726 புனித அந்தோணியார் ஆலயம், ஆவுடைபொய்கை

    

புனித பதுவை அந்தோணியார் ஆலயம்

இடம் : ஆவுடைபொய்கை,  ஓசிறுவயல் அஞ்சல்

மாவட்டம்: சிவகங்கை

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: தேவகோட்டை

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள்: 

1. புனித அந்தோணியார் ஆலயம் தம்பிபுரம்

2. புனித சூசையப்பர் ஆலயம், ஓசிறுவயல்

3. புனித பேதுரு பவுல் ஆலயம், பேயன்பட்டி

4. அடைக்கலமாதா ஆலயம், நேமத்தான்பட்டி

பங்குத்தந்தை : அருள்பணி. A. ராஜமாணிக்கம்

குடும்பங்கள் : 300+ (பங்கு 110, கிளைப்பங்குகள்190+)

அன்பியங்கள்: 6

ஞாயிறு திருப்பலி காலை 08.30 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 05.30 மணி அல்லது மாலை 07.00 மணி

செவ்வாய் மாலை 07.00 மணி புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி

திருவிழா: ஜூன் 13-ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. T. பாஸ்கர் டேவிட்

2. அருட்பணி. R. கிறிஸ்துராஜ்

3. Sr. ஆரோக்கியமேரி Missioneries of Mary help of Christian's, Assam

4. Sr. அடைக்கலமேரி FHIC, Chennai           

5. Sr. ரோஸ்மேரி (lifeless) PHJC.

6. Sr. அருள்மேரி, Franciscan Sisters of Our Lady of Bon Secours, Chennai

7. Sr. ஜோஸ்பின் சேவியர் மேரி, Congregation for the doctrine of the faith Chennai.

8. Sr. மரிய புஷ்பம், Missionaries of Mary help of Christian's, Andhra Pradesh

9. Sr. கிளாரா, IBVM  Kolkata

வழித்தடம்: பரமக்குடி -காளையார்கோவில் -கல்லல் -காரைக்குடி - ஆவுடைபொய்கை

Location map: 

St Antony's Church

4Q84+R47, Avidaipoigai, Tamil Nadu 630106

https://maps.app.goo.gl/akSMqjwbmeXAQv579

வரலாறு:

ஆவுடைபொய்கை பங்கு ஆரம்ப காலகட்டத்தில் உருவான விதம்... 

1935 இல் ஒரு சில குடும்பங்கள் ஆவுடைபொய்கை கிராமத்தில் குடியேறியதாக வாய்மொழியாக வரலாற்றில் கூறப்படுகின்றது. அந்த காலகட்டத்தில் கூத்தலூர் பங்கின் கீழ் இருந்த ஆவுடைபொய்கை இறைமக்கள், சிறிய கூடாரம் அமைத்து புனித பதுவை அந்தோணியாரை வழிபட்டு வந்துள்ளனர். 

பிறகு 1943 ஆம் ஆண்டு கூத்தலூர் பங்கிலிருந்து பிரிந்து செஞ்சை தனிப்பங்கான போது, ஆவுடைபொய்கை ஆலயமானது, செஞ்சை பங்கின் கிளைப் பங்காக ஆனது.

அதிக கிறிஸ்தவ மக்கள் ஆவுடைபொய்கையில் குடியேற, 1955 ஆம் ஆண்டு சிற்றாலயம் ஒன்று எழுப்பப்பட்டு, செஞ்சை பங்குத்தந்தை  அருள்தந்தை சாக்கோ அடிகளார் மற்றும் மதுரை உயர் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்டின் திரவியம் ஆண்டகையால் புனிதப் படுத்தப்பட்டது. 

பிறகு புனித பதுவை அந்தோனியாரை  பாதுகாவலாகக் கொண்டு மாதந்தோறும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, இறைவனை வழிபட்டு வந்தனர்.  

ஆவுடைபொய்கை கிராமத்தின் அருகில் சவேரியாயி கல்லறை என்று ஒன்று உள்ளது. வழி போக்கராக வந்த ஒரு பெண்மணி இந்த இடத்தில் உயிர் விட்டதாகவும், தன்னை இங்கேயே அடக்கம் செய்து விடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி  கிராமத்தினர் அவர் இறந்த பிறகு  அவரை அங்கேயே அடக்கம் செய்து கல்லறை எழுப்பப்பட்டது. 

பின்னர் செஞ்சை பங்கிலிருந்து செக்காலை பங்கு பிரிந்து தனிப் பங்காகான போது ஆவுடைபொய்கை ஆலயமானது, செக்காலை பங்கின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது.

புதிய ஆலயத்திற்கு 04.06.2007 அன்று செக்காலை பங்கின் முன்னாள் பங்குத்தந்தை  அருள்தந்தை. தாமஸ். S அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஆவுடைபொய்கை கிராம மக்களின் தாராள நிதிபங்களிப்புடன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, அருள்தந்தை A. சேசுராஜ் பணிக்காலத்தில் 04.05.2010 அன்று சிவகங்கை மறைமாவட்ட ஆயர். மேதகு சூசைமாணிக்கம் D.D.,S.T.D அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

2012 ஆம் ஆண்டு ஆவுடைபொய்கை  தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. ஓ.சிறுவயல், தம்பிபுரம், பேயம்பட்டி நேமதான்பட்டி என நான்கு கிளை கிராமங்களைக் கொண்டு, பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருள்தந்தை. அருள் ஜோசப் அவர்கள் பொறுப்பேற்றார். 

அதன் பிறகு இரண்டாவது பங்குத்தந்தையாக அருள்தந்தை ராஜமாணிக்கம் அவர்கள் பொறுப்பேற்று, தற்போது வரை சிறப்புற பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆவுடைபொய்கை பங்கானது இரண்டு சிவகங்கை மறைமாவட்ட குருக்களையும், பல்வேறு துறவற சபையை சேர்ந்த 7 கன்னியர்களையும் திருச்சபைக்கு வழங்கியுள்ளது. வாரம் ஒரு முறை புனித பதுவை அந்தோனியாருக்கு நவநாள் கொண்டாடப் படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் புனித அந்தோணியார் திருவிழா கொண்டாடப்படுகின்றது. திருப்பலியில் பங்கேற்பது மட்டுமன்றி, பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகளிலும் மக்கள் ஆர்வமாகவும், பக்தியுடனும் பங்கேற்கின்றனர். பங்கு ஆன்மீகப் பாதையில் வளர்ச்சியை நோக்கி செல்கின்றது என்று சொல்வதில் மிகையில்லை. ஆவுடைபொய்கை பங்கிற்காக தொடர்ந்து ஜெபிப்போம் இறை ஆசி பெறுவோம்...

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. பீடச்சிறார்

4. பாடகற்குழு

5. மறைக்கல்வி

6. புனித பதுவை அந்தோனியார் இளையோர் இயக்கம்

7. குடும்ப நலவாழ்வு பணிக்குழு

8. இயேசுவின் கண்மணிகள் இயக்கம்

பங்கில் உள்ள அன்பியங்கள் 

1. புனித பதுவை அந்தோணியார் அன்பியம்

2. புனித சூசையப்பர் அன்பியம் 

3. ஆரோக்கிய மாதா அன்பியம்

4. புனித சகாய மாதா அன்பியம்

5. சவேரியாயி அன்பியம் 

6. புனித ராயப்பர் அன்பியம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்:

1. அருட்பணி. அருள் ஜோசப் (2012-2017)

2. அருட்பணி. ராஜமாணிக்கம் (2017 முதல்...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ராஜமாணிக்கம், அருட்பணி. ஆரோக்கியசாமி, IVD மற்றும் அருட்சகோதரர். ஜார்ஜ்