442 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கம்பம்

   

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : கம்பம்

மாவட்டம் : தேனி
மறைமாவட்டம் : மதுரை உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : தேனி

நிலை : பங்கு

கிளைப்பங்குகள் : 7

1. குழந்தை இயேசு ஆலயம், லோயர்கேம்ப் 2. புனித சூசையப்பர் ஆலயம், கூடலூர்
3. கார்மல் அன்னை ஆலயம், ஆங்கூர்பாளையம்
4. திருக்குடும்ப ஆலயம், குள்ளப்பக்கவுண்டன் பட்டி
5. இடைவிடா சகாய அன்னை ஆலயம், கருநாக்கமுத்தன்பட்டி
6. புனித அந்தோணியார் ஆலயம், நாராயணதேவன்பட்டி
7. வழித்துணை மாதா குருசடி, குமுளி அடிவாரம்.

பங்குத்தந்தை : அருட்பணி. கொ. இளங்கோவன் அற்புதராஜ்

குடும்பங்கள் : 227
அன்பியங்கள் : 7

திருப்பலி நேரங்கள் :

பங்கு ஆலயம்:

ஞாயிறு காலை 07.30 மணி
மாதத்தின் முதல் ஞாயிறு : காலை 08.00 மணி

திங்கள், செவ்வாய், புதன் : காலை 06.30 மணி

புதன் : மாலை 06.30 மணி அன்பியத் திருப்பலி

வியாழன் : காலை 06.30 மணி கன்னியர் இல்லத்தில் திருப்பலி

வெள்ளி, சனி : மாலை 06.30 மணி

கிளை கிராமங்கள் :

லோயர்கேம்ப் : திங்கள் மாலை 06.30 மணி
குள்ளப்பகவுண்டன்பட்டி: செவ்வாய் மாலை 07.00 மணி
நாராயணத்தேவன்பட்டி: வியாழன் மாலை 06.30 மணி
வழித்துணை மாதா குருசடி: 4 வது சனி மாலை 04.00 மணி

கூடலூர்: ஞாயிறு காலை 09.45 மணி

ஆங்கூர்பாளையம்: ஞாயிறு காலை 11.00 மணி

கருநாக்கமுத்தன்பட்டி: ஞாயிறு மாலை 7.00 மணி

திருவிழா : செப்டம்பர் மாதம் 7, 8.

வழித்தடம் : தேனி – கம்பம் - கே.கே.பட்டி சாலை.

வரலாறு :

கி.பி 1890 களில் சிலுக்குவார்பட்டி பங்கிலிருந்து அனுமந்தன்பட்டி பங்குத்தளமானது தனியாக பிரிக்கப்பட்டது. அக்கால கட்டங்களிலேயே கம்பம், கூடலூர் போன்ற பகுதிகளில் விசுவாச விதை தூவப்பட்டுள்ளது.

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்த கூடலூர் புனித சூசையப்பர் சிற்றாலயம் மேற்சொன்ன கூற்றை உண்மையாக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. கம்பம் பகுதியிலும் ஏறக்குறைய இதே காலகட்டங்களில் சிறு குடிசையிலே (அப்போதிருந்த அல்போன்ஸ் பள்ளி கட்டிடம்) வழிபாடுகள் நடைபெற்று வந்துள்ளன.

கம்பம் பகுதியில் இறைமக்கள் எண்ணக்கை பெருகியதாலும், வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றாலயம் மிகவும் பழுதடைந்ததாலும், 1991 ஆம் ஆண்டு அருட்பணி. வி.மி. சார்லி அவர்கள் அனுமந்தன்பட்டியின் பங்குத்தந்தையாக இருந்தபோது, கம்பம் -காமாயக்கவுண்டன்பட்டி சாலையில் புதிய ஆலயத்திற்கான அடிகல் நாட்டப்பட்டது. அவருக்குப்பின் பங்குப்பொறுப்பேற்ற அருட்பணி. யா. ஆரோக்கியம் அவர்கள் காலத்தில் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 1996 -ம் ஆண்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயமானது கட்டி முடிக்கப்பட்டது.

