புனித சவேரியார் ஆலயம்
இடம்: குசவன்குளம், உன்னங்குளம் அஞ்சல், 627108
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: கிறிஸ்து அரசர் ஆலயம், நாங்குநேரி
பங்குத்தந்தை அருட்பணி. டென்சில் ராஜா
குடும்பங்கள்: 18
மாதத்திற்கு ஒருமுறை மாலை 07:00 மணி திருப்பலி
திருவிழா: நவம்பர் மாதம் 24ஆம் தேதி முதல், டிசம்பர் மாதம் 03ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்:
அருட்பணி. ஜோசப் பாக்கியராஜ்
வழித்தடம்: நாங்குநேரி இரயில்வே கிராசிங் -திசையன்விளை பிரிவு -மூலக்கரைப்பட்டி -குசவன்குளம்
Location map: St Xavier's Church, Kusavankulam
https://maps.app.goo.gl/hD73WeKFAfnuvs5m9
வரலாறு:
நாங்குநேரி பங்கின் கீழ் இருந்த குசவன்குளத்தில், தொடக்கத்தில் புனித மிக்கேல் அதிதூதர் பெயரில் ஓலைக் குடிசை ஆலயம் அமைக்கப்பட்டு, இறைவனை வழிபட்டு வந்துள்ளனர்.
பின்னர் 1930 ஆம் ஆண்டு கல்சுவர் ஓட்டுக்கூரை வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டு, புனித சவேரியார் பெயரில் பெயர் மாற்றம் பெற்றது.
பங்குத்தந்தை அருட்பணி. நார்பர்ட் தாமஸ் அவர்களின் முயற்சி மற்றும் நிதிபங்களிப்புடன், தற்போதைய புதிய ஆலயத்திற்கு 17.02.2003 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 30.05.2003 அன்று ஆயர் பதிலாள் மேதகு Dr. ஜோசப் சேவியர் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
கொடிமரம் வைக்கப்பட்டு பேரருட்பணி. ஜோசப் கிறிஸ்டியான் சீனிவாசகன் (அதிபர், உலக இரட்சகர் திருத்தலம், திசையன்விளை) அவர்களால் 24.11.2020 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
நன்கொடையாளர் நிதியுதவியுடன் தூய மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்டு, 24.11.2021 அன்று பேரருட்பணி. ஜெரோம் ஹென்றி, SJ (அதிபர், தூய சவேரியார் கலைமனைகள், பாளையங்கோட்டை) மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொறுப்பாளர்கள்.