618 புனித சூசையப்பர் ஆலயம், மோட்சவாடி

      

புனித சூசையப்பர் ஆலயம் 

இடம் : மோட்சவாடி, மோசவாடி அஞ்சல்

மாவட்டம் : திருவண்ணாமலை 

மறைமாவட்டம் : வேலூர் 

மறைவட்டம் : சேத்துப்பட்டு 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் :

1. புனித அந்தோனியார் ஆலயம், செப்டாங்குளம் 

2. திருஇருதய ஆண்டவர் ஆலயம், அல்லியேந்தல்

3. புனித அமலோற்பவ அன்னை ஆலயம், இஞ்சிமேடு 

4. புனித அந்தோனியார் ஆலயம், தாழலூர் 

5. தவணி (ஆலயம் இல்லை. இல்லத்தில் திருப்பலி) 

பங்குத்தந்தை : அருள்பணி. S. C. ஜெயகுமார் 

குடும்பங்கள் : 62 (கிளைப்பங்குகள் சேர்த்து 236)

அன்பியங்கள் : 3

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி காலை 09.00 மணி

திங்கள், வியாழன் திருப்பலி : காலை 06.00 மணி (கன்னியர் இல்லம்)

செவ்வாய், வெள்ளி, சனி திருப்பலி : காலை 06.00 மணி 

புதன் திருப்பலி மாலை 06.00 மணி (மாதா கெபி)

முதல் வெள்ளி மாலை 06.30 மணி செபமாலை, திருப்பலி, ஆராதனை

முதல் சனி மாலை 06.30 மணி செபமாலை, திருப்பலி

திருவிழா : மே 1 ம் தேதி நிறைவு பெறும் வகையில் மூன்று நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்சகோதரி. நதியா, OSSS

2. அருட்சகோதரி வினிதா, OSSS

3. அருட்சகோதரி. ஜாஸ்மின் 

4. அருட்சகோதரி. ஜோஸ்பின் (கிளைப்பங்கு செப்டாங்குளம்)

வழித்தடம் : 

சேத்துப்பட்டு -சின்னகோழிப்புள்ளியூர் -இங்கிருந்து இடதுபுறமாக 5கி.மீ தொலைவில் மோட்சவாடி உள்ளது. 

ஆரணி -செடதாங்கல் -வலதுபுறமாக 8 கி.மீ தொலைவில் மோட்சவாடி உள்ளது. 

Location map : https://g.co/kgs/woMtv8

வரலாறு :

மோட்சவாடி புனித சூசையப்பர் ஆலயமானது தொடக்கத்தில் கொழப்பனூர் பங்கின் ஒருபகுதியாக இருந்து வந்தது. அருட்பணி. ஜான் அந்தனாட், அருட்பணி. A. T. தாமஸ் ஆகியோரின் முயற்சியால் மோசவாடியில் (மோட்சவாடி) சிறு ஆலயம் மற்றும் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு, கொழப்பனூர் தூய ஜெயராக்கினி மாதா ஆலயத்தின், கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 

அருட்பணி. V. P. அந்தோணிசாமி அவர்களின்  முயற்சியால் 30.11.1973 இல் மோட்சவாடி தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. P. J. தாமஸ் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார். 

தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. V. P. அந்தோணிசாமி அவர்கள் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததுடன், அவர்களின் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தினார். 

ஓலைக்கூரை ஆலயம் மாற்றப்பட்டு, அருட்பணி. N. A. ஜான் பீட்டர் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 01.02.2003 அன்று மேதகு ஆயர் சின்னப்பா ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

அருட்பணி. இன்பராஜ் பணிக்காலத்தில் தூய ஆரோக்கிய மாதா கெபி கட்டப்பட்டு, மறைமாவட்ட முதன்குரு பேரருட்பணி. I. ஜான் இராபர்ட் அவர்களால் 28.05.2017 அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது

பங்குத்தந்தை அருட்பணி. S. C. ஜெயகுமார் அவர்களின்  பணிக்காலத்தில்  இறைமக்களின் வசதிக்காக, பழைய ஆலயம் இருந்த இடத்திற்கு சுமார் அரை கி.மீ தொலைவில், மக்கள் குடியிருக்கும் பகுதியில் வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு சௌந்தரராஜூ அவர்களின் முயற்சியால் 11.07.2018 அன்று நிலம் வாங்கப்பட்டது. 

வாங்கப்பட்ட நிலத்தில்  பங்குத்தந்தை இல்லத்திற்கு மேதகு ஆயர் சௌந்தரராஜூ மற்றும் ஆயர் இல்ல குருக்கள் குழுவால் 26.07.2018 அன்று அடிக்கல் போடப்பட்டது.  கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 28.12.2018

மேதகு ஆயர் சௌந்தரராஜூ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

03.10.2018 அன்று  தற்போதைய புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பங்குத்தந்தை அருள்பணி. S. C. ஜெயகுமார் அவர்களின் முயற்சி, மறைமாவட்ட உதவி மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் அழகிய ஆலயம் கட்டப்பட்டு, 01.05.2019 அன்று மேதகு ஆயர் சௌந்தரராஜூ அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

மரியாயின் சேனை 

சூசையப்பர் லில்லி பூக்கள் 

பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் சலேசியன் சபை அருள்சகோதரிகள்:

அருள்சகோதரி. ஆனி (Superior) 

அருள்சகோதரி. குளோறியா 

அருள்சகோதரி. அஜ்லியா.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. P. J. தாமஸ் (1973-1976)

2. அருள்பணி. V. P. அந்தோணிசாமி (1976-1979)

3. அருள்பணி. அந்தோணி காட்டுகாரன் (1979-1983)

4. அருள்பணி. அந்தோணி அடிமை (1983-1991)

5. அருள்பணி. A. அருள்சாமி (1991-1996)

6. அருள்பணி. N. A. ஜான்பீட்டர் (1996-2003)

7. அருள்பணி. A. ஜோசப் (2003-2009)

8. அருள்பணி. K. S. ஞானஜோதி (2009-2010)

9. அருள்பணி. A. ஜோசப் (2010-2011)

10. அருள்பணி. S. அந்தோணி ரொசாரியோ (2011-2015)

11. அருள்பணி. N. விக்டர் இன்பராஜ் (2015-2017)

12. அருள்பணி. J. ஜெயபிரகாஷ் (2017-2018)

13. அருள்பணி. S. C. ஜெயகுமார் (2018 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. S. C. ஜெயகுமார்.