அருள்நிறை அடைக்கல மாதா ஆலயம்
இடம்: பெரியவர்சீலி
மாவட்டம்: திருச்சி
மறைமாவட்டம்: கும்பகோணம்
மறைவட்டம்: இலால்குடி
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித ஜெயராக்கினி மாதா ஆலயம், கூகூர்
2. புனித சந்தியாகப்பர் ஆலயம், கூகூர்
3. புனித அந்தோனியார் ஆலயம், இடையாற்று மங்களம்
4. புனித சூசையப்பர் ஆலயம், இடையாற்று மங்களம்
5. புனித அடைக்கல அன்னை ஆலயம், இடையாற்று மங்களம்
6. புனித அந்தோனியார் ஆலயம், மயிலரங்கம்
7. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், மயிலரங்கம்
8. புனித அந்தோனியார் ஆலயம், பச்சாம்பேட்டை
9. புனித சவேரியார் ஆலயம், பச்சாம்பேட்டை
10. புனித சூசையப்பர் ஆலயம், முத்தியூர்
11. புனித செபஸ்தியார் ஆலயம் தண்டாங்கோரை
12. புனித அந்தோனியார் ஆலயம், தண்டாங்கோரை
13. புனித சூசையப்பர் ஆலயம், மேலவாளை
பங்குத்தந்தை அருட்பணி. S. சூசைநாதன்
குடும்பங்கள்: 240 (கிளைப்பங்குகள் சேர்த்து 1000+)
அன்பியங்கள்: 4
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி
வாரநாட்களில் திருப்பலி காலை 06:10 மணி
வெள்ளி மாலை 06:30 மணி நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:10 மணி நவநாள் திருப்பலி
திருவிழா: ஈஸ்டர் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருள்தந்தை. அந்தோனி டேவிட் (தாவீதுநாதர்), பெரியவர்சீலி
2. அருள்தந்தை. D. பீட்டர் அமல்ராஜ், பெரியவர்சீலி
3. அருள்தந்தை. A. சாம்சன் அடைக்கலராஜ், பெரியவர்சீலி
4. அருள்தந்தை. L. பெஞ்சமின், பெரியவர்சீலி
5. அருள்தந்தை. S. ஜான் மில்டன், MSFS, மயிலரங்கம்
6. அருள்தந்தை. S. ஆரோக்கிய தாஸ், மயிலரங்கம்
7. அருள்தந்தை. A. விக்டர் லாரன்ஸ், இ.மங்களம்
1. அருட்சகோதரி. ஆரிட்டா மேரி, SMMI, பெரியவர்சீலி
2. அருட்சகோதரி. லூயிஸ், Cluny, பெரியவர்சீலி
3. அருட்சகோதரி. மரிய ரெபேலா, Bon Secous, பெரியவர்சீலி
4. அருட்சகோதரி. ஸ்டெபானி, FIHM, பெரியவர்சீலி
5. அருட்சகோதரி. கஸ்டோரியஸ், SAT, பெரியவர்சீலி
6. அருட்சகோதரி. அருள் மேரி, FSM, மேலவாளை
7. அருட்சகோதரி. மேரி பிரான்சிஸ், FSM, பெரியவர்சீலி
8. அருட்சகோதரி. பவுலின் மேரி, FIHM, பெரியவர்சீலி
9. அருட்சகோதரி. லூர்து ரஞ்சித மேரி, CIC, கூகூர்
10. அருட்சகோதரி. அமலோர், FSM, பெரியவர்சீலி
11. அருட்சகோதரி. பிரான்சிஸ் சின்னராணி, SCC, கூகூர்
12. அருட்சகோதரி. அல்போன்ஸ், Cluny, பெரியவர்சீலி
13. அருட்சகோதரி. செலின் தெரஸா, SMMI, பெரியவர்சீலி
14. அருட்சகோதரி. செசிலியா, Cluny, பெரியவர்சீலி
15. அருட்சகோதரி. ஜெரோனிமா மேரி, FIHM, பெரியவர்சீலி
16. அருட்சகோதரி. கரோலின் மேரி, SCC, பெரியவர்சீலி
17. அருட்சகோதரி. ஹெலன் மேரி விர்ஜினியா, Pallottine, மயிலரங்கம்
18. அருட்சகோதரி. ஜான் ரோஸ்லின், FIHM, பெரியவர்சீலி
19. அருட்சகோதரி. ஜெனித்தா ராணி, SSHJ, மேலவாளை
20. அருட்சகோதரி. ஜான்சி, SCC, பெரியவர்சீலி
21. அருட்சகோதரி. அமலிட்டா, SSAM, இ.மங்களம்
22. அருட்சகோதரி. ஜாக்குலின், SCSM, இ.மங்களம்
23. அருட்சகோதரி. லூர்து மேரி, SSHJ, மயிலரங்கம்
வழித்தடம்: டோல்கேட் -வாளாடி -பச்சாம்பேட்டை வளைவு -பெரியவர்சீலி இலால்குடி -பெரியவர்சீலி
