719 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், குஜிலியம்பாறை

    

புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம்

இடம்: குஜிலியம்பாறை

மாவட்டம்: திண்டுக்கல்

மறைமாவட்டம்: திண்டுக்கல்

மறைவட்டம்: மாரம்பாடி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித செபஸ்தியார் ஆலயம், இராமகிரி

பங்குத்தந்தை: அருட்பணி. பெர்னாண்டஸ், MMI

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. டெனிஸ்டர், MMI

குடும்பங்கள்: 80 (கிளைப்பங்கு சேர்த்து)

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 08:30 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதம், ஜெபமாலை, காலை 09:00 மணிக்கு திருப்பலி

காலை 07:00 மணி திருப்பலி (கிளைப்பங்கு)

நாள்தோறும் மாலை 06:30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி

செவ்வாய் மாலை 07:00 மணிக்கு திருப்பலி (கிளைப்பங்கு)

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 07:00 மணிக்கு நற்கருணை ஆராதனை, ஒரு மணிநேர குணமளிக்கும் ஜெப ஆராதனை

திருவிழா: ஜூன் 27, 28, 29

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி.‌ அடைக்கலராஜ், MMI (கிளைப்பங்கு)

2. அருட்சகோதரி.‌ ஜோதி மரியா, FSD

3. அருட்சகோதரி. மரியா கௌசல்யா, MSI

வழித்தடம்: கரூர் -திண்டுக்கல் சாலையில்

திண்டுக்கல் -எரியோடு -கோவிலூர் -குஜிலியம்பாறை

Location map: https://g.co/kgs/JxM27J

வரலாறு:

குஜிலியம்பாறையில் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிய தென் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வந்திருந்தவர்கள் தங்கி வாழ்ந்து வந்தனர். இவர்களில் சில கத்தோலிக்க குடும்பங்களும் இருந்தன. இம்மக்களின் ஆன்மீகத் தேவைக்காக 02.02.1968 அன்று மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

தொடர்ந்து திருச்சி மறைமாவட்டத்தில் உள்ள B. உடையாபட்டி பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

பங்கிலிருந்து நீண்ட தொலைவில் இவ்வாலயம் செயல்பட்டு வந்ததால் பின்னர் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.

அருட்பணி. மரியனூஸ் ஐசக் பணிக்காலத்தில் நன்கொடையாளர் உதவியுடன் வேளாங்கண்ணி மாதா குருசடி கட்டப்பட்டு, திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு ஆந்தோனி டிவோட்டா அவர்களால் 17.04.2001 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

2003 ஆம் ஆண்டு திண்டுக்கல் மறைமாவட்டம் புதிதாக உதயமானபோது, குஜிலியம்பாறை பங்கானது திண்டுக்கல் மறைமாவட்டத்தின் கீழ் வந்தது.

தற்போது அமலமரி தூதுவர்கள் சபையினர் (MMI), பங்கின் பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தி வருகின்றனர்.

பங்கில் உள்ள துறவற இல்லம்:

St. Thomas Convent: 

இச்சபையை சேர்ந்த

Sr. ஆக்னஸ் மேரி

Sr. மரியம்மாள்

ஆகிய இருவரும் புனித அருளானந்தர் தொடக்கப்பள்ளியை வழிநடத்தி வருகின்றனர்.

பங்கில் உள்ள கெபி:

வேளாங்கண்ணி மாதா கெபி

திண்டுக்கல் மறைமாவட்டத்தின் கீழ் பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. ஜெயராஜ் (2003-2007)

2. அருட்பணி.‌ அன்பு (2007 -4மாதங்கள்)

3. அருட்பணி.‌ பிலிப் சுதாகர் (2007-2010)

4. அருட்பணி. A. V. ஆரோக்கியசாமி (2010-2011)

5. அருட்பணி.‌ ஜேசுராஜ் (2011-2014)

6. அருட்பணி.‌ ஜேம்ஸ் (2015-2016)

7. அருட்பணி. பாத்திமாநாதன் (2016-2018)

8. அருட்பணி. பெர்னாண்டஸ், MMI (18.02.2018 முதல் தற்போது வரை...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி. பெர்னாண்டஸ், MMI