல்போன்ஸ் மேரி (கொன்சாகோ)
2. அருட்சகோதரி. தீபா (கொன்சாகோ)
3. அருட்சகோதரி. இம்மாகுலேட் (FMM)
4. அருட்சகோதரி. அனிதா (DMI)
5. அருட்சகோதரி. இருதய ராணி

வழித்தடம் : சேலம்- தம்மம்பட்டி- செந்தாரப்பட்டி.

Location map : Sacred Heart Church Tamil Nadu 636110
https://maps.google.com/?cid=4923459217077770610

ஆலய வரலாறு:

கி.பி 1717 ஆம் ஆண்டில் பாரிஸ் மறைபோதக சபைக் குருக்கள், செந்தாரப்பட்டி பகுதியில் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் அரிய முயற்சியால் மக்கள் கிறிஸ்தவ மறையில் இணைந்தனர். 

கி.பி 1852 முதல் செந்தாரப்பட்டி, கோனேரிப்பட்டி பங்கின் கிளைப் பங்காக இருந்து வந்தது. 

அருட்பணி. பலுவோர் அடிகளார் முயற்சியில் செந்தாரப்பட்டி திருஇருதய ஆண்டவர் ஆலயம் 1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 

1925 இம் ஆண்டில் அருட்பணி. லிசோன் அவர்களால் பள்ளிக்கூடம் கட்டப் பட்டது. 

1946 ஆம் ஆண்டில் அருட்பணி. இக்னேஷியஸ் கலத்தில் அவர்களின் முயற்சியால் கூடுதல் பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்பட்டது. 

1965 ஆம் ஆண்டு வரை செந்தாரப்பட்டி பகுதி இறைமக்கள் கோனேரிப்பட்டி பங்கைச் சார்ந்த இறைமக்களாகவே இருந்தனர். 

1965 ஆம் ஆண்டில் அருட்பணி. P. T. ஜோசப் பணிக்காலத்தில் சிலுவைகிரி - செந்தாரப்பட்டி தனிப் பங்குகளாக உயர்த்தப்பட்டன. 

அருட்பணி. சவரி அடிகளார் முயற்சியில் புதிய ஆலயம், சுற்றுச்சுவர், பள்ளிக்கூட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. 

அருட்பணி. சவரி அடிகளாரின் பெரும் முயற்சியால் புதிய ஆலயப் பணிகள் நிறைவு பெற்று அப்போதைய ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் 26.04.1986 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

அருட்பணி. ஞானப்பிரகாசம் அவர்கள்  ஏழைகளுக்கு வீடு கட்டவும், கோதுமை, நிதியுதவிகள் கொடுத்தும், அவர்கள் வாழ்வை வளம்பெறச் செய்தார்.  

அருட்பணி. துரைராஜ் பணிக்காலத்தில் பல மாணவர்களுக்கும் உயர்கல்வி படிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டது. 

அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி அவர்களின் முயற்சியால் 2002 ல் ஆலய மணி வாங்கப்பட்டு, அப்போதைய ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்து திருநிலைப் படுத்தப் பட்டது. மேலும் புனித சூசையப்பர் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது. இளையோர் மற்றும் பெரியவர்களின் முயற்சியால் பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு, புதிய குடிநீர் தொட்டியும் கட்டப் பட்டது. 

அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி அவர்களின் முயற்சியால் குருக்கள் இல்லம் கட்டப்பட்டு, 20.05.2003 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. தொடர்ந்து 2004 ல் குறைந்த கல்விக் கட்டணத்தில் தரமான ஆங்கிலக் கல்வி கொடுப்பதற்காக, புதிய நர்சரி பள்ளி துவக்கப் பட்டது. 

2011 ஆம் ஆண்டு திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் புதுப்பித்தல் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

2012 முதல் 2017 வரை இயேசு சபை குருக்கள் இம்மண்ணில் சிறப்பாக பணி செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய 50 வீடுகள் கட்டியது, புதிய குடிநீர் தொட்டி, புதிய கேட், புதிய வகுப்பறைகள், கழிவறைகள் கட்டப்பட்டது என பல்வேறு சமூகப் பணிகளை செய்ததுடன், ஆன்மீகவழியில் இம்மக்களை சிறப்பாக வழி நடத்தினார்கள்.

2018 ஆம் ஆண்டு முதல் செந்தாரப்பட்டி பங்கு திருச்சிலுவை சபை (CSC) குருக்களுக்கு பணிசெய்ய கொடுக்கப்பட்டது. 

அருட்பணி. பாஸ்கல் செல்வநாதன் CSC அவர்கள், 02.06.2018 பங்குப் பணியாளராக பொறுப்பேற்று, ஆலய பலிபீடத்தை புதுப்பித்தல், பள்ளிக்கூடத்திற்கு பெயிண்ட் அடித்தல், வளாகத்தில் 60 மரங்கள் நடுதல், ஆலயத்திற்காக கடைகளை கட்டுதல் அன்பியங்கள் புதுப்பித்தல், பங்குப் பேரவை புதுப்பித்தல் இளையோர் குழுவை புதுப்பித்தல் என்று பல்வேறு பணிகளை செய்து, ஆன்மீகப் பாதையிலும் வழிநடத்தி வளர்ச்சியின் பாதையில் பயணிக்கிறது செந்தாரப்பட்டி இறை சமூகம்.

பங்கில் உள்ள பக்தசபைகள் : 

1. புனித வின்சென்ட் தே பால் சபை
2. மரியாயின் சேனை
3. பீடச்சிறுவர்கள் இயக்கம்
4. பாடற்குழு
5. பங்குப்பேரவை
6. திரு இருதய ஆண்டவர் இளையோர் குழு.

பங்கின் கல்வி நிறுவனம்:

St. Joseph Elementary school. 

பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:

1. அருட்பணி.  இக்னேஷியஸ் கலத்தில் (1940-1957)
2. அருட்பணி. பால் தாலதட் (1940-1957)
3. அருட்பணி. மத்தேயு கடவில் (1957-1960)
4. அருட்பணி. P. T. ஜோசப் (1960-1974)
5. அருட்பணி. S. சவரி அடிகள் (1974-1984)
6. அருட்பணி. ஞானப்பிரகாசம் (1984-1991)
7. அருட்பணி. லூர்துசாமி (1991-1994)
8. அருட்பணி. துரைராஜ் (1994-2000)
9. அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி (2000-2006)
10. அருட்பணி. ஆரோக்கிய அருள்தாஸ் (2007-2009)
11. அருட்பணி. விக்டர் சுந்தர் ராஜ் (2010-2012)
12. அருட்பணி. குணா, SJ (2012-2013)
13. அருட்பணி. ஜோசப், SJ (2013)
14. அருட்பணி. கிங்ஸ்லி SJ (2014)
15. அருட்பணி. அருள்ராஜ், SJ (2015 மூன்று மாதங்கள்)
16. அருட்பணி. ஜெர்லின், SJ (2015-2017)
17. அருட்பணி. ஜான் ஆரோக்கியராஜ் (2017-2018)
18. அருட்பணி. பாஸ்கல் செல்வநாதன், CSC (2018 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பாஸ்கல் செல்வநாதன் CSC அவர்கள்.