757 திருச்சிலுவைநாதர் ஆலயம், சிலுவைநகர்

     

திருச்சிலுவை நாதர் ஆலயம்

இடம்: சிலுவைநகர், கன்னியாகுமரி 

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம: கோட்டாறு

மறைவட்டம்: கன்னியாகுமரி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், புதுகிராமம்

பங்குத்தந்தை: அருட்பணி. மைக்கேல் நியூமன்

குடும்பங்கள்: 108 

அன்பியங்கள்: 4

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணி

திருவிழா : செப்டம்பர் மாதம் 14-ம் தேதியை உள்ளடக்கிய 10 நாட்கள்.

வழித்தடம்:

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே 300மீ தொலைவில் கடற்கரை சாலையில் இவ்வாலயம் உள்ளது. கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை முடியும் இடத்தில் மேற்கே 100மீ தொலைவில் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.

கன்னியாகுமரியில் சூரியன் மறையும் காட்சி காணும் இடம் செல்லும் வழியில், கடற்கரை சாலையில் சிலுவைநகர் அமைந்துள்ளது.

Location map:

Thiru Siluvai Nathar Church

https://maps.google.com/?cid=1247577998801760824&entry=gps

வரலாறு:

இந்தியாவின் தென்கோடி முனையாம் கன்னியாகுமரியில் கடற்கரை சாலையில், சூரியன் மறையும் காட்சி காணும் இடம் அருகில் அமைந்துள்ளது சிலுவைநகர் என்னும் மீனவ கிராமம். 

இங்கு ஆரம்ப காலத்தில் மணல் மேடுகளால் நிறைந்த பகுதியாக இருந்ததால் இப்பகுதி “மணல் தேரி” என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த இடத்தில் திருச்சிலுவை ஒன்று நிறுவப்பட்டு, மக்கள் வழிபட்டு வந்தனர். 

சுமார் 1980ம் ஆண்டுக்கு பிறகு இடநெருக்கடி காரணமாக புதுக்கிராமம், வாவத்துறை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளிலிருந்து மக்கள் இங்கு குடியேற ஆரம்பித்தனர். 1991 ஆம் ஆண்டு கன்னியாகுமரி பங்குத்தந்தை அருட்பணி. மார்டின் S. அலங்காரம் அவர்களால் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு அருட்பணி. அமல்ராஜ் நேவிஸ் அவர்களால் சிறிய சிலுவை வடிவிலான ஆலயத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு புதுக்கிராமம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயமானது, கன்னியாகுமரி பங்கிலிருந்து பிரிந்து தனிப்பங்கானது. அன்று முதல் சிலுவைநகர், புதுக்கிராமத்தின் கிளைப்பங்காக செயல்பட்டு வருகிறது. 

முதல் பங்குத்தந்தையான அருட்பணி. தேவதாஸ் அவர்களால் தற்போதைய ஆலயத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. முதல் பங்குப் பேரவையும் அமைக்கப்பட்டு, மூன்று அன்பியங்கள் செயல்பட்டு வந்தன. பின்பு அருட்பணி. E. ஜோஸப் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயப் பணிகள் முடிக்கப்பட்டு 18.04.2009 அன்று மேதகு ஆயர். பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. ஏழை, கூலித் தொழிலாளர்கள், மீனவர்கள் என சாதாரண குடும்பங்கள் மட்டுமே இருந்த நிலையில், பலருடைய உதவியால் மட்டுமே ஆலயப்பணி முடிக்கப்பட்டது. மேலும் கலையரங்கம், பங்குப் பேரவை அலுவலகம், ஆலய வளாக சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டது.

2003 ஆம் ஆண்டு அருட்பணி. பெலிக்ஸ் அலெக்சாண்டர் அவர்களின் பணிக்காலத்தில் முதன்முதலாக பத்து நாட்கள் திருவிழா திருப்பலியுடன், முதல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

2010 –ஆம் ஆண்டு அருட்பணி. கோல்டிரிஜ் ஜிம் அவர்கள் பணிக்காலத்தில் கொடிமரம் மற்றும் சமூக நலக்கூடம் அமைக்கப்பட்டது. ஆலயத்திற்கு முன்புறம் திருச்சிலுவை கெபி மற்றும் பிரதான வாயில்  ஆகியவையும் அமைக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு ஆலயத்தின் இணை பாதுகாவலியாக திருக்கல்யாணமாதா சுரூபம் அமைக்கப்பட்டு, மாதத்தின் முதல் வெள்ளி நவநாள் திருப்பலியும், ஏனைய 

வெள்ளிக்கிழமை திருப்பலியும் நடைபெற்றது.

அருட்பணி. ஆண்ட்ரூஸ் பணிக்காலத்தில் 2016 ஆம் ஆண்டு சமூக நலக்கூடம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அருட்பணி. கிரிஸ்டோ டாபின் பணிக்காலத்தில் ஆலய நுழைவாயில் அமைக்கப்பட்டது. அன்பியங்கள் எண்ணிக்கை மூன்றிலிருந்து, நான்காக உயர்த்தப்பட்டது. 

ஆலய பங்கேற்பு அமைப்புக்கள்:

1. கத்தோலிக்க சேவா சங்கம்

2. பாலர் சபை

3. மறைக்கல்வி மன்றம்

4. திருச்சிலுவை இளையோர் இயக்கம்

5. குழந்தைகள் பாராளுமன்றம்

6. பங்குப் பேரவை

இவ்வாலயத்திற்கு சாதி மத பேதமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகைதந்து, வேண்டுதலையும் நன்றியினையும் செலுத்தி வருகின்றனர். நீங்களும் ஒரு முறையேனும் வாருங்கள். திருச்சிலுவைநாதரின் வழியாக ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்... 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. மைக்கேல் நியூமன் அவர்களின் வழிகாட்டலில், பங்குப்பேரவை நிர்வாகி.