416 புனித பெரியநாயகி மாதா ஆலயம், பெரிய தம்பி உடையான்பட்டி


புனித பெரியநாயகி மாதா ஆலயம்

இடம் : பெரிய தம்பி உடையான் பட்டி

மாவட்டம் : புதுக்கோட்டை
மறை மாவட்டம் : திருச்சி
மறை வட்டம் : கீரனூர்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சந்தியாகப்பர் ஆலயம், இராவுசாப்பட்டி

பங்குத்தந்தை : அருட்பணி. தார்சியுஸ் MSFS

குடும்பங்கள் : 160
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு

ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் இரவு 08.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஈஸ்டர் பெருவிழா முடிந்த எட்டாம் நாளில்.

மண்ணின் மைந்தர்கள் :

1. Fr. சகாயராஜ்
2. Fr. சவரிராஜ்
3. Fr. மனோகரன்தாஸ்

1. Sr. அருள்மேரி
2. Sr. ராணி
3. Sr. ரீட்டா மேரி
4. Sr. புனிதா
5. Sr. சேசு ஆரோக்கிய மேரி
6. Sr. பபியோனா
7. Sr. ஆரோக்கிய அனிதாபிரபா

வழித்தடம் : புதுக்கோட்டை -தஞ்சை சாலையில் பெருங்களுர் நிறுத்தத்திலிருந்து. உட்கிராமம் 5 கிமீ.

Location map : 10°31'13.9"N 78°55'18.9"E

ஆலய முகவரி : பெரியதம்பி உடையான்பட்டி, அண்டக்குளம் அஞ்சல், குளத்தூர் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம், 622203.

வரலாறு :

அழகிய கிராமமான பெரியதம்பி உடையான் பட்டியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓடு போட்ட ஆலயம் கட்டப்பட்டு, புனித பெரியநாயகி மாதாவை பாதுகாவலாகக் கொண்டு, ஆவூர் பங்கின் கிளைப் பங்காக இருந்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் சிலுவை வடிவில் இரண்டாவதாக ஒரு ஆலயம் கட்டப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு நாஞ்சூர் பங்கின் கிளையாகவும்,
பின்னர் கிள்ளுக்கோட்டை பங்கின் கிளைப் பங்காக ஆனது. இதனைத் தொடர்ந்து இராவுசாப்பட்டி பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

புனித பெரியநாயகி மாதாவின் அருளால் எண்ணற்ற அற்புதங்கள் நடந்து வந்ததால், இறை மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே புதிய ஆலயம் கட்டப்பட்டு 24.02.2008 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

இன்று புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டதன் 12 வது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. தார்சியுஸ் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது பெரியதம்பி உடையான் பட்டி இறை சமூகம்.