862 இயேசுவின் திருஇருதய ஆலயம், சில்வர்புரம்

   

இயேசுவின் திருஇருதய ஆலயம்

இடம்: சில்வர்புரம், தூத்துக்குடி 02

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: தூத்துக்குடி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ரீத்தம்மாள் ஆலயம், ரீத்தம்மாள்புரம்

பங்குத்தந்தை அருட்பணி. L. வில்லியம்

குடும்பங்கள்: 54

அன்பியங்கள்: 3

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி: காலை 07:30 மணி

வெள்ளிக்கிழமை திருப்பலி: மாலை 07:00 மணி 

திருவிழா : மே மாதத்தில் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்:

அருட்பணி. ஜேசுராஜ், SJ

Location map: இயேசுவின் திரு இருதய ஆலயம், RC church

https://maps.app.goo.gl/3UpZHAFfyfo7eLjp6

வரலாறு:

சில்வர்புரம், சாயர்புரம், அருளானந்தபுரம், பரமன்குறிச்சி ஆகிய ஊர்களிலிருந்து நெசவுத் தொழில் செய்த கிறிஸ்தவர்கள் 9 தலைமுறைகளுக்கு முன்னதாகவே இவ்வூரில் வந்து குடியேறினர். 1935 ஆம் ஆண்டு இம்மக்களின் விசுவாச வளர்ச்சிக்காக இயேசுவின் திருஇருதய ஆலயம் கட்டப்பட்டு, மேதகு ஆயர் ரோச் அவர்களால் திறந்து அர்ச்சிக்கப்பட்டது. 

காலப்போக்கில் இவ்வாலயம் பழுதடைந்த காரணத்தால் புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அண்ணாநகர் பங்குத்தந்தை அருள்தந்தை அகஸ்டின் அவர்களின் பணிக்காலத்தில், புதிய ஆலயப்பணிகள் தொடங்கப்பட்டன. அருள்தந்தை மரியதாஸ் லிப்டன் அவர்களின் பணிக்காலத்தில் இவ்வாலயம் கட்டிமுடிக்கப்பட்டு, ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்களால் 17.05.2014 அன்று புனிதப்படுத்தப்பட்டது.

சில்வர்புரம் இயேசுவின் திருஇருதய ஆலயமானது, அண்ணாநகர் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 2018 ஆம் ஆண்டு ரீத்தம்மாள்புரம் தனிப்பங்கான போது அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. L. ஆரோக்கியம் அவர்கள்.