826 புனித பதுவை அந்தோனியார் ஆலயம், எறையூர்

   

புனித பதுவை அந்தோனியார் ஆலயம் 

(பெருமாத்தூர் -எறையூர் பங்கு)

இடம்: 36 எறையூர், சர்க்கரை ஆலை

மாவட்டம்: பெரம்பலூர்

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: பெரம்பலூர்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், பெருமாத்தூர்

2. கீழப்புலியூர்

பங்குத்தந்தையர்கள்

அருட்பணி.‌ A. ஜாண் பிரிட்டோ

அருட்பணி. S. சின்னப்பன் 

குடும்பங்கள்: 40

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி

திங்கள், புதன், வியாழன் திருப்பலி காலை 06:30 மணி

செவ்வாய், வெள்ளி திருப்பலி மாலை 06:30 மணி

திருவிழா: ஜூன் மாதத்தில்

வரலாறு:

திருமந்துறை பங்கில் பணிபுரிந்த அருட்பணி.‌ ஞானாதிக்கம் (1977-1989) அவர்கள், எறையூர் பகுதியில் உள்ள மக்களுக்கு சில அடிப்படை உதவிகள் செய்தும், உணவு கொடுத்தும், ஆன்மீக வழிகாட்டியும் வந்ததன் பலனாக, எறையூரில் ஒருசில மக்கள் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆயினர்.

மேலும் அருட்பணி. ஞானாதித்கம் அவர்கள் எறையூர் சர்க்கரை ஆலைப் பகுதியில் நிலங்கள் வாங்கி, ஆர்.சி. மரியன்னை நடுநிலைப் பள்ளிக்கூடம் அமைத்தார். 

1988 ஆம் ஆண்டு திருமந்துறை பங்கில் இருந்து பிரிக்கப்பட்டு, பெருமாத்தூர் பங்கு உருவாக்கப்பட்டது.‌ இதுமுதல் எறையூர்  பெருமாத்தூர் பங்கின் கீழ் வந்தது.

எறையூரில் 1978 ஆம் ஆண்டில் சர்க்கரை ஆலை ஆரம்பித்த போது, ஆலையில் பணிசெய்ய வந்த ஒருசில கத்தோலிக்க மக்களுக்காகவும், இங்கு ஏற்கனவே திருமுழுக்குப் பெற்ற மக்களுக்காகவும் இப்பகுதியில் ஆலயம் அமைக்க வேண்டும் என்ற நோக்கில், அரசு வழங்கிய நிலத்தில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் 19.08.1992 அன்று ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  

அருட்பணி. M. அந்தோணிசாமி அவர்கள் பணிக்காலத்தில், ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 12.06.1994 அன்று கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு D. பால் அருள்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

மேலும் இதே ஆண்டில் (1994) பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.

1997 ஆம் ஆண்டு பெருமாத்தூர் பங்கில் இருந்த பங்குத்தந்தை இல்லம் அகற்றப்பட்ட பின்னர், பங்குத்தந்தை எறையூர் பங்கு இல்லத்தில் வந்து தங்கி பணிபுரியத் தொடங்கினார். இதுமுதல் எறையூர் -பெருமாத்தூர் பங்கு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

தற்போது சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கை குறைந்து போயுள்ளதால், ஆலயம் வருகிற கத்தோலிக்க இறைமக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போயுள்ளது. மேலும் இங்கு வாழும் கத்தோலிக்க மக்கள் பெரும்பாலும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருவதாலும், போதிய ஆன்மீக விழிப்புணர்வு இல்லாததாலும், வளர்ச்சி பெருமளவில் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

பெருமாத்தூர் -எறையூர் பங்கின் பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. A. வின்சென்ட் (1988-1990)

2. அருட்பணி. ராஜரத்தினம் (1990-1991)

3. அருட்பணி. M.  அந்தோணிசாமி (1991-1997)

4. அருட்பணி. L . மரியதாஸ் (1997-2003)

5. அருட்பணி. I. அடைக்கலம் (2003-2009)

6. அருட்பணி. P. ஜோசப் (2009-2010)

7. அருட்பணி. சகாயராஜ் (2010-2016)

8. அருட்பணி. ஆரோக்கிய சாமி (2016-2017)

9. அருட்பணி. சின்னப்பராஜ் (2017-2021)

10. அருட்பணி. A. ஜாண் பிரிட்டோ &

அருட்பணி.‌ S. சின்னப்பன் (2021...)

வழித்தடம்: திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 18கி.மீ தொலைவில் எறையூர் அமைந்துள்ளது.

விழுப்புரம் -உளுந்தூர்பேட்டை -தொழுதூர் அல்லது பெரம்பலூரில் இறங்கி, எறையூர் வரலாம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குத்தந்தையர் அருட்பணி. A. ஜாண் பிரிட்டோ மற்றும் அருட்பணி.‌ S. சின்னப்பன் ஆகியோர்.