261 தூய அன்னம்மாள் ஆலயம், ஆழ்வார்திருநகரி


தூய அன்னம்மாள் ஆலயம்

இடம்: ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம்

மாவட்டம்: தூத்துக்குடி 

மறை மாவட்டம்: தூத்துக்குடி 

நிலை : கிளைப்பங்கு

பங்கு : தூய சந்தியாகப்பர் திருத்தலம், திருவைகுண்டம் 

பங்குத்தந்தை : அருட்தந்தை. மரியவளன் 

குடும்பங்கள் : 32

ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணிக்கு 

திருவிழா : ஜூலை மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள். 

வழித்தடம் : 

திருநெல்வேலி- திருச்செந்தூர் வழித்தடத்தில் திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

வரலாறு:

ஆழ்வார்திருநகரி -யானது பிராமணர்கள் அதிகமாக வாழும் பகுதியாகும். 

இங்குள்ள பிராமணர் ஒருவர் தான் வீரமாமுனிவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

1644 ஆம் ஆண்டின் இயேசு சபை அறிக்கையில், அருட்பணி. ஆண்ட்ரூ லோப்பஸ் அவர்கள், திருக்களூர் புனித மத்தேயு ஆலயத்தின் இணையூராக விளங்கிய ஆழ்வார்திருநகரியில் 30 கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்ததாக எழுதியுள்ளார்.

1647 ஆம் ஆண்டு ஆழ்வார்திருநகரியில் புனித அன்னம்மாள் பெயரில் சிற்றாலயம் ஒன்று இருந்தது.

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. மரிய வளன்

ஆலய வரலாறு: அருட்பணி. வெனான்சியுஸ் எழுதிய பவளவிழா நினைவு -தூத்துக்குடி மறைமாவட்ட புராதீன வரலாறு புத்தகம்.