804 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கருப்பூர்

     

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம்: கருப்பூர், கருப்பூர் அஞ்சல், எட்டயபுரம் தாலுகா

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: கோவில்பட்டி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித பரலோக அன்னை ஆலயம் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், வெங்கடாசலபுரம்

பங்குப்பணியாளர்: அருட்பணி. S. அல்போன்ஸ்

குடும்பங்கள்: 72

அன்பியம்: 1 (குழந்தை தெரசாள் அன்பியம்)

ஞாயிறு திருப்பலி மாலை 07:00 மணி

திருவிழா: செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஞானப்பிரகாசம், OCD

2. அருட்பணி. சேகர், கல்கத்தா மறைமாவட்டம்

வரலாறு:

கருப்பூர் ஊரில் வாழும் மக்கள் திருவைகுண்டம், காமநாயக்கன்பட்டி, வெள்ளாளன் கோட்டை, வெங்கடாசலபுரம் போன்ற இடங்களில் இருந்து இங்கு வந்து குடியேறிவர்கள் ஆவர். கருப்பூர் பகுதி கோவில்பட்டி பங்கின் கீழ் செயல்பட்டு வந்தது.

இங்குள்ள கத்தோலிக்க மக்கள், கோவில்பட்டி பங்கின் கிளைப்பங்காக விளங்கிய வெங்கடாசலபுரம் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்தனர்.

1975 -ல் அருள்தந்தை சிங்கராயர், சே.ச அவர்கள் ஒரு சிற்றாலயம் கட்டி, இயேசுவின் திருஇருதய ஆலயம் எனப் பெயரிட்டு 19.01.1975 அன்று பாளை மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு இருதயராஜ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. பாளை மறைமாவட்டம் உருவானபிறகு அர்ச்சிக்கப்பட்ட முதல் ஆலயம் இதுவேயாகும்.

1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோவில்பட்டி பங்குத்தந்தை அருள்தந்தை. சிங்கராயன், சே.ச இம்மக்களுக்கு திருநெல்வேலி சமூக சேவை சங்கம் வழியாக வேலைக்கு உணவு திட்டத்தில், நிறைய வீடுகள் கட்டிகொடுத்து உதவியுள்ளார். 

2010 ஆம் ஆண்டு வெங்கடாசலபுரம் தனிப் பங்காக உயர்த்தப்பட்ட போது, கருப்பூர் அதன் கிளைப் பங்காக மாற்றப் பட்டது.

கருப்பூர் இறைமக்கள் தூய மிக்கேல் அதிதூதர் மேல்கொண்ட பற்றால், அதிதூதர் மிக்கேல் திருவிழாவையே ஆண்டுதோறும் கொண்டாடி வந்துள்ளனர். ஆலயம் பழுதடைந்த நிலையில், பழைய ஆலயம் அகற்றப்படாமலேயே, அதற்கு அருகிலேயே  அருள்பணி. வில்சன் அவர்கள் 2016 ஆம் ஆண்டு புதிய ஆலயப் பணியைத் தொடங்கினர். ஆனால் 2019ஆம் அவருக்கு ஏற்பட்ட விபத்தினால், பணி நிறைவுறாத நிலையில் ஓய்வுக்கு சென்றார்.

2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி. அல்போன்ஸ் அவர்களின் தலைமையில், ஊர்மக்களுடைய முழு முயற்சியாலும், பொருளுதவியாலும்,

ரட்டை கோபுரங்களோடு புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு, தூய மிக்கேல் அதிதூதர் பெயரில், 15.01.2021 அன்று பாளை மறைமாவட்ட மேதகு ஆயர் அந்தோனிசாமி ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் செப்டம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து செப்டம்பர் 30 ஆம் தேதி காலையில் கொடியிறக்கமும், மாலையில் அன்பியம் சார்பில் குழந்தை தெரசம்மாள் விழாவும் கொண்டாடப்பட்டு, இரவு சமபந்தி வழங்கப்பட்டு, திருவிழா இனிதே நிறைவுபெறுகிறது. இவ்வாண்டு (2022) இந்த ஆலயத்தின் 47-வது திருவிழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

வழித்தடம்: கோவில்பட்டி -கடலையூர் மீனாட்சிபுரம் -கருப்பூர்

Location map: St.Michael Church

https://maps.app.goo.gl/cXY45htC4dsdo8s76

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. S. அல்போன்ஸ் அவர்கள்