849 புனித சவேரியார் ஆலயம், சோலைபட்டி

   

புனித சவேரியார் ஆலயம்

இடம்: சோலைபட்டி -ஜெகநாதபுரம், ஏழாயிரம்பண்ணை, 626201

மாவட்டம்: விருதுநகர்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விருதுநகர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஒத்தையால்

பங்குத்தந்தை அருட்பணி. L. ஜெயராஜ், MSFS 

குடும்பங்கள்: 15

அன்பியங்கள்: 2

புனித சவேரியார் அன்பியம்

புனித சகாய மாதா அன்பியம்

மாதத்திற்கு ஒருமுறை மாலையில் திருப்பலி, நற்கருணை ஆசீர்.

நாள்தோறும் மாலையில் ஜெபமாலை, புனித சவேரியார் ஜெபவழிபாடு

திருவிழா: மே மாதம் இரண்டாம் வாரம்

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரி. M. ஜோஸ்பின் வினிதா, SMMI

வரலாறு:

மதுரை உயர் மறைமாவட்டத்தில் இருந்து இயேசு சபை குருக்கள், சாத்தூர் பங்கை மையமாகக் கொண்டு மறைப்பரப்பு பணி செய்து வந்ததின் காரணமாக, சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

சாத்தூரின் ஒருபகுதியாக சாத்தூர் -ஏழாயிரம்பண்ணை மாநிலம் நெடுஞ்சாலையின் மேற்கு திசை கிராமங்களான, ஏழாயிரம்பண்ணை மற்றும் மடத்துப்பட்டி போன்ற கிராமங்களில் கத்தோலிக்க விசுவாசம் அதிகமாக பரவி வந்த காலகட்டத்தில், ஏழாயிரம்பண்ணைக்கு அருகில் உள்ள சிறிய குக்கிராமமான சோலைபட்டியில் ஒருசில மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வந்தனர். ஆலயம் இல்லா இம்மக்கள் ஊரின் பொது இடங்களில் இறைவழிபாடு செய்து வந்தனர்.

சோலைபட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் தங்களின் ஆன்மீக காரியங்களுக்காகவும், ஞாயிறு திருப்பலியில் பங்கேற்கவும் ஏழாயிரம்பண்ணை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் மற்றும் தென்திசையில் உள்ள மடத்துப்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்திற்கும் சென்று வந்தனர்.

சோலைபட்டி கிராமத்தில் எப்போதாவது  பொதுஇடங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

சோலைப்பட்டியில் ஒரு ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று இம்மக்கள் பெரிதும் ஆவல் கொண்டு, அதற்காக தன்னலம் பாராது முயற்சி செய்து, 2011 ஆம் ஆண்டு ஆலயம் கட்ட நிலம் வாங்கப்பட்டது.

2010 முதல் 2012 வரை ஒத்தையால் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. ஸ்டீபன் சேவியர் அவர்களின் முயற்சியால், சோலைப்பட்டி மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டப்பட்டு, 11.08.2012 அன்று மறைவட்ட முதன்மை குரு அருட்பணி. ஞானப்பிரகாசம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, ஒத்தையால் பங்கின் 11-வது கிளைப்பங்காக செயல்பட்டு வருகிறது.

வழித்தடம்: 

சாத்தூர் -ஏழாயிரம் பண்ணை.

கோவில்பட்டி -ஏழாயிரம் பண்ணை. 

ஏழாயிரம்பண்ணைக்கு மிக அருகில் இவ்வூர் அமைந்துள்ளது.

Map location: https://maps.app.goo.gl/TLxB5q3MnQBpLdFo8

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பில் உதவி: பங்குத்தந்தை அருட்பணி. ஜெயராஜ் அவர்களின் வழிகாட்டலில் ஆலய பொறுப்பாளர் திரு. M. விமல் பிரபு.

புகைப்படங்கள் மற்றும் தகவல்கள்:  புல்லக்கவுண்டன்பட்டி ஆலய உபதேசியார் V. சசி (எ) சாலமோன் ராஜா.