624 புனித பதுவை அந்தோணியார் ஆலயம், கல்லடிதிடல்

    

புனித பதுவை அந்தோணியார் ஆலயம் 

இடம் : கல்லடிதிடல், கல்லடிதிடல் அஞ்சல், 623401

மாவட்டம் : சிவகங்கை 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : RS மங்கலம் 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் :

1. புனித வியாகுல அன்னை ஆலயம், திருகள்ளி 

2. புனித அருளானந்தர் ஆலயம், வடக்கு விசவனூர் 

3. புனித சவேரியார் ஆலயம், சூரியன்கோட்டை

4. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆனந்தூர் 

புனித செபஸ்தியார் ஆலயம், கல்லடிதிடல் 

பங்குத்தந்தை : அருள்பணி. முனைவர். I. சார்லஸ் 

குடும்பங்கள் : 350 (கிளைப்பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள் : 10 (கிளைப்பங்குகள் சேர்த்து)

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி காலை 08.30 மணிக்கு

செவ்வாய் மாலை 07.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி, புனித அந்தோணியாரின் திருப்பண்ட ஆசீர் 

வியாழன், வெள்ளி மாலை 07.00 மணிக்கு திருப்பலி 

திருவிழா : ஜூன் மாதத்தில் 

வழித்தடம் : தேவகோட்டை - ஆனந்தூர் வழி, கல்லடிதிடல்.

மதுரை -ராம்நாடு வழி ஆனந்தூரில் இருந்து 5கி.மீ தொலைவில் கல்லடிதிடல். 

ராம்நாடு -RS மங்கலம் வழி கல்லடிதிடல். 

Location map : 

Kalladithidal, Tamil Nadu 623401

https://maps.app.goo.gl/H1fccH6kYCHvhvKY6

வரலாறு :

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகிய ஊர் கல்லடிதிடல். இங்கு அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயமானது சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது ஆகும். 

கல்லடிதிடல் 1834 ஆம் ஆண்டு பங்குத்தளமாக உருவெடுத்தது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. மேஏ, SJ அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். 

அருள்பணி. டெஸ்ஸால் அவர்கள் 1886 ஆம் ஆண்டில் புனித பதுவை அந்தோணியார் ஆலயத்தைக் கட்டினார். 

1987 ஆம் ஆண்டில் அருள்பணி. அலெக்ஸிஸ் அவர்களின் அயராத முயற்சியால் ஆலயத்தின் பின்பகுதி மற்றும் பீடப்பகுதி புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவு பெற்றது. 

2006 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்பணி. அகஸ்டின் இருதயம் அவர்களால் மறைமாவட்ட நிதியுதவியுடன், 2006 ஆம் ஆண்டு பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. 

மேலும் மறைமாவட்டம் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் பழைய ஆலயம் முழுவதையும் இடித்து விட்டு, அருள்பணி. அகஸ்டின் இருதயம் அவர்கள் புதிய ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். மேதகு ஆயர் S. சூசைமாணிக்கம் அவர்களால் 09.05.2010 அன்று இந்த ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது. 

2013 ஆம் ஆண்டு அருள்பணி. A. திரவியம் பணிக்காலத்தில் ஆலய சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. 

2017 ஆம் ஆண்டில் பணிப்பொறுப்பேற்ற தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. முனைவர் I. சார்லஸ் அவர்களின் முயற்சியால் 2018 ம் ஆண்டில் கல்லடிதிடல் புனித அந்தோணியார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. மேலும் பழுதடைந்த நிலையில் இருந்த புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியானது 2018 ல் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டதுடன், கிளைப் பங்கான ஆனந்தூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 2018 ல் புதுப்பிக்கப்பட்டு, ஆரோக்கிய மாதா கெபி மற்றும் ஆலயத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. 

கல்லடிதிடல் பங்கிலிருந்து CK மங்களம் 1967 ஆம் ஆண்டிலும், கொக்கூரணி 1968 ஆம் ஆண்டிலும், முத்துப்பட்டணம் 2013 ஆம் ஆண்டிலும் தனிப்பங்குகளாக உயர்த்தப் பட்டன. 

புனித அந்தோணியாரின் திருப்பண்டம் இவ்வாலயத்தில் உள்ளது. செவ்வாய்கிழமைகளில் நடைபெறும் புனித அந்தோணியார் நவநாள் திருப்பலியைத் தொடர்ந்து புனிதப் பண்ட ஆசீர் வழங்கப்படுகிறது. 

பங்கில் உள்ள கெபிகள் :

புனித ஆரோக்கிய மாதா கெபி, கல்லடிதிடல் 

புனித ஆரோக்கிய மாதா கெபி, ஆனந்தூர். 

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:

1. தூய அந்தோணியார் உயர் நிலைப் பள்ளி, கல்லடிதிடல் 

2. தூய அந்தோணியார் தொடக்கப்பள்ளி, கல்லடிதிடல் 

3. தூய சவேரியார் தொடக்கப்பள்ளி, சூரியன்கோட்டை -ஆகிய மூன்று பள்ளிக் கூடங்களையும் பங்குத்தந்தையின் நிர்வாகத்தின் கீழ், திருச்சிலுவை சபை அருட்சகோதரிகள் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். 

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. பீடச்சிறுவர்கள் 

2. St Antonys இளைஞர் இயக்கம் 

3. St Agnes இளம் பெண்கள் இயக்கம் 

4. மறைக்கல்வி 

5. நற்கருணை வீரர் சபை 

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

7. நல்மரண சபை

8. பாடகற்குழு.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. மேஏ, SJ (1834 -1835)

2. அருள்பணி. பீட்டர் ஜேம்ஸ் (1835-1836)

3. அருள்பணி. R. P எட்வர்ட் பர்னட், SJ (1837-1847)

4. அருள்பணி. அலெக்ஸ் கனோஸ் (1847-1850)

5. அருள்பணி. பெர்டன்ட், SJ (1850-1854)

6. அருள்பணி. ரீவரூஸ், SJ (1854-1861)

7. அருள்பணி. A. டெல்சோல் (1861-1863)

8. அருள்பணி. ரீவரூஸ், SJ (1863-1865)

9. அருள்பணி. R.P.J.E. டேரியூடார்ட், SJ (1865-1873)

10. அருள்பணி. கிவ் (1874-1875)

11. அருள்பணி. கெல்லர் (1875-1876)

12. அருள்பணி. டெல்ஸோல் (1876-1877)

13. அருள்பணி. ஏப்ரன் (1877-1880)

14. அருள்பணி. க்ஸிடியன் (1880 மூன்று மாதங்கள்)

15. அருள்பணி. கார்ட்டர் (1880-1886)

16. அருள்பணி. டெசால் (1886-1889)

17. அருள்பணி. ஞானப்பிரகாசம் (1889 இரண்டு மாதங்கள்)

18. அருள்பணி. R.P.J.G. பாரியன்டட், SJ (கபிரியேல்நாதர்) (1889-1892)

19. அருள்பணி. பெஸ்ட் (1892-1893)

20. அருள்பணி. கமன், SJ (1893-1900)

21. அருள்பணி. மாசில்லாமணி (1900-1909)

22. அருள்பணி. கார்னியர் (1909-1914)

23. அருள்பணி. மரியதாஸ் (1914 மூன்று மாதங்கள்)

24. அருள்பணி. ஹூபர்ட் (1914-1916)

25. அருள்பணி. மெஸ்ஸியர், SJ (1917-1919)

26. அருள்பணி. பேன்கர் (1919-1921)

27. அருள்பணி. சௌப்லல் (1921 இரண்டு மாதங்கள்)

28. அருள்பணி. சிகார்ட் (1921-1923)

29. அருள்பணி. சுரம்ஸியர் மிஸ்ஸியர் (1923)

30. அருள்பணி. ரௌனி (1923-1930)

31. அருள்பணி. பிகாடு (1930-1931)

32. அருள்பணி. லூர்து ராஜா (1931-1935)

33. அருள்பணி. A. லூர்து சாமி (1936-1938)

34. அருள்பணி. D. அல்மெய்தா, SJ (வேதநாயகம்) (1938-1941)

35. அருள்பணி. K. சில்வேரியூஸ், SJ (1941-1946)

36. அருள்பணி. அருளப்பர் (1946-1946)

37. அருள்பணி. சவரிமுத்து (1946-1947)

38. அருள்பணி. வேதமுத்து (1947-1949)

39. அருள்பணி. P. S. அந்தோணிசாமி (1949-1952)

40. அருள்பணி. M. அருளானந்தம் (1952-1952)

41. அருள்பணி. R. விசுவாசம் (1952-1962)

42. அருள்பணி. V. M. சவரிமுத்து (1962 5மாதங்கள்)

43. அருள்பணி. A. D. குரூஸ் (1962 4மாதங்கள்)

44. அருள்பணி. V. D. அருளானந்தம் (1962-1965)

45. அருள்பணி. M. A. அருளானந்தம் (1965 2மாதங்கள்)

46. அருள்பணி. S. பொன்னாடு, SJ (1965-1968)

47. அருள்பணி. A. குழந்தைசாமி (1968-1970)

48. அருள்பணி. P. பின்டோ (1970-1970)

49. அருள்பணி. A. பிரான்சிஸ் சேவியர் (1970-1970)

50. அருள்பணி. A. மிராண்டா, SJ (1970-1977)

51. அருள்பணி. S. ஆரோக்கிய அலெக்சிஸ் (1977-1988)

52. அருள்பணி. S. அருள் (1988-1991)

53. அருள்பணி. R. அருள்ஜோசப் (1991-1992)

54. அருள்பணி. G. இராபர்ட் இளங்கோ (1992-1993)

55. அருள்பணி. C. A. ஜேம்ஸ் (1993-1994)

56. அருள்பணி. A. செபாஸ்டின் (1994-1995)

57. அருள்பணி. C. செபாஸ்டின் ராஜ், M.S.F.S (1995-2004)

58. அருள்பணி. L. ஜோசப் (2004 10மாதங்கள்)

59. அருள்பணி. S. அகஸ்டின் இருதயம் (2005-2010)

60. அருள்பணி. L. அமல்ராஜ் (2010-2012)

61. அருள்பணி. A. திரவியம் (2012-2017)

62. அருள்பணி. I. சார்லஸ் (2017 முதல் தற்போது..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. முனைவர் I. சார்லஸ், சிவகங்கை மறைமாவட்டம்.