788 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், அட்டப்பள்ளம்

    

புனித திருமுழுக்கு யோவான் ஆலயம்

இடம்: அட்டப்பள்ளம், பாம்பாம்பள்ளம் அஞ்சல், பாலக்காடு, 678621

மாநிலம்: கேரளா

மாவட்டம்: பாலக்காடு

மறைமாவட்டம்: சுல்தான்பேட்டை

மறைவட்டம்: பாலக்காடு

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித பதுவை அந்தோனியார் ஆலயம், கெனால் பிரிவு

2. புனித செபஸ்தியார் ஆலயம், உப்புக்குழி

பங்குப்பணியாளர்: அருட்பணி. M. பால்

குடும்பங்கள்: 223 (கிளைப்பங்குகள் 319)

அன்பியங்கள்: 14 (கிளைப்பங்குகள் சேர்த்து 18)

வழிபாட்டு நேரங்கள்: 

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி (தமிழ் & மலையாளம்)

நாள்தோறும் திருப்பலி காலை 06:30 மணி

வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணிக்கு இறை இரக்க நவநாள், திருப்பலி, திவ்யநற்கருணை ஆசீர் 

திருவிழா: டிசம்பர் மாதம் 27-ம் தேதி

வழித்தடம்: கோயம்புத்தூர் -வாளையார் வழியாக பாலக்காடு செல்லும் சாலையில், வாளையாரில் இருந்து 10கி.மீ தொலைவில் அட்டப்பள்ளம் அமைந்துள்ளது.

Location map: St.John the Baptist church , #Attapallam

https://g.co/kgs/CiyViq

வரலாறு:

அட்டப்பள்ளம் ஊரானது, கோயம்புத்தூர் -பாலக்காடு பிரதான சாலையில் அமைந்துள்ளது. தமிழ் பேசும் கத்தோலிக்க கிறித்தவ மக்கள் பெரும்பாலும், அத்திக்கோடு பகுதியில் இருந்து அட்டப்பள்ளம் பகுதியில் 19 ஆம் நூற்றாண்டில் இருந்தே குடியேறினர்.‌ பின்னர் மற்றவர்களும் குடியேறினர். 

அட்டப்பள்ளத்கைக் குறித்து முதன்முதலில் 1905 ஆம் ஆண்டு கோவை மிஷன் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்திக்கோடு பங்குத்தந்தை அருட்தந்தை.‌ பெரின், MEP அவர்கள் அட்டப்பள்ளம் பகுதியில் ஒரு ஆலயம் மற்றும் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று குறிப்பிடுகிறார். 

அருட்பணி.‌ K. P. வின்சென்ட் அவர்கள் 1961 ஆம் ஆண்டில் அட்டப்பள்ளத்தில் புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தைக் கட்டினார்.‌ தொடர்ந்து கஞ்சிக்கோடு பங்கின் கிளைப் பங்காக அட்டப்பள்ளம் செயல்பட்டு வந்தது.

12.08.1995 அன்று அட்டப்பள்ளம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி.‌ பால் பெனடிக்ட் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். 1996 ஆம் ஆண்டில் கிளைப் பங்கான கனால் பிரிவு பகுதியில் ஆலயம் கட்டினார். 

புதிய சமூக நலக்கூடம் 2000-2003 காலகட்டத்தில் கட்டப்பட்டது.

தற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி. ஜெயபால் பணிக்காலத்தில் கட்டப்பட்டு, 14.04.2007 அன்று கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்வினாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் சுல்தான்பேட்டை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அட்டப்பள்ளம் அதன்கீழ் வந்தது.  

தூய சகாய மாதா குருசடியானது கட்டப்பட்டு, சுல்தான்பேட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் அபீர் அவர்களால் 2015 அக்டோபர் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது.

புனித சந்தியாகப்பர் கெபி மற்றும் ஆரோக்கிய மாதா கெபி ஆகியன கட்டப்பட்டு, 2015 மே மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது.

கிளைப்பங்கான உப்புக்குழி புனித செபஸ்தியார் ஆலயமானது 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. M. பால் அவர்களின் வழிகாட்டலில், வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது அட்டப்பள்ளம் இறைசமூகம்.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பங்குப்பேரவை

2. இளையோர் இயக்கம்

3. மறைக்கல்வி

4. அன்பியங்கள்

பங்கில் உள்ள கெபிகள்:

1. வேளாங்கண்ணி மாதா கெபி

2. புனித சந்தியாகப்பர் கெபி

3. புனித ஆரோக்கிய மாதா கெபி

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர் பட்டியல்:

கோவை மறைமாவட்டத்தின் கீழ்:

1. அருட்பணி. பால் பெனடிக்ட் (1995-1998)

2. அருட்பணி.‌ குழந்தைசாமி (1998-1999)

3. அருட்பணி. ஜார்ஜ் சகாயராஜ் (1999-2003)

4. அருட்பணி.‌ அருள் உபகாரம் (2003-2005)

5. அருட்பணி. ஜெயபால் (2005-2008)

6. அருட்பணி. சைமன் பீட்டர் (2008-2010)

7. அருட்பணி.‌ ஆன்றனி ஜேசுராஜ் (2010-2013)

8. அருட்பணி.‌ L. ஜெபமாலை லோரன்ஸ் (2013-2014)

சுல்தான்பேட்டை மறைமாவட்டத்தின் கீழ்:

9. அருட்பணி. ஜேசுதாஸ் (2014-2019 ஜூன்5)

10. அருட்பணி. M. பால் (2019 ஜூன் 5 முதல்....)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. M. பால் அவர்கள்.