487 கிறிஸ்து அரசர் ஆலயம், நடைக்காவு


கிறிஸ்து அரசர் மலங்கரை கத்தோலிக்க ஆலயம்

இடம் : நடைக்காவு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : மார்த்தாண்டம்
மறைவட்டம் : களியக்காவிளை.

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித மரியன்னை ஆலயம், அன்னைநகர் -பல்லுக்குழி

குடும்பங்கள் : 450
அருள்வாழ்வியங்கள் : 19

பங்குத்தந்தை : அருட்தந்தை. அருள்தாஸ்
பங்கு அருட்சகோதரி: அருட்சகோதரி. ஸோனியா ஜோஸ்பின்

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு - காலை 05.45 மணி காலை ஜெபம், 06.15 மணி திருப்பலி

செவ்வாய், வெள்ளி, சனி - காலை 06.00 மணி காலை ஜெபம், 06.15 மணி திருப்பலி.

புதன் - மாலை 05.45 மணி மாலை ஜெபம், மாலை 06.00 மணி திருப்பலி தொடர்ந்து மாதா குருசடியில் நவநாள் ஜெபம்.

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.00 மணி திருப்பலி, மாலை 07.00 மணி நற்கருணை ஆராதனை.

திருவிழா : நவம்பர் 13 முதல் 22 ஆம் தேதி வரை. (10 நாட்கள்)

மண்ணின் இறையழைத்தல்கள்:

மண்ணின் புதல்வர்கள்:
1. Very. Rev. Fr. Msgr. ஜோஸப் பிலாங்காலா (late)
2. பேரருட்தந்தை. பீற்றர் ஆனந்த்
3. அருட்தந்தை. ஜார்ஜ் தாவரத்தில்
4. அருட்தந்தை. மரிய ஜாண்
5. அருட்தந்தை. ஜெஸ்டின்
6. அருட்தந்தை. ஆல்பின்
7. அருட்தந்தை. சஜித் பிரான்சிஸ்
8. அருட்தந்தை. சஜீவ்

அருட்சகோதரர். சாமிநாதன் S. V. D
சகோதரர். டேவிட் வேதியர் (late)

மண்ணின் புதல்வியர்கள்:
1. அருட்சகோதரி. புஷ்ப ராணி D.M
2. அருட்சகோதரி. செலீனாகிரேஸ் D.M
3. அருட்சகோதரி. லிற்றில் ஜோதி SOC
4. அருட்சகோதரி. ஜெபமேரி SOC

வழித்தடம்:

களியக்காவிளை – நித்திரவிளை நெடுஞ்சாலையில் 4 கி.மீ தொலைவில் நடைக்காவு சந்திப்பு தாண்டிவரும் மாதாகுருசடி அருகாமையில் அமைந்த இயற்கை எழில் மிகு ஆலயம் தான் கிறிஸ்து அரசர் மலங்கரை கத்தோலிக்க ஆலயம்.

மற்றும் மார்த்தாண்டம் -களியக்காவிளை -கோழிவிளை -நடைக்காவு.

Location map : Christ The King Malankara Catholic Church Christ, Raja St, Nadaikavu, Tamil Nadu 629153
https://maps.app.goo.gl/YDG4QnpFi8Wjby3Z9

ஆலய வரலாறு:

கி.பி 1934 -ஆம் ஆண்டு முதல் திருவனந்தபுரத்திலிருந்து வருகை தந்த இரு அருட்தந்தையர்களால் நடைக்காவு பகுதியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. இவ்வாண்டிலேயே அருட்தந்தை. செறாபியோஸ் அவர்கள் தற்போது மெதுகும்மல் புனித அந்தோணியார் பள்ளியாக செயல்பட்டுவரும் சாத்தன்கோடு பள்ளிக்கூடத்தை விலைக்கு வாங்கி, அதன் ஒரு கட்டிடத்தை ஆலயமாக மாற்றி திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

1962 ஆம் ஆண்டு அருட்தந்தை. றைமண்ட் என்பவரால் நடைக்காவு பகுதியில் ஆலயம் ஒன்று தொடங்கப்பட்டு 1963-ல் அருட்தந்தை. தோமஸ் பணிக்கர் பங்குத்தந்தையாக இருந்தபோது அர்ச்சிக்கப்பட்டது.