Location map: https://g.co/kgs/m3x11rj
வரலாறு:
கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த பங்குகளில் பெரியவர்சீலி பங்கும் ஒன்று. கும்பகோணம் தனி மறைமாவட்டமாக உயர்த்தப்படுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1849 ஆம் ஆண்டே தனிப்பங்காக உயர்த்தப்படும் அளவுக்கு கிறிஸ்தவ விசுவாசம் நிரம்பியிருந்த இடம் பெரியவர்சீலி. இது திருச்சிக்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவில் கொள்ளிட ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. அண்டி வருபவருக்கு அடைக்கலம் தந்து ஆதரிப்பவரான நம் அன்னை மரியாளே 'அடைக்கல அன்னை' என்ற பெயரோடு இப்பங்கின் பாதுகாவலியாக இருந்து வழிநடத்தி வருகின்றார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பொழுதுகூட, இருபோக சாகுபடி செய்யும் அளவுக்கு நீர் வளமும், நிலவளமும் கொண்டது பெரியவர்சீலி.
கிட்டதட்ட 17ஆம் நூற்றாண்டில் பெரியண்ணன், அரியண்ணன, உத்தமன் என்ற சகோதரர்களில் மூத்தவரான பெரியண்ணனது வாரிசுகளால் உருவாக்கப்பட்டு, தந்தையின் பெயரால் பெரியவர்சீலி என்றே அழைக்கப்பட்டதாக பாரம்பரியம் கூறுகிறது.
கொள்ளிடத்தில் அவ்வப்பொழுது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும், அதன்விளைவாக ஏற்பட்ட கொள்ளை நோயிலிருந்தும் கிறிஸ்துவ போதகர்களின் ஜெபங்களால், காப்பாற்றப்பட்ட மக்கள் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.
இத்தாலிய கம்பன் என்றழைக்கப்படுமளவுக்கு தமிழ் புலமை பெற்றிருந்த வீரமாமுனிவர், வடுகர் பேட்டையில் பணிபுரிந்த காலகட்டத்தில், பெரியவர்சீலிக்கு வந்து (1726 ம் ஆண்டு) இந்த மக்களின் துன்ப வேளையில் ஆறுதல் கூறி அன்னை மாமரியை அடைக்கல அன்னையாக அறிமுகப்படுத்தினார். தங்கள் துன்பங்களும், நோய்களும் அடைக்கல மாதாவின் அருளால் நீங்கியதை உணர்ந்து மக்கள் அந்த ஆண்டு அன்னைக்கு தேர்த்திருவிழா நடத்தி நன்றி செலுத்தினர். ஏறக்குறைய 275 ஆண்டுகளாக இவ்விழா (இடையில் ஒரேயோரு ஆண்டைத் தவிர) தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மயிலை பேராயரது அனுமதியுடன் 1731 ல் வீரமாமுனிவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை அவர்கள் பாஸ்கா விழா முடிந்தபிறகு வருகின்ற மூன்றாவது ஞாயிறை அடைக்கல அன்னைக்கு விழாக் கொண்டாட அனுமதி வழங்கினார். இந்த அனுமதி ஏலாக்குறிச்சி ஆலயத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் அல்லது அடைக்கல அன்னைக்கு வேறு ஆலயம் அமைந்தால் அதற்கு மட்டுமே என்பதன் அடிப்படையில், குடந்தை ஆயர் மேதகு ஷப்புயி ஆண்டகை இப்பங்குக்கு அனுமதியளித்தார். அதன்படி 1922 லிருந்து பாஸ்கா விழா முடிந்த பிறகு வரும் 3-ம் ஞாயிறு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இயேசு சபையின் பொறுப்பில் மறைபரப்பு பணி இருந்த காலகட்டத்தில் (கி.பி. 1679-1681) புனித அருளானந்தர், தான் பயணம் செல்லும் வழியில் இவ்வூரில் சில நாட்கள் தங்கி தியான பிரசங்கம் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. அவர் நினைவாக கல்லறை தோட்டத்தில், ஆலயம் ஒன்று உள்ளது.
