945 திருஇருதய ஆண்டவர் பேராலயம், தருமபுரி

     

திருஇருதய ஆண்டவர் பேராலயம்

இடம்: தருமபுரி (அ) தர்மபுரி 

மாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: தருமபுரி

மறைமாவட்டம்: தருமபுரி

நிலை: பேராலயம் (கதீட்ரல்)

கிளைபங்குகள்: 

1. புனித செபஸ்தியார் ஆலயம், பீனாச்சிபட்டி

2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், St. மேரிஸ் நகர்

குடும்பங்கள் : 350

அன்பியங்கள் : 14

பங்குத்தந்தை : அருள்பணி. அருள் ராஜ்

உதவி பங்குத்தந்தை: அருள்பணி. ஆரோக்கிய பிரதீப்

திருப்பலி நேரங்கள்:

ஞாயிறு : காலை 06:00 மணி, 08:30 மணி மற்றும் மாலை 05:00 மணி 

திங்கள், புதன், வியாழன் காலை 06:00 மணி

செவ்வாய், வெள்ளி, சனி மாலை 06:00 மணி

திருவிழா: ஜூன் மாதத்தில்

மண்ணின் இறையழைத்தல்கள்:

Fathers:

1. Fr. செபாஸ்டின், சேலம்

2. Fr. மதலைமுத்து

3. Fr. பாபுராஜ், SDB

4. Fr. R. மரிய அந்தோனி, C.PPS.

5. Fr. ஜாக்சன்

6. Fr. போஸ்கோ மதலைமுத்து

7. Fr. அற்புதராஜ் 

8. Fr. கிறிஸ்துராஜ், Andhra

9. Fr. இருதயராஜ்

10. Fr. செல்வம், SHC

11. Fr. அமல்ராஜ், CSC

12. Fr. அருளானந்தம்

Sisters:

1. Sr. பிரேமா, OP

2. Sr. மேரி உஷா, DMI

Seminarian:

Bro. மரிய ஜோசப், IVD

வழித்தடம்: திருப்பத்தூர்- பென்னாகரம் சாலையில், தருமபுரி பேருந்து நிலையம் அருகில், தருமபுரி 636701

Map: https://maps.app.goo.gl/W1DucPsRL7eUUuD67

வரலாறு:

தருமபுரி திருச்சபை வரலாறானது, மைசூர் மறைப்பணிதலத்தில் இயேசு சபையினர் வருகையிலிருந்து தொடங்குகிறது. 1658ஆம் ஆண்டு   தருமபுரிக்கு வருகை தந்த அருட்தந்தை சீப்போன் மார்ட்டின் அவர்கள், மூன்று கிறிஸ்தவர்களை சந்தித்ததாக The Jesuits in Mysore என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 

1661இல் மைசூர் மறைப்பணித்தளத்தை நிறுவிய அருட்பணி. லியோனார்டு சின்னமி அடிகளார் தருமபுரிக்கு வந்து சென்றுள்ளார். சோளப்பாடியை சேர்ந்த வேதியர் உதவியுடன் 1666இல் பலர் கிறிஸ்தவத்தில் இணைந்தனர். சில ஆண்டுகள் கழித்து தருமபுரியில் புனித சூசையப்பரை பாதுகாவலராகக் கொண்ட ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் அருட்தந்தை ஜோசப் முச்சியாரல்லி அவர்கள் தருமபுரியில் தங்கி, இப்பகுதி முழுவதும் சுற்றி வந்து மறைப்பணி செய்தார். 1674இல் புனித அருளானந்தர் தனது பணியிடமான கொழை என்ற ஊருக்கு செல்லும் வழியில், தருமபுரியில் ஓரிரு நாட்கள் தங்கி இருந்ததாக குறிப்பு உள்ளது. மேலும் 1674 ஆம் ஆண்டு மறைப்பணியாளர்கள் உறைவிடம் என்று கோனூர், தருமபுரி மற்றும் கபினகத்தி என்ற ஊர்களில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

1682ல் மராத்திய படையெடுப்பால் தருமபுரி ஆலயம் பாதிக்கப்பட்டது. எனவே மறைப்பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தை நல்லம்பள்ளி அருகில் உள்ள கோவிலூர் என்ற ஊருக்கு மாற்றினர். அதன்பின் தருமபுரியில் கிறிஸ்தவர்கள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

1906ஆம் ஆண்டில் மொரப்பூர்-தருமபுரி ரயில்வே சாலை அமைக்கப்பட்டது. இந்த ரயில்வேயில் பணியாற்றுவதற்காக திருச்சி பகுதியில் இருந்து சில கிறிஸ்தவர்கள் வந்து சேர்ந்தனர். மற்றும் சில ஆங்கிலேய கிறிஸ்தவர்களும் இங்கு வாழ்ந்தனர். 1918 ஆம் ஆண்டளவில் கடகத்தூரில் தங்கியிருந்த அருள்தந்தை தனிஸ்லாஸ் (Denislas) தருமபுரியில் சிறிய ஆலயம் ஒன்றை எழுப்பினார். 1930ல் கடகத்தூர் பங்கு உருவாக்கப்பட்ட பின்னர் தருமபுரி, கடகதுரின் கிளை பங்காக திகழ்ந்தது. 

1940ல் தருமபுரி ஆலயம் பழுதுபார்க்கப்பட்டதாக கடகத்தூர் பங்கு ஆவணம் குறிப்பிட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டு மொரப்பூர் -தருமபுரி ரயில்வே சாலை மூடப்பட்டதால் பலர் வேலை வாய்ப்பு இழக்க நேரிட்டது. அதன் விளைவாக கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை தருமபுரியில் குறைந்தது. 

1930ல் கடகத்தூர் பங்கு குடும்பப் பட்டியலில் தருமபுரியில் 25 குடும்பங்களும் 119 கிறிஸ்தவர்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. 1900க்கு பிறகு தருமபுரியில் தூய இருதய ஆண்டவர் பாதுகாவலராக கொண்டிருந்ததாகவும், திருவிழா ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடியாகவும், கடகத்தூர் பங்கு தந்தையாக இருந்த அருட்பணி. அந்தோணிசாமி 1958 ல் குறிப்பிட்டுள்ளார். 

பங்கு ஆலய வரலாறு:

1958 ஆம் ஆண்டு கடகத்தூர் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருள்பணி. P.A. சக்கரியஸ் முயற்சியால், நேதாஜி பைபாஸ் சாலையில் நிலம் வாங்கப்பட்டது. 1962ல் அருட்பணி. டி.சி ஜோசப் அவர்கள், குருக்கள் தங்குவதற்கான இல்லத்தை அந்நிலத்தில் கட்டினார். 

1968 ஆம் ஆண்டு கடகதூர் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு தருமபுரி தனி பங்கானது. சேசுராஜபுரம், பல்லிகுண்டு, ஊட்டமலை லிங்கநாய்கள்ளி உள்ளடக்கிய ஆலயங்கள் தருமபுரியின் கிளை பங்காயிற்று. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. தாமஸ் குருவில்லா பொறுப்பேற்றார். தற்போதைய ஆலயம் 1972 ஆம் ஆண்டு அருட்பணி.‌ தாமஸ் குருவில்லா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, 1976 இல் அருள்பணி. ஐசக் அடிகளார் அவர்களால் முடிக்கப்பட்டது.

1979ல் சேசுராஜபுரம் தனி பங்காக உருவாக்கப்பட்டது. 1982ல் தருமபுரி சமூக சேவை மையம் DSSS (Dharmapuri social service society) உருவாக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு தருமபுரி மறைமாவட்டம் உருவாகும்போது இந்த ஆலயம் மறைமாவட்ட பேராலயமாக தரம் உயர்த்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு பங்குத்தந்தை இருப்பிடம் ஆலயத்துக்கு அருகிலே உருவாக்கப்பட்டது. அருள்தந்தை மரிய சூசை பங்குத்தந்தையாக இருந்த போது சவலூர்பட்டி பகுதியில் நிலத்தை வாங்கி, சென்ட் மேரிஸ் நகரை உருவாக்கினார். அவ்விடத்தில் தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் 2010 இல் உருவாக்கப்பட்டு தருமபுரியின் கிளை பங்கானது. நீண்ட நாட்களாக எலத்தகிரி பங்கின் கிளைப்பாக இருந்த நெல்லிமரத்துபட்டி 1990 ஆம் ஆண்டு தருமபுரியின் கிளை பங்கானது. 2009 ஆம் ஆண்டு நெல்லிமரத்துபட்டி தனி பங்காக உயர்த்தப்பட்டது. 

புதிய பேராலயப் பணிகள்:

தருமபுரி மறைமாவட்ட தற்போதைய ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் முயற்சியால், அண்ணாசாகரம் சாலையில் உள்ள குருத்துவபயற்சி பள்ளி அருகில் உள்ள நிலத்தில், பேராலயம் கட்ட திட்டம்தீட்டப்பட்டு, ஆலயக் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆலய கட்டுமானப் பணிகளுக்கு நன்கொடை வழங்குவோர் https://www.dharmapuridiocese.org வலைதளத்தில் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில், உங்கள் தாராள நிதியை வழங்கலாம். 

பள்ளிகளின் வரலாறு:

1966 ஆம் ஆண்டு அதியமான் புறவழிச்சாலையில், SMMI சகோதரிகளால் நிலம் வாங்கப்பட்டது. அந்த நிலத்தில் 1968ல் கன்னியர்கள் இல்லம், 1971 முதல் மருத்துவமனையும், அரசு உதவி பெறும் துவக்க பள்ளியும் துவங்கப்பட்டது. 

தருமபுரி நகரில் நேதாஜி பைபாஸ் சாலையில், பங்குத்தந்தை இல்லத்தில் இயங்கி வந்த அமலா ஆங்கிலப்பள்ளி, 1971 ஆண்டில் விமல்புரத்திற்கு மாற்றப்பட்டது. மீண்டும் 1976 ஆம் ஆண்டிலிருந்து தருமபுரி அரசு மருத்துவமனையின் பின்புறம் செயல்பட ஆரம்பித்தது. ஆரம்பப் பள்ளியானது 1998 ஆம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளியாகவும், 2008 முதல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

தருமபுரி மறைமாவட்ட முதல் ஆயர் அவர்களின் அழைப்பை ஏற்று, 2005ஆம் ஆண்டில் சலேசியன் சகோதரர்கள் தருமபுரி -பென்னாகரம் சாலையில் தங்கள் பள்ளி நிறுவனங்களை துவங்கினர்.

கல்வி நிறுவனங்கள் :

டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி

டான் போஸ்கோ ஆசிரியர் பயிற்சி பள்ளி (Sales)

டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளி (Sales)

டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Sales)

அமலா தொடக்கப்பள்ளி (SMMI)

அமலா மேல்நிலைப்பள்ளி (SMMI)

ஆக்சிலியம் மெட்ரிகுலேஷன் பள்ளி (Sale. Sist.)

பங்கில் உள்ள கன்னியர்கள்: 

SMMI சகோதரிகள்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருள்பணி. குருவில்லா தாமஸ் (1968-1974)

2. அருள்பணி. ஐசக் P.J (1975-1978)

3. அருள்பணி. A.L. இருதயம் (1979-1980)

4. அருள்பணி. K.S. பயஸ் (1980-1981)

5. அருள்பணி. A.X. இருதயம் (1981-1982)

6. அருள்பணி. பீட்டர் பிரான்சிஸ் (1983-1984)

7. அருள்பணி. A. பிலவேந்திரம் (1984-1987)

8. அருள்பணி. S. பிரான்சிஸ் சேவியர் (1987-1989)

9. அருள்பணி. I. மரியசூசை (1989-1993)

10. அருள்பணி. D. தேவசகாயம் (1993-1995)

11. அருள்பணி. R. மாசிலாமணி (1995-1996)

12. அருள்பணி. A. ஜோசப் (1996-2003)

13. அருள்பணி. N.S. இருதயநாதன் (2003-2004)

14. அருள்பணி. P. சேவியர் (2004-2012)

15. அருள்பணி. A. மதலைமுத்து (2012-2017)

16. அருள்பணி. ஆரோக்கியசாமி (2017-2018)

17. அருள்பணி. இசையாஸ் (2019-2020)

18. அருள்பணி. அருள்ராஜ் (2020 முதல்)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருள்பணி. அருள்ராஜ் அவர்களின் மேற்பார்வையில், உதவி பங்குத்தந்தை அருள்பணி. ஆரோக்கிய பிரதீப் அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி மற்றும் ஆலய உபதேசியார் திரு. கென்னடி ஆகியோர்.