இடம் : மங்களம் கொம்பு, கொடைக்கானல். 624216.
மாவட்டம் : திண்டுக்கல்
மறைமாவட்டம் : மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம் : கொடைக்கானல்
பங்குத்தந்தை: அருள்பணி. S. V. ஆரோக்கிய ராஜ், SDM
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. பண்ணை மாதா ஆலயம், பண்ணைக்காடு
2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மஞ்சள்பரப்பு
3. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், வெள்ளரிக்கரை
4. புனித மார்த்தினார் ஆலயம், பெரியூர்
5. மஞ்சள்பரப்பு (ஆலயம் இல்லை, இல்லத்தில் திருப்பலி நடைபெறும்)
6. குப்பம்மாள்பட்டி (ஆலயம் இல்லை, இல்லத்தில் திருப்பலி நடைபெறும்)
குடும்பங்கள்: 90
1. மங்களம் கொம்பு...30
2. பண்ணைக்காடு..5
3. பெரும்பாறை...15
4. மஞ்சள் பரப்பு..20
5. வெள்ளி கரை...5
6. பெரியூர்..15
அன்பியங்கள் : 3
1. புனித அந்தோனியார்.... மங்களம் கொம்பு பங்கு
2. புனித ஆரோக்கிய அன்னை அன்பியம்..... மஞ்சள் பரப்பு
3. புனித மார்த்தினார் அன்பியம்... பெரியூர்
வழிபாடு நேரங்கள்:
பங்கு ஆலயத்தில்
ஞாயிறு திருப்பலி: காலை 08.30 மணி
செவ்வாய் மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி
வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணி
முதல் வெள்ளிக்கிழமை : மாலை 06.30 மணிக்கு செபவழிபாடு, நற்கருணை ஆராதனை, திருப்பலி
கிளைப் பங்குகளில் திருப்பலி :
1. பண்ணைக்காடு... திங்கள், வெள்ளி : காலை 06.30 மணி
2. மஞ்சள் பரப்பு.... சனிக்கிழமை மாலை 06.30 மணி
3. பெரும்பாறை... வியாழக்கிழமை மாலை 06.30 மணி
4. பெரியூர்... புதன் மாலை 06.30 மணி
வியாழக்கிழமை காலை 06.30 மணி
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு.
திருவிழா: ஜூன் 13 -ஆம் தேதியை மையமாக வைத்து ஏழு நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. Sr. ஜோஸ்பின் சுமதி, DMI
2. Sr. மரியா, SJC
3. Sr. லூர்து மேரி, FSPM
வழித்தடம் : வத்தலக்குண்டு -தாண்டிக்குடி.
நிறுத்தம் : மங்களம் கொம்பு.
வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் மங்களம் கொம்பு அமைந்துள்ளது.
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 54 கி.மீ.
Location map : St. Antony's Church (RC)
Dindigul, Tamil Nadu 624216
https://maps.app.goo.gl/mcQPzCeqEjtuyYVbA
வரலாறு:
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மறைவட்டம் கீழ் பூமி பகுதியில் அமைந்துள்ளது மங்களம் கொம்பு. இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் விண்ணைத்தொடத் துடிக்கும் உயர்ந்த மரங்களும், காபி, ஏலக்காய், மிளகு, மலைவாழை, அவக்கடா போன்ற பணப்பயிர்களால் வளமையான விவசாய பூமி தான் இந்த மங்களம் கொம்பு.
ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட கிறித்தவ மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இயேசு சபையினர் தீர்மானித்து தங்களது மணலூர் காபி தோட்டத்தில் இல்லமும், வேலையும் கொடுத்து மக்களை பராமரித்து வந்தார்கள்.
மணலூர் காபி தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு சில குடும்பங்களின் ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்ய 50 ஆண்டுகளுக்கு முன் அருட்பணி. இக்னேஷியஸ், SJ அவர்கள் சிற்றாலயம் ஒன்றைக் கட்டி மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு ஜான் லெயனார்ட் ஆண்டவரால் புனிதப் படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் இயேசு சபையினர் மதுரை உயர்மறைமாவட்ட பேராயரிடம் இந்த பகுதியில் ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்ய கேட்டுக்கொண்டனர்.
கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே அவர்களின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மணலூர் காபி தோட்டத்தில் வேலை செய்த பல குடும்பங்கள் மங்களம் கொம்பில் குடியேறியதால் அருட்பணி. சூசை மைக்கேல் ராஜ் அவர்கள், பெரிய ஆலயத்தைக் கட்டி பேராயர் மரியானுஸ் ஆரோக்கிய சாமி ஆண்டகை அவர்களால் 08.03.1996 அன்று புனிதப் படுத்தி திறந்து வைக்கப்பட்டது.
