106 புனித அந்தோனியார் திருத்தலம், உவரி


புனித அந்தோனியார் திருத்தலம்

இடம் : உவரி.

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : சாத்தான்குளம்.

பங்கு : உவரி
நிலை : திருத்தலம்

பங்கின் ஆலயங்கள் : 4
பங்கு ஆலயம் -உவரி புனித அந்திரேயா ஆலயம்
திருத்தலம் - புனித அந்தோனியார் திருத்தலம்
ஆலயம் - செல்வமாதா ஆலயம்
ஆலயம் - வேளாங்கண்ணி மாதா ஆலயம்.

திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் : இவோன் அம்புரோஸ்
பங்குத்தந்தை : அருட்பணி தோம்னிக் அருள் வளன்
இணை பங்குத்தந்தை : அருட்பணி ஹிபாகர்.

திருப்பலி :

ஞாயிறு

நண்பகல் 11:30 மணி (திருத்தலம்)
மாலை 05:30 மணி (திருத்தலம்)

திங்கள்

மாலை 05:30 மணி (திருத்தலம்)

செவ்வாய்

காலை 09:00 மணி (திருத்தலம்)
நண்பகல் 11:30 மணி - நவநாள் திருப்பலி (திருத்தலம்)
மாலை 05:30 மணி - நவநாள் திருப்பலி (திருத்தலம்)

புதன்

காலை 05:00 மணி (திருத்தலம்)

வியாழன்

மாலை 05:30 மணி (திருத்தலம்)

வெள்ளி

மாலை 05:30 மணி (திருத்தலம்)

சனி

முதல் சனி
மாலை 05:30 மணி (திருத்தலம்)

இரண்டாம் சனி
மாலை 05:30 மணி (திருத்தலம்)

மூன்றாம் சனி
திருப்பலி நடைபெறாது

நான்காம் மற்றும் ஐந்தாம் சனி
மாலை 05:30 மணி (திருத்தலம்)

பங்கின் ஜெபமாலை

காலை 10:15 மணி ( திருத்தலம் )
மதியம் 03:15 மணி ( திருத்தலம் )
மாலை 07:30 மணி ( திருத்தல தெற்கு மண்டபம் )

அருகிலுள்ள நகரங்கள்

திசையன்விளைக்கு - 6 கி.மீ,
திருச்செந்தூருக்கு - 40 கி.மீ, திருநெல்வேலிக்கு - 70 கி.மீ, தூத்துக்குடிக்கு - 80 கி.மீ நாகர்கோவிலுக்கு - 70 கி.மீ,

அருகிலுள்ள ரயில் நிலையம்

நாங்குனேரி (32 கி.மீ)
வள்ளியூர் (38 கி.மீ)

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் (133 கி.மீ), தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் (80 கி.மீ), மற்றும் மதுரை பன்னாட்டு விமான நிலையம் (220 கி.மீ)

உவரி புனித அந்தோனியார் திருத்தலம் புவியியல் ரீதியாக 8 ° 16'43.8 "N 77 ° 53'31.7" மின் அல்லது 8.278820, 77.892145 என்ற இடத்தில் உள்ளது.

திருவிழா:

புனிதருக்கு என்று உவரியில் இரண்டு திருவிழாக்கள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் திருவிழா ஜூன் 12ஆம் தேதி மாலை ஆராதனையும் அதை தொடர்ந்து ஜூன் 13ஆம் தேதி திருவிழா கூட்டு திருப்பலியுடன் நிறைவடைகிறது. அதே ஜூன் 13-ஆம் தேதி மாலையில் உவரியின் நற்கருணை பவனியானது நடைபெறும். நற்கருணை நாதரை புனித அந்திரேயா பங்கு ஆலயத்திலிருந்து பவனியாக ஊரின் பிரதான வீதிகளில் கொண்டுவரப்பட்டு, புனித அந்தோணியார் திருத்தல மண்டபத்தில் வைத்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். அதைத் தொடர்ந்து பவனியானது மீண்டும் புனித அந்திரேயா பங்கு ஆலயத்தை அடையும்.

மற்றொரு திருவிழாவானது சாம்பல் புதனுக்கு முந்தின மூன்றாவது ஞாயிறு கொண்டாடப்படுகிறது ஜனவரி மாதக் கடைசியிலோ அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் இந்த பெருவிழாவானது கொண்டாடப்படும். உவரியில் ஒரு தனித்துவம் மிக்க பெருவிழாவாக இது நடைபெறும். இதில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டத்திலிருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உவரி புனிதரை நாடி வந்து அருள் ஆசி பெறுகிறார். 13 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் கொடியேற்ற நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஆயர் தலைமை வகித்து கொடியை ஏற்றி வைப்பார்கள். ஒவ்வொரு நாளும் காலையில் 05.00 மணிக்கு முதல் திருப்பலியும், 06.00 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும். மாலையில் மறையுறையும் அதைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடைபெறும். விழாவின் இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிறு மிகவும் முக்கியமான நாட்களாகும். வெள்ளிக்கிழமை மாலை நற்கருணை ஆசீரை தொடர்ந்து இரவு 09.00 மணியளவில் புனிதரின் திருஉருவப் பவனி ஆனது ஊரின் பிரதான வீதீகளில் சுற்றி வரும். சனிக்கிழமை மாலையில் ஆயர் தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறும். ஞாயிறு காலையில் 04.00 மணியிலிருந்து பங்கு ஆலயத்திலும் அந்தோணியார் திருத்தலத்திலும் அடுத்தடுத்த திருப்பலிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அதை தொடர்ந்து காலை 06.00 மணிக்கு ஆயர் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியானது நடைபெறும். சரியாக 08.30 மணியளவில் புனிதரின் திருவுருவப் பவனி ஆனது ஆரம்பமாகும் ஒவ்வொரு தெருவிலும் சுற்றி வரப்பட்டு ஆலயத்தை மாலையில் வந்து சேரும். மேலும் கேரளாவில் இருந்து உவரிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக காலை 09.00 மணியளவில் மலையாளத்தில் திருப்பலியும் நடத்தப்படுகிறது.

தகவல்கள் " உவரியின் நான்கு ஆலயங்களின் வரலாற்றையும் சேகரித்து அழகாக தொகுத்து எமக்கு அனுப்பி வைத்த சகோதரர் Kishore Selva அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.