627 புனித மத்தேயு ஆலயம், பள்ளம்

                  

புனித மத்தேயு ஆலயம்
 

இடம் : பள்ளம் (பள்ளம்துறை)

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : முட்டம்

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருள்பணி. சூசை ஆன்றனி 

குடும்பங்கள் : 900  

அன்பியங்கள் : 40

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 05.30 மணி மற்றும் 07.00 மணிக்கும் திருப்பலி. 

ஞாயிறு தோறும் மாலை 05.00 மணிக்கு அதிசய அன்னையின் திருத்தேர் பவனி, ஜெபமாலை, குணமளிக்கும் ஜெபம், சாட்சியங்கள் பகிர்வு மற்றும் நற்கருணை ஆராதனை.

திங்கள், செவ்வாய், வியாழன், மற்றும் சனி : காலை 06.00 மணிக்கு ஜெபமாலை, காலை 06.30 மணிக்கு திருப்பலி.

புதன் மாலை 05.30 மணிக்கு சகாய மாதா நவநாள் திருப்பலி. 

வெள்ளி மாலை 05.30 மணிக்கு புனித மத்தேயு நவநாள் திருப்பலி. 

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 05.30 மணிக்கு நற்கருணை ஆராதனை திருப்பலி. 

திருவிழா : செப்டம்பர் மாதம் 21 ம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள். 

பள்ளம்துறை மண்ணின் இறையழைத்தல்கள் :

அருள்பணியாளர்கள்:

1. பேரருள்பணி. சேவியர் செலஸ்டின் 

2. அருள்பணி. தனிஸ்லாஸ் மரியா

3. அருள்பணி. D. ஆஞ்சலூஸ் ஆன்றனி

4. அருள்பணி. X. ஜான்போஸ்கோ 

5. அருள்பணி. A. ஜார்ஜ் ஆன்றனி 

6. அருள்பணி. Dr. A. அமல்ராஜ் 

7. அருள்பணி. G. மரிய பென்சிகர் 

8. அருள்பணி. G. மனுவேல் லோப்பஸ் 

9. அருள்பணி. A. வலேரியன் 

10. அருள்பணி. P. சகாயராஜ் 

11. அருள்பணி. T. டேவிட் 

12. அருள்பணி. V. இம்மானுவேல், SVD

13. அருள்பணி. S. சகாயதாசன் 

14. அருள்பணி. D. ஆன்றனிதாஸ் ஸ்டாலின் 

15. அருள்பணி. R. மைக்கேல் ராஜ் 

16. அருள்பணி. B. மைக்கேல் ராஜ் 

17. அருள்பணி. M. அமல்ராஜ் 

18. அருள்பணி. A. மரிய ஜெகநாத் 

19. அருள்பணி. F. சகாய ரூபன், Cpps 

20. அருள்பணி. J. பென் ஆன்டன் ரோஸ் 

21. அருள்பணி. W. ஜான் பிரிட்டோ 

22. அருள்பணி. ஜாண் ராபர்ட்

23. அருள்பணி. டோனி

24. அருள்பணி. ஜாண் பால் (மனோ)

25. அருள்பணி. ஜாண் பால் பிரிட்டோ

26. அருள்பணி. ஸ்டான்லின்

27. அருள்பணி. பெலிக்ஸ் ஆன்றனி

28. அருள்பணி. ஜாண் பெனிட்டோ

29. அருள்பணி. சகாய ஜெயகர்

30. அருள்பணி. பிரின்ஸ்

31. அருள்பணி. லெனின்

32. அருள்பணி. அலெக்ஸ்

33. அருள்பணி. ஆன்றனி ரீகன்

34. அருள்பணி. மோவின் ரிக்சன்

மண்ணின் அருள்சகோதரிகள்:

1. அருள்சகோதரி. மேரி