புனித சூசையப்பர் ஆலயம்
இடம்: சன்னியாசிகுண்டு, கிச்சிப்பாளையம் அஞ்சல், சேலம் தாலுகா 636015
மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : சேலம்
நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருட்பணி. A. ஆரோக்கிய டேவிட்.
குடும்பங்கள் : 225
அன்பியங்கள் : 10
திருப்பலி கால அட்டவணை :
ஞாயிறு திருப்பலி :
காலை 08.30 மணி
வாரநாட்களில் திருப்பலி :
காலை 06.30 மணி
புதன்கிழமை மாலை 06.30 மணி - புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி.
சனிக்கிழமை மாலை 06.30 மணி - சகாயமாதா நவநாள் திருப்பலி.
பங்குத்திருவிழா : மே மாதம் முதல் தேதி தொழிலாளரான புனித சூசையப்பர் திருவிழா - தொழிலாளர் தினம்.
புனித செபஸ்தியார் திருவிழா: சாம்பல் புதனுக்கு முந்தைய ஞாயிறு.
பங்கில் இறையழைத்தல் :
1. அருட்திரு. சிரில் சுரேஷ், SJ.
2. அருட்சகோதரி. ஜெஸ்சி, FSJ.
3. அருட்சகோதரி. C. ஜூலி, FSJ
வழித்தடம் :
1. சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வழியாக இவ்வாலையம் வந்து அடையலாம்.
2. சீலநாயக்கன்பட்டி to உடையாபட்டி பைபாஸ் வழித்தடத்தில் சன்னியாசிகுண்டு மெயின் ரோடு (சிவா காபிபார்) திரும்பினால் இவ்வாலையம் வந்து அடையலாம்.
மின்னஞ்சல் முகவரி:
salemst.josephchurch@gmail.com
ஆலய இணையத்தளம் :
https://ta.salemstjosephchurch.com
Location map : St. Joseph’s Church, Sannyasigundu Main Road, Salem, TamilNadu 636 015.
https://maps.app.goo.gl/qLNbyi2T9pUT2Ud16
வரலாறு :
சேலம் மாநகரின் தென் கிழக்கு விளிம்பில், மலைகள் சூழ இயற்கை எழிலுடன் அமைந்துள்ள இவ்வூருக்குச் சன்னியாசிகுண்டு என்ற பெயர் வர ஒரு சிறிய வரலாறு உண்டு.
இப்பகுதியில் உள்ள ஒரு குன்றின் அடிவாரத்தில் இஸ்லாமிய சன்னியாசி ஒருவர் தவமிருந்த வேளையில், காற்று வீசி மழை பெய்ய, ஒருபெரிய பாறை உருண்டு வந்து அவர் மீது விழும் தருவாயில், அதை அவர் தன் தவ வலிமையால் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது . எனவே இப்பகுதி சன்னியாசி குன்று என்று அழைக்கப்பட்டு நாளடைவில் இப்பெயர் சன்னியசிகுண்டு என்று மருவியுள்ளது.
1920 முதல் 1940 வரை பல பங்குகளிலிருந்து வேலை தேடி சேலம் வந்த கிறிஸ்துவர்கள் சன்னியசிகுண்டு மற்றும் கிச்சிபாளையம் ஆகிய இடங்களில் குடியேறினார்கள். முதலில் புனித செபஸ்தியார் குருசடி அமைத்தும் பின்பு கீற்று கொட்டகை அமைத்தும் தங்கள் ஆலய வழிபாட்டை நடத்தி வந்தார்கள்.
1956 ஆம் ஆண்டு அருட்திரு. உர்மாண்ட் அவர்களின் முயற்சியால் ஒரு சிறிய ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 1957 ஆம் ஆண்டு இவ்வாலயம் அப்போதைய ஆயர் மேதகு. செல்வநாதர் அவர்களால் மந்திரிக்கப்பட்டு செவ்வாய்பேட்டை பங்கின் கிளைப்பங்காக உருவாக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு முதல் நெத்திமேடு திரு இருதய சபைக் கன்னியர்கள் இங்கு வந்து பணியாற்றினர். அதே சமையத்தில் அன்னை தெரசா சபையைச் சேர்ந்த MC சகோதரர்கள் இங்கு வந்து பணிசெய்யத் தொடங்கினர்.
1989 ஆம் ஆண்டு சலேசிய சபையைச் சேர்ந்த அருட்திரு. சுலுஸ் அடிகளார் தற்போது ஆலயம் அமைந்துள்ள நிலத்தை வாங்கினார். மேலும் குருக்கள் தங்க ஓர் இல்லத்தையும் கட்டினார்.
1990 ஆம் ஆண்டு செவ்வாய்பேட்டை பங்கிலிருந்து சன்னியாசிகுண்டு பிரிக்கப்பட்டு தனிப் பங்காக உருவானது. அருட்திரு. சுலுஸ் அவர்கள் இப்பங்கின் முதல் பங்குத் தந்தையானார். 05.12.1994 அன்று தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டப்பட்டு அப்போதைய ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. தற்போது 225 கத்தோலிக்கக் கிறிஸ்தவ குடும்பங்களைக் கொண்ட இப்பங்கு, புனித சூசையப்பர் ஆலயத்தை மையமாகக் கொண்டு மக்களின் ஆன்மீக தேவைகளை நிறைவு செய்து வருகிறது.
பங்கில் பணியாற்றிய அனைத்து பங்குத்தந்தையர்களின் முயற்சியால் அன்பியங்கள் மற்றும் மறைக்கல்வி பயிற்சிகள் மக்களின் ஆன்மீகத்திற்கு உறுதுணையாக உள்ளன. பங்கில் பங்கு ஆலோசனைக்குழு, பீடச்சிறுவர் சிறுமியர் குழு, கண்மணிகள் இயக்கம், சிறுவழி இயக்கம், இளைஞர் குழு, மரியாயின் சேனை, வின்சென்ட்-தே-பால் சபை , பாடற்குழு மற்றும் 10 அன்பியங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அன்பியங்கள் வழியாக பங்குக்குழு உருவாக்கப்பட்டு செயல்படுகின்றது. அன்பியங்கள் வழியாக விசுவாச உறுதி, அருள் அடையாளங்களில் பங்கேற்பு, தாறு மாறு திருமணங்களைச் சரி செய்தல், ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி போன்ற மாபெரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பங்கில் சிறப்பு நிகழ்வுகளாக தவக்காலப் பாத யாத்திரை, அன்பிய ஆண்டு விழா, உலகத் தொடர்பு நாள் பொது நிலையினர் ஞாயிறு, விவிலிய வார விழா, மறைப்பரப்பு ஞாயிறு, பசிப்பிணி ஒழிப்பு ஞாயிறு, ஞாயிறு மறைக்கல்வி, தியானங்கள் ஆகியவை நடைபெறுகின்றன. விசுவாச கோபுரம் என்ற பெயரில் புதிய ஆலய மணி கோபுரத்தை அன்பியங்களின் அயரா உழைப்பாலும், பொருளாதார உதவியாலும் அருட்திரு. I.கிரகோரிராஜன் கட்டியுள்ளார். நற்கருணை ஆண்டை முன்னிட்டு இயேசுவின் முகத்தோடு கூடிய 7 அடி நற்கருணை கதிர் பாத்திரம் மறைமாவட்டத்திலேயே முதல்முறையாக ஆலயமணி கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவ மாணவியருக்கு மாலை நேர இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆயரின் ஆலோசனையை ஏற்று அன்பிய வழியில் பங்கில் ஏழை எளிய மாணவ மாணவியரின் கல்வி நிதி திரட்டப்பட்டு ரூ.10000/- வைப்பு நிதியில் உள்ளது. இதன் வட்டி ஏழை குழந்தைகளின் கல்வி உதவிக்கு பயன்படுத்தப் படுகிறது.
2011 ஆம் ஆண்டு அருட்திரு. M. கிறிஸ்துராஜ் அவர்கள் ஆலய பீடத்தின் தளத்தை கிரானைட் கற்களால் அழகுப்படுத்தினார்.
01.05.2018 அன்று ஆலய வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆலய நுழைவாயில், உள்வழியில் பேவர் பிளாக், கொடிக்கம்பம் ஆகியவை நிறுவப்பட்டது. இந்த பணிகளை அருட்திரு. சி. சகாயராஜ் அவர்கள் மிகச்சிறப்பாக செய்து முடித்தார்.
பங்கிற்காக கல்லறைத்தோட்டம் சுற்று சுவர் அமைப்பதற்கு பல முயற்சிகள் இப்போது நடைபெற்று வருகிறது.
பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:
1.அருட்திரு சுலுஸ் (1990 – 1991)
2.அருட்திரு டொமோனிக்ராஜா (1991 – 1994)
3.அருட்திரு R. சேவியர் (1994 – 1995)
4.அருட்திரு A. இரட்சகராஜா (1995 – 1997)
5.அருட்திரு S. இருதயசெல்வம் (1997 – 1998)
6.அருட்திரு A. செபாஸ்டின் (1998 – 1999)
7.அருட்திரு T. மாணிக்கம் (1999 – 2000)
8.அருட்திரு S . புஷ்பநாதன் (2000 – 2001)
9.அருட்திரு I. கிரகோரி ராஜன் (2001 – 2008)
10.அருட்திரு T.மாணிக்கம் (2008 – 2009)
11.அருட்திரு S. செபாஸ்டின் (2009 – 2010)
12.அருட்திரு M. கிறிஸ்துராஜ் (2010 – 2012)
13.அருட்திரு N. அருள்சுந்தர் (2012 – 2013)
14.அருட்திரு C. சகாயராஜ் (2013 – 2018)
15.அருட்திரு A. ஆரோக்கிய டேவிட் (2018 முதல் தற்போது வரை)
பங்கில் பணிபுரியும் துறவர இல்லங்கள்:
1. அன்னை தெரசா அன்பு இல்லம் - MC சகோதரர்கள்.
2. FSJ அருட்சகோதரிகள் இல்லம்.
பங்கில் செயல்படும் கல்வி நிறுவனம்:
புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி,
(மறைமாவட்ட நிர்வாகம்).
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1.பங்குப்பேரவை
2.இளையோர் இயக்கம்
3. பாலர்சபை
4. மரியாயின் சேனை
5. புனித வின்சென்ட் தே பவுல் சபை
6. அன்பியங்கள்
7. இசைக்குழு
8. பீடச்சிறுவர்கள் இயக்கம்
9. மறைக்கல்வி.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. ஆரோக்கிய டேவிட் அவர்கள் மற்றும் செல்வன் F. இன்ஃபன்ட் ராஜ்.