கி.பி. 1762 ல் புறத்தாக்குடி பங்குத்தந்தை அருள்திரு. ஞானதிக்கம் அடிகளாரால் பெரியவர்சீலியில் ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. 1849 ம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்ட பொழுது அருள்திரு. பியர் சுவாமிகள் முதல் பங்கு தந்தையாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
1880 ஆம் ஆண்டு இலால்குடி சிவன் கோவில் நிர்வாகம் செய்குருனி (ஒரு ஏக்கருக்கு ஒரு மரக்கால்) பழக்கத்தை கொண்டு வந்த பொழுது, கிறிஸ்துவ மக்களுக்கு கடமை இல்லை என்றும், கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ கிராமங்களும் சேர்ந்து (பெரியவர்சீலி, புறத்தாக்குடி, கொன்னைக்குடி, கபிரியேல்புரம், திருக்காவலூர்) வழக்கு தொடர்ந்தனர். மூன்று முறை தோல்வியடைந்தாலும் தொடர்ந்து திருச்சி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 1885 ல் வெற்றி பெற்றனர். ஆனால் சிவன் கோவில் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது நீதியரசராக இருந்த மேன்மிகு நாக்ஸ் அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்து, கிறிஸ்தவர்கள் வெற்றி பெறச் செய்தார். அதன் பிறகு கிறிஸ்தவர்கள் அவரவர் ஊர்களில் உள்ள ஆலயங்களுக்கு நெல் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.
இப்பங்கின் 12 வது பங்குத் தந்தையாக இருந்த அருள்திரு. லியோ டெப்பிங்கி (சிங்கராயர் சுவாமிகள்) கடைசி ஐரோப்பிய குருவாவார். அவரது பணியை என்றும் மறக்கமுடியாது. அவரது திருவுடல் இவ்வூரிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் கேட்டு பெறும் அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இவர்தான் இப்போதைய புனித அடைக்கல அன்னை ஆலயத்தை வடிவமைத்து கட்டியவர். கி.பி. 1924ல் துவக்கப்பட்ட ஆலயத் திருப்பணி கி.பி. 1932ல் நிறைவு பெற்றது.
இவ்வூர் இளைஞர்கள் தங்கள் திறமைகளை பல்வேறு நாடுகளில் நிரூபித்து வருகின்றனர். எங்கிருந்தாலும் எங்கள் ஊர், எங்கள் ஆலயம் என்ற உரிமை உணர்வு உள்ளவர்கள். ஒவ்வொரு யூதருக்கும் எருசலேம் எப்படி முக்கியமோ அதுபோல இவர்களுக்கு பெரியவர்சீலி புனிதமான இடம். இந்த மக்களின் ஆர்வமும், ஈடுபாடும் பெரியவர்சீலியை கும்பகோணம் மறைமாவட்டத்தின் சிறந்த பங்குகளில் ஒன்றாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பங்கு உதயமான 175 ஆம் ஆண்டு ஜூபிலி விழாவை 2024 ஆம் ஆண்டில் சிறப்பிக்கும் இவ்வேளையில், பங்கின் பாதுகாவலியான புனித அடைக்கல அன்னை பங்கு மக்களை ஆசீர்வதிப்பாராக.
பங்கின் வளர்ச்சி:
கி.பி.1649: பெரியண்ணன் வாரிசுகளால் ஊர் உருவாக்கப்பட்டது.
கி.பி. 1679-1681: புனித அருளானந்தர் தியானப் பிரசங்கம் செய்தார்.
கி.பி.1726-1740: வீரமாமுனிவர் இப்பகுதிகளில் பணிபுரிந்ததாக பாரம்பரியம் கூறுகிறது.
02.05.1762: முதல் ஆலயம் கட்டப்பட்டது.
கி.பி.1857: சாதியின் காரணமாக கலகம் செய்ததால் 'இண்டர்டிக்ட்' என்னும் தண்டணை விதிக்கப்பட்டு ஆலயம் பூட்டப்பட்டது.
08.05.1860 தண்டனை ரத்தாகி, ஆலயம் திறக்கப்பட்டது.
கி.பி. 1862: முதன்முதலாக திருவிழா கொண்டாடப்பட்டது.
கி.பி. 1867: மூன்று வகுப்புகளுடன் பள்ளி துவக்கப்பட்டது.
கி.பி. 1872: பங்குதந்தை இல்லம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
கி.பி. 1879: பங்குதந்தை இல்லம் புனிதபடுத்தப்பட்டது.