அருட்தந்தை. G. வற்கீஸ் (1994-1997) பணிக்காலத்தில் மாதா குருசடி கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

2001 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை. ஸ்கரியா கொச்சுமுரிப்பேல் அவர்களால் புது ஆலயப்பணி தொடங்கப்பட்டு அருட்தந்தை. கீவற்கீஸ் சாங்கேத் அவர்களால் பணி முடிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு ஜனவரி 25, 26 நாட்களில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டோம் முன்னிலை மலங்கரை கத்தோலிக்க உயர் பேராயர் சிறில் மார் பெசலியோஸ் அவர்களால் கல் வைப்பு திருச்சடங்கும், மோரோன் அபிஷேக திருச்சடங்கும் நடத்தப்பட்டு அர்ச்சித்து அர்ப்பணிக்கப் பட்டது.

பங்கில் துறவற சபையாரின் பணிகள்:

1934 –ம் ஆண்டிலிருந்து 1998 -ம் ஆண்டு வரை ‘மரியாவின் புதல்வியர்கள்’ (Daughters of Mary) துறவற சபையினர் மிகச்சிறப்பாக பணியாற்றி வந்தனர். மேலும், 1999 -ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த ‘அன்பின் கன்னியர்கள்’ (Sisters of Charity) துறவற சமூகத்தினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம், முதியோர் இல்லம் போன்றற தொண்டுகளாற்றுவதோடு ‘ஒற்றுமையின் சிறார்கள்’ என்னும் இயக்கத்தை பல பங்குகளில் வழிநடத்தியும் பங்கில் வீடு சந்தித்தல், மறைக்கல்வி பயிற்றுவித்தல், ஆற்றுப்படுத்துதல், அருள்வாழ்வியங்கள் வழிநடத்துதல் போன்ற பணிகளை சீரோடும், சிறப்போடும் செய்து வருகின்றனர்.

பங்கில் உள்ள பக்த சபைகள்:
மறைக்கல்வி
மரியாயின் சேனை
புனித வின்சென்ட் - தே – பவுல் சபை
இளைஞர் இயக்கம்
கோல்பிங் குடும்பம்
பாலர் சபை
ஒற்றுமையின் சிறார்கள் இயக்கம்
தாய்மார் சங்கம்
மலங்கரை கத்தோலிக்க இயக்கம் (MCA)
பீடச் சிறார் இயக்கம்
அன்பின் அன்னையர் இயக்கம்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்தந்தையர். ஜாண், தோமஸ் (1934 - 1935)
2. அருட்தந்தை. செறாபியோஸ் (1935– 1939)
3. அருட்தந்தை. பிரான்சிஸ் (1940–1941) (லத்தீன் சபை)
4. அருட்தந்தை. பிரடரிக் (1942–1944) (கர்மலித்தா சபை)
5. அருட்தந்தை. எக்பர்ட் 1945 (கர்மலித்தா சபை)
6. அருட்தந்தையர்கள். எப்ரேம், ஜோஸ்வா, ஜோஸ்பினேசி, அனானியஸ் (1946–1953)
7. அருட்தந்தை. றைமண்ட் (1954 –1962) (கர்மலித்தா சபை)
8. அருட்தந்தை. தோமஸ் பணிக்கர் (1963–1964)
9. அருட்தந்தை. டேனியல் தோட்டம் (1965 –1968)
10. அருட்தந்தை. ஜோஸ்வா தாழையத் (1969)
11. அருட்தந்தை. P. G. தோமஸ் பணிக்கர் (1970–1975)
12. அருட்தந்தை. சக்கரியாஸ் குழிப்பறம்பு (1976)
13. அருட்தந்தை. ஜோசப் புத்தன்குளம் (1977–1979)
14. அருட்தந்தை. தோமஸ் எளிலத் (1980–1981)
15. அருட்தந்தை. ஜாண் சி. புத்தன்வீடு (1981–1982)
16. அருட்தந்தை. அகஸ்டின் விரிப்பேல் (1983–1987)
17. அருட்தந்தை. பிலிப்தயானந்த் (1988–1992)
18. அருட்தந்தை. பிரான்சிஸ் (1993–1994)
19. அருட்தந்தை. G.வற்கீஸ் (1994–1997)
20. அருட்தந்தை. ஸ்கறியா கொச்சு முரிப்பேல் (1998–2002)
21. அருட்தந்தை. கீவற்கீஸ் சாங்கேத் (2003–2007)
22. அருட்தந்தை. தேவதாஸ் (2007–2009)
23. அருட்தந்தை. ஜோஸ்பின் ராஜ் (2009–2011)
24. அருட்தந்தை. ஜெரோம் (2011–2012)
25. அருட்தந்தை. ஏசுதாஸ் (2012–2013)
26. அருட்தந்தை. ஜோஸ்பிரைட் (2013–2016)
27. அருட்தந்தை. இராபின்சன் (2017–2018)
28. அருட்தந்தை. அருள்தாஸ் (2019 முதல் தற்போது வரை)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்தந்தை. அருள்தாஸ் அவர்கள்.