மங்களம் கொம்பு மற்றும் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்த பகுதிகள் பெருமாமலை பங்கில் இணைக்கப்பட்டது. அருட்பணி. அந்தோணிசாமி அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றினார்.
பெருமாமலை பங்கில் இருந்து ஏறக்குறைய 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்களம் கொம்பு மற்றும் கிளை கிராமங்களை அடிக்கடி சந்திக்க முடியாத காரணத்தால், மங்களம் கொம்பை பேராயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் தனிப்பங்காக செயல் பட 2004 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். அதனால் பண்ணைக்காடு, தாண்டி குடி, மணலூர், பெரும்பாறை, மஞ்சள் பரப்பு, வெள்ளரிக்கரை, பெரியூர், குப்பம்மாள்பட்டி பகுதியில் வசித்த கத்தோலிக்க கிறித்தவர்கள் இப்பங்கில் இணைந்தார்கள். இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. பிரிட்டோ ராஜா சுரேஷ் அவர்கள் 2004 முதல் 2009 வரை பணி செய்தார்.
இவர் காலத்தில் புதிய பங்குத்தந்தை இல்லம் அருட்பணி. அந்தோணிசாமி அவர்களின் துணையோடு கட்டப்பட்டது. மேலும் அருட்பணி. பிரிட்டோ ராஜா சுரேஷ் அவர்களால் 26/03/2007 இல் பீடம் புதுப்பிக்கப்பட்டு பேராயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் புனிதப் படுத்தப்பட்டது.
அவருக்கு பின் அருட்பணி. ஜெரோம் ஏரோணிமுஸ் பங்குத்தந்தையாக 2009 முதல் 2010 வரை செயல்பட்டார்.
அவருக்கு பின் SDM ( புனித யூஜின் தே மாசனெட் சபை ) சபையினரிடம் இப்பங்கு ஒப்படைக்கப்பட்டது. அருட்பணி. அருள் சேவியர் SDM அவர்கள், 2010 முதல் 2013 வரை பங்குத்தந்தையாக செயல்பட்டார். இவர் காலத்தில் புனித அந்தோனியார் கெபி கட்டப்பட்டு மேதகு பீட்டர் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இவருக்கு பின் அருட்பணி. S. V. ஆரோக்கிய ராஜ் SDM அவர்கள் 2013 இல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று இன்றுவரை செயல்பட்டு வருகிறார்.
இவர் புனித அந்தோனியார் கெபியை 2017 இல் உயர்த்தி கட்டி ஆலய மணிக்கூண்டு அமைத்தார். ஆலயப்பீடம் புதுப்பிக்கப்பட்டது.
2018 இல் மஞ்சள் பரப்பு கிளைப்பங்கில் ஆலயம் கட்ட பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்கள் இடம் வாங்கி தந்தார்கள். புனித ஆரோக்கிய அன்னைக்கு ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது.
மக்களின் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
மின்சார தேவையை நிறைவு செய்ய சூரிய ஒளி மின்சார சாதனங்கள் பொருத்தப்பட்டது.
பங்கில் இருக்கும் துறவற சபைகள்:
1. இயேசு சபை, மணலூர்
2. புனித வளனாரின் பிரான்சிஸ்கன் சபை, பண்ணைக்காடு
3. திருக்குடும்ப சபை, மங்களம் கொம்பு
4. புனித வளனாரின் குளுனி சபை, பெரியூர்.
பங்கில் உள்ள கெபி மற்றும் குருசடிகள்:
1. புனித இடைவிடா சகாய மாதா கெபி, பண்ணைக்காடு
2. புனித வியாகுல மாதா கெபி, தடியன் குடிசை
3. புனித ஆரோக்கிய மாதா கெபி, வெள்ளி கரை
4. புனித ஆரோக்கிய மாதா கெபி, பெரியூர், ஆசாரிபட்டி
5. புனித ஆரோக்கிய அன்னை கெபி, மணலூர்.
பங்கில் உள்ள நிறுவனங்கள் :
1. ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிகுலேஷன் பள்ளி, பண்ணைக்காடு
2. திருக்குடும்ப மருத்தவ மனை, மங்களம் கொம்பு
3. சூசையப்பர் மருத்துவமனை, பெரியூர்.
பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:
1. பீடப்பூக்கள்
2. மறைக்கல்வி அமைப்பு
3. புனித வின்சென்ட் தே பவுல் சபை.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. இக்னேஷியஸ், SJ
2. அருட்பணி. சூசை மைக்கேல் ராஜ்
3. அருட்பணி. பிரிட்டோ ராஜா சுரேஷ்... (2004 - 2009)
4. அருட்பணி. ஜெரோம் ஏரோணிமுஸ்... (2009 - 2010)
5. அருட்பணி. அருள் சேவியர், SDM....(2010-2013)
6. அருட்பணி. S V. ஆரோக்கிய ராஜ், SDM.. (2013 முதல் தற்போது வரை)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கிய ராஜ், SDM.