கி.பி. 1888: செய்குருணி வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
கி.பி. 1922: ஞானஸ்நான தொட்டி அமைக்கப்பட்டது. பாஸ்கா விழாவிற்கு பின்வரும் 3ம் ஞாயிறு திருவிழா கொண்டாட அனுமதி கிடைத்தது.
கி.பி. 1924: புதிய ஆலயத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.
கி.பி. 1930: புதிய பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டது.
கி.பி. 1931: கன்னியர் இல்லத்திற்கு அடித்தளம் இடப்பட்டது. பெண்களுக்கான துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
கி.பி. 1932 புதிய ஆலயம் கட்டப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது.
கி.பி. 1937 ஆண்கள் பள்ளி, நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது.
கி.பி.1950: பங்கின் நூற்றாண்டுவிழா நிறைவாக ஆலயத்தின் முன்பகுதி விரிவுபடுத்தப்பட்டது.
கி.பி.1957: தேர் பழுதானதால், தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
கி.பி 1958: தேர் பழுது பார்க்கப்பட்டு, இன்றுவரை தேரோட்டம் நடைபெறுகிறது.
கி.பி. 1965: ஆலயத்திற்கும், வீடுகளுக்கும் மின்இணைப்பு வசதி கிடைத்தது.
02.03.1966 பழைய கெபி கட்டபட்டது.
02.03.1978 பங்கு குருவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருபிரிவாக மக்கள் பிளவுபட்டதால் திருவிழா நின்றுபோனது.
06.05.1982 புதிய ஆலயத்தின் பொன்விழா கொடிமரம் அமைக்கப்பட்டது.
கி.பி. 1985 மணிக்கூண்டு உயர்த்திக் கட்டப்பட்டது. மின் உற்பத்தி கருவி வாங்கப்பட்டது.
கி.பி. 1991 தேர் (சப்பர) கொட்டகை கட்டப்பட்டது.
06.03.1996 ஆலயத்தின் வலதுபுற இறக்கை கட்டப்பட்டது.
கி.பி. 1999 பங்கின் 150 ஆம் ஆண்டு நினைவாக சிங்கராயர் அறக்கட்டளை துவக்கப்பட்டது.
02.03.2000 பங்கின் நூற்று ஐம்பதாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
02.03. 2004 ஆலய பீடம் பளிங்கு கற்களால், உயர்த்தப்பட்டது. கதவு ஜன்னல் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டது. கல்லறைகளுக்கு சுற்றுவேலி அமைக்கபட்டது.
04.03 2005 கெபி மாற்றி அமைக்கப்பட்டது.
13.04.2007 கூகூர், புனித ஜெயராக்கினி ஆலயம் புதிதாக கட்டப்பட்டு மந்திரிக்கப்பட்டது.
24.04.2009 பெரியவர்சீலியில், நுழைவு வாயில் கட்டி திறக்கப்பட்டது.
10.07.2009 புனித அருளானந்தர் ஆலயம் புதிதாக கட்டப்பட்டது.
24.10.009 கல்லரைக்கு புதிய சுற்றுசுவர் எழுப்பப்பட்டது.
11.12.2010 பச்சாம்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு மந்திரிக்கப்பட்டது.
25.05.2011 பெரியவர்சீலியில், சலேத் மாதா ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
31.07.2011 பெரியவர்சீலியில் மேற்கே உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
01.09.2013 தண்டாங்கோரை புனித செபஸ்தியார் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு மந்திரிக்கப்பட்டது.
20.12.2014 பெரியவர்சீலியில், புனித அடைக்கல மாதா ஆலயத்தில் பீடம் மாற்றி அமைக்கப்பட்டு, ஆலய முகப்பு புதிதாக கட்டப்பட்டு, ஆலய மேற்கூரை பழுது பார்க்கப்பட்டது.
04.11.2015 ஊர் இளைஞர்களோடு கலந்து ஆலோசித்து ஆலய வளாகத்தில் இருந்த கைப்பந்து ஆடுகளம், மந்தைக்கு மாற்றப்பட்டது.
26.01.2017 கல்லறை சுற்றுச் சுவர் சீர்செய்யப்பட்டது.
26.01.2017 அருட்தந்தை சிங்கராயர் நினைவாக, பெரியார்சீலியில் குடும்ப விழா தொடங்கப்பட்டது.
18.04.2017 கிழக்குத் தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் புதிதாக கட்டப்பட்டது.
29.01.2018 தண்டாங்கோரை, புனித அந்தோணியார் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு மந்திரிக்கப்பட்டது.
28.05.2019 கூகூர், புனித சந்தியாகப்பர் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு மந்திரிக்கப்பட்டது.
19.10.2021 பெரியவர்சீலி பங்கில் 100வது ஆண்டு நற்கருணை பவனி விழா ஆயர் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.
16.06.2022 இடையாற்றுமங்கலம், புனித அடைக்கல அன்னை ஆலயம் புதிதாக கட்டப்பட்டு மந்திரிக்கப்பட்டது.
18.06.2022 பெரியவர்சீலியில் புனித ஆரோக்கியநாதர் சிற்றாலயம் திறக்கப்பட்டது.
16.08.2022 புனித ஆரோக்கியநாதர் ஆண்டுவிழா தொடங்கப்பட்டது.
பங்கின் பள்ளிக்கூடங்கள்:
Sacred Heart Primary School
Mary's Middle School
துறவற இல்லம்:
FIHM Convent
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
இருதய சபை
பியோ ஜெபமாலை இயக்கம்.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. பியர் (1849-1854)
2. அருட்பணி. செர்விங் (1854-1855)
3. அருட்பணி. பெலிக்ஸ் (1855-1859)
4. அருட்பணி. லூயிஸ் (1859-1865)
5. அருட்பணி. அம்புரோஸ் (1865-1902)
6. அருட்பணி. அருள்நாதர் (1902-1902)
7. அருட்பணி. சூசைநாதர் (1902-1905)
8. அருட்பணி. அன்னா சவரிநாதர் (1905-1908)
9. அருட்பணி. மரிய ஜோசப்நாதர் (1908-1914)
10. அருட்பணி. பிரன் (1914-1915)
11. அருட்பணி. இரத்தினநாதர் (1915-1916)
12. அருட்பணி. லாப்லாஸ் (1916-1917)
13. அருட்பணி. ஜான் மிஷோத் (1917-1918)
14. அருட்பணி. கெங்கினால் (1918-1920)
15. அருட்பணி. ரோமேன்ட் மிஷோத் (1920-1920)
16. அருட்பணி. இரத்தினநாதர் (1920-1921)
17. அருட்பணி. லெயோ டெப்பிங்கி (சிங்கராயர்), (1921-1930)
18. அருட்பணி. T. A. இராஜமாணிக்கநாதர் (1930-1934)
19. அருட்பணி. M. R. குழந்தைநாதர் (1934-1940)
20. அருட்பணி. G. சூசைநாதர் (1940-1942)
21. அருட்பணி. S. அம்புரோஸ் (1942-1946)
22. அருட்பணி. G. ஆரோக்கிய சுவாமிநாதர் (1946-1952)
23. அருட்பணி. P. மதலைநாதர் (1952-1956)
24. அருட்பணி. S. ஐசக் (1956-1960)
25. அருட்பணி. A. மரியசாமி (1960-1961)
26. அருட்பணி. C. P. பெரியநாயகம் (1961-1963)
27. அருட்பணி. M. அந்தோனி டேவிட் (1963-1967)
28. அருட்பணி. ராயலு (1967-1975)
29. அருட்பணி. G. மரிய அல்போன்ஸ் (1975-1980)
30. அருட்பணி. சூசை அருள், OFM Cap (1980-1981)
31. அருட்பணி. A. அந்தோணிசாமி (1981-1982)
32. அருட்பணி. A. சூசை மாணிக்கம் (1982-1983)
33. அருட்பணி. S. செல்வராயர் (1983-1987)
34. அருட்பணி. R. வின்சென்ட் பெரர் (1987-1993)
35. அருட்பணி. H. வல்லபநாதன் (1993-1999)
36. அருட்பணி. I. மரியதாஸ் (1999-2005)
37. அருட்பணி. A. ரோச் அலெக்சாண்டர் (2005-2011)
38. அருட்பணி. J. அந்தோனி ஜோசப் (2011-2015)
39. அருட்பணி. S. ராஜசேகர் (2015-2016)
40. அருட்பணி. A. சிரில் ராபர்ட் (2016-2022)
41. அருட்பணி. S. சூசைநாதன் (2022---)
பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல மாதாவை நாடிவரும் மக்களுக்கு அளவற்ற நன்மைகள் கிடைத்து வருகின்றன. மாதாவின் அருளைப் பெற வாருங்கள் பெரியவர்சீலிக்கு...
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. S. சூசைநாதன் அவர்கள்.
புகைப்படங்கள்: திரு. Prince Rex Raj Immanuel, புறத்தாக்குடி.