புனித மரியன்னை ஆலயம்
இடம் : மாதாபுரம், பள்ளிபாளையம்
மாவட்டம் : நாமக்கல்
மறை மாவட்டம் : சேலம்
மறைவட்டம் : திருச்செங்கோடு
நிலை : கிளைப்பங்கு
பங்கு : பாதுகாக்கும் பள்ளிபாளையம் புனித அந்தோணியார் அருட்தலம், பள்ளிபாளையம்.
பங்குதந்தை : அருட்பணி. ஆனந்தராஜ்
குடும்பங்கள் : 67
அன்பியங்கள் : 3
ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 06.30 மணிக்கு செபமாலை, நவநாள் திருப்பலி.
சிறப்பு நாட்கள் : மாதந்தோறும் அமாவாசை அன்று மாலை 06.00 மணிக்கு செபமாலை, சிறப்பு திருப்பலி, தேர்பவனி நடைபெறும்.
திருவிழா : ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி.
வரலாறு :
பாதுகாக்கும் பள்ளிபாளையத்தின் கிளைப்பங்கான மாதாபுரத்தில் தூய மரியன்னை ஆலயமானது அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் முயற்சியாலும், பங்குமக்களின் நன்கொடைகளாலும் கட்டப்பட்ட, 26.05.2013 அன்று சேலம் மறை மாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து இறைப் பணியாற்றிய, அருட்பணி. சகாயராஜ் அவர்களின் பணிக்காலத்தில் மேலே பெரிய நிழற்கூடம் அழகுற கட்டப்பட்டது.
தற்போது பங்குத்தந்தை அருட்பணி. ஆனந்த ராஜ் அவர்ளின் முயற்சியால் அமாவாசை அன்று செபமாலையும், திருப்பலியும், தேர்பவனியும் சிறப்புற நடைபெற்று வருகிறது.
சிறப்பு : பாதுகாக்கும் பள்ளிபாளையத்தின் பூர்வகுடிகள் என்று மாதாபுரம் மக்கள் அழைக்கப் படுகிறார்கள்.
புனித மரியன்னையை இப்பகுதி மக்கள் "புனித திருக்கல்யாண மாதா" என்று அன்புடன் அழைக்கின்றனர்.
இதுவரையிலும் ஏராளமான மக்கள் புனித திருக்கல்யாண மாதாவை தேடி, நாடி வந்து வேண்டுதல்களை வைத்து, அன்னையின் இறையாசீரை நிறைவாய் பெற்றுச் செல்கின்றனர். எனவே, அன்னையின் அரவணைப்பில் மலர்ந்திட அனைவரையும் அன்போடு வரவேற்கும்...! பங்குத்தந்தை, பாதுகாக்கும் பள்ளிபாளையம் புனித அந்தோணியார் அருட்தலம், பள்ளிபாளையம்.
தகவல்கள் : பங்குத்தந்தை. அருட்பணி. ஆனந்தராஜ்.