கிளை கிராமங்கள் அதிகமாக இருந்தபடியினாலும், வேலைப்பளுவினாலும் தொடர்ச்சியாக வழிபாடுகள் மற்றும் திருவருட்சாதனங்கள் இப்பகுதிக்கு வழங்கமுடியா நிலை உருவாகவே, கம்பம் பகுதி இறைமக்கள் ஆன்மீகப் பட்டினி கிடக்கவேண்டிய நிலை உருவானது.

தொடர்ந்து பணிப்பொறுப்பேற்ற அருட்பணியாளர்கள் ஜேம்ஸ் பால்ராஜ், ஜோசப் அந்தோணி, ஜோசப் ஆரோக்கியராஜ் ஆகியோர் கரிசனையோடு இப்பகுதி இறைமக்களுக்கு இயன்ற பணிகளைச் செய்தார்கள்.

2008 ஆம் ஆண்டில் பணிபொறுப்பேற்ற அருட்பணி. பீட்டர் சகாயராஜ் அவர்கள் காலத்தில் கிளைக் கிராமங்களுக்கு ஞாயிறு திருப்பலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு, கம்பம் ஆலயமும் வெள்ளையடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அருட்பணி. ஆ. அந்தோணிசாமி அவர்களின் பணிக்காலத்தில் இப்பகுதி மக்களின் ஆன்மீக மற்றும் இதர வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு தனிப்பங்காக பிரிக்கப்படுவதற்கான முறையான பணிகள் மேற்கொள்ளப் பட்டன. 2016 ஜூன் 05 ஆம் நாள் கம்பம் தூய ஆரோக்கிய அன்னை ஆலயமானது தனிப்பங்காக அறிவிக்கப்பட்டது.

இப்புதிய பங்கானது இதுவரை அனுமந்தன்பட்டி பங்கின் கிளைப்பங்குகளாக இருந்த ஆங்கூர்பாளையம், கூடலூர், லோயர்கேம்ப், வழித்துணைமாதா கோவில் ஆகிய கிராமங்களையும், இராயப்பன்பட்டி பங்கின் கிளைப்பங்குகளாக இருந்த காமயகவுண்டன் பட்டி, நாராயணதேவன் பட்டி, கருநாயக்கமுத்தன் பட்டி, குள்ளப்பகவுண்டன் பட்டி ஆகிய கிராமங்களையும் தனது கிளைப்பங்குகளாகக் கொண்டுள்ளது.

கிழக்கே காமயக்கவுண்டன்பட்டி அருகே உள்ள வட்டாறு, மேற்கே தமிழக – கேரள எல்லையான கம்பம் மெட்டு, வடக்கே கோசேந்திரன் ஓடை மற்றும் தெற்கே தமிழக கேரள எல்லையான குமுளி ஆகியவை இப்புதிய பங்கின் எல்லைகளாகும்.

தூய ஆரோக்கிய அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட இப்புதிய பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. அ. அலெக்ஸ் ஞானராஜ் பொறுப்பேற்றார். பங்குத்தளத்திற்கான அனைத்துக் கட்டமைப்புகளையும் தன்னுடைய கடின உழைப்பாலும் முயற்சியாலும் உருவாக்கினார். குறிப்பாக பங்கு அருட்பணிப் பேரவை, அன்பியங்கள், பங்கு ஆலயம் புதுப்பித்தல் சிறந்த சான்றாகும்.

அவரை தொடர்ந்து பங்கின் தற்போதைய பங்கு அருட்பணியாளராக பொறுப்பேற்ற அருட்பணி. இளங்கோ, மக்களின் முழு ஒத்துழைப்போடு ஆலய நிலங்களெல்லாம் முறைப்படுத்தப்பட்டன. லோயர்கேம்ப் மற்றும் நாராயணதேவன்பட்டி ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன. இயற்கை எழில் கொஞ்சும் கம்பம் பங்குத்தளமானது, இறையாட்சி பணித்தளமாக, ஆரோக்கிய அன்னையின் பாதுகாவலிலும் வழிநடத்தலிலும் பல்வேறு அற்புதங்களை அன்னையின் வழியாக தங்கள் வாழ்வில் அனுபவித்து, சாட்சியாக வாழும் மக்களின் ஒத்துழைப்போடு, வளர்ச்சியை நோக்கி 5 ஆம் ஆண்டை தொடங்கி உள்ளது.