நமது இணையதள அட்மின்கள் - தங்கள் குடும்பங்களுடன்!
புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
இடம் : மஞ்சக்குட்டை, ஏற்காடு
மாவட்டம் : சேலம்
மறை மாவட்டம் : சேலம்
மறை வட்டம் : சேலம்
நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருட்பணி. ஹென்றி கிஷோர்
குடும்பங்கள் : 153
அன்பியங்கள் : 9
ஞாயிறு : காலை 08:15 மணிக்கு திருப்பலி
திங்கள் முதல் சனி வரை : மாலை 06:15 மணிக்கு திருப்பலி.
திருவிழா : செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்சகோதரி. மோட்ச ராக்கினி (காணிக்கை மாதா சபை)
2. அருட்சகோதரி. ஸ்டெல்லா (காணிக்கை மாதா சபை)
வழித்தடம் : ஏற்காட்டிலிருந்து சுமார் 8கி.மீ தூரத்தில் மஞ்சக்குட்டை உள்ளது.
Location map : Arokiya Annai church Yercaud Cauvery Peak Road, Semmeduru,
வரலாறு :
கோடை வாழிட நகரமாம், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் உள்ள நகரமாம், "ஏழைகளின் ஊட்டி" என்றழைக்கப்படும் ஏற்காட்டில், மஞ்சக்குட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்.
பல ஆண்டுகளுக்கு முன்னர், ஏற்காட்டில் உள்ள காபி தோட்டத்தில் பாண்டிச்சேரி, விழுப்புரம் ஊர்களிலிருந்து தொழிலாளர்கள் வந்து வேலை செய்ய ஆரம்பித்தனர்.
அதில் பலரும் கிறிஸ்துவர்களாக இருந்ததால் ஏற்காடு ஆலயத்திற்கு திருப்பலி காண சென்றனர். எனவே, அவர்களுக்கென்று மஞ்சக்குட்டை பகுதியில் ஆலயம் தேவை என்று அறிந்து சிறிய ஆலயம் கட்டி அதில் மாதாவை பாதுகாவலியாகக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர்.
மஞ்சக்குட்டை ஆலயமானது 2013ம் ஆண்டில் மேதகு சேலம் ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. இராஜமாணிக்கம் அவர்கள் பொறுப்பேற்று, புதிய ஆலயம் கட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு, 08.09.2015 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்துப் புனிதப்படுத்தப்பட்டது.
பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. மரியாயின் சேனை
2. பாடகற்குழு
3. பீடச்சிறுவர்கள்
4. இளையோர் இயக்கம்
5. மறைக்கல்வி மாணவ-மாணவிகள்.
கல்விக்கூடம் :
St. Joseph Primary School.
பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள் :
1. அருட்பணி. இராஜ மாணிக்கம் (2013-2017)
2. அருட்பணி. சார்லஸ் (2017-2019)
3. அருட்பணி. ஹென்றி கிஷோர் (2019 முதல் தற்போது வரை....)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஹென்றி கிஷோர் அவர்கள்.