191 தூய ஞானப்பிரகாசியார் ஆலயம், இலவுவிளை


தூய ஞானப்பிரகாசியார் ஆலயம்

இடம் : இலவுவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்

கிளை : புனித சகாய மாதா ஆலயம், சடையன்குழி

பங்குத்தந்தை :அருட்பணி ஆன்றனி ஜெயக்கொடி

குடும்பங்கள் : 510
அன்பியங்கள் : 12

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு

வெள்ளிக்கிழமை : மாலை 06.00 மணிக்கு திருப்பலி
சனிக்கிழமை காலை 06.30 மணிக்கு திருப்பலி

திருவிழா : ஜனவரி மாதத்தில்

வரலாறு :

அருள் வளங்களை அள்ளித் தருகின்ற தூய ஞானப்பிரகாசியார் ஆலயம் நீண்ட வரலாற்றை தன்னகத்தே கொண்டது.

அருட்தந்தை தனிஸ்லாஸ் DCMA மற்றும் அருட்சகோதரி எமின் ஆகியோரின் அரிய முயற்சியாலும் இலவுவிளைப் பகுதி மக்களின் தன்னலமற்ற ஒத்துழைப்பாலும் 25-08-1927 -ல் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

04-12-1927 -ல் பேராயர் ஆஞ்சல் மேரி மற்றும் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் ஆகியோரால் அர்ச்சிக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

இலவுவிளையின் முதல் ஆலயம் மண் சுவராலும், மேற்கூரை ஓலை வேய்ந்ததுமாகும். பின்னாளில் கருங்கற்களாலும், சுண்ணாம்பு கலந்த கலவையாலும் கட்டப்பட்டு மேற்கூரை ஓடுகளாலும் வேயப்பட்டிருந்தது.

1972-ல் காப்புக்காடு பங்கிலிருந்து பிரிந்து தனிப்பங்காக உயர்ந்தது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி S. மரியதாஸ் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள்.

2002 -ம் ஆண்டு ஆலயத்தின் முன்பகுதி புதுப்பிக்கப்பட்டு மேதகு ஆயர் லியோன் தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பழைய ஆலயம் சிதிலமடைந்திருந்ததாலும், போதிய இடவசதி இல்லாததாலும் புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்ற கனவு மக்களின் உள்ளங்களில் கனன்று கொண்டிருந்தது.

12-06-2011 அன்று பங்கின் பொறுப்பை ஏற்று செயல்பட்ட அருட்பணி பெர்க்மான்ஸ் அவர்களிடம் மக்களின் கனவாகிய அழகிய ஆலயம் கட்ட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப் பட்டது.

இக் கருத்து அன்பியங்கள், பங்கேற்பு அமைப்புகள், பங்கு பொதுக்குழு மற்றும் பங்கு அருட்பணிப்பேரவை போன்றவற்றின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், கலந்துரையாடல்கள் நடத்தி புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப் பட்டது.

மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் 06-12-2014 அன்று அடிக்கல் போடப்பட்டு, மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் ஆலயப் பணிகள் தொடங்கி வைக்கப் பட்டது.

அருட்பணி பெர்க்மான்ஸ் அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பணியிட மாற்றம் பெற்றார்.

தொடர்ந்து வந்த அருட்தந்தை பென்கர் அவர்கள் பணிகளின் வேகத்தை அதிகப் படுத்தினார்.

தொடர்ந்து அருட்தந்தை ஆன்றனி ஜெயக்கொடி அவர்கள் 01-11-2016 ல் பொறுப்பேற்று பங்கு மக்களை சிறப்பாக வழிநடத்தி ஆலய கட்டுமானப் பணிகளை பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகளால் இனிதே நிறைவு செய்துள்ளார்கள்.

13-01-2019 ஆகிய இன்று மாலை 04.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்கள் தலைமையில், மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்கள் முன்னிலையில் அர்ச்சிக்கப் பட இருக்கிறது.

இவ்வாலய கட்டுமானப் பணிகளுக்காக உழைத்த பங்கு மக்கள், நன்கொடையாளர்கள், பங்குத்தந்தை, அருட்சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..! பாராட்டுகள்..!

மண்ணின் இறை அழைத்தல்கள் :

அருட்பணி ஜான் றோமஸ்
அருட்பணி அகஸ்டின்

மற்றும் 7 -ற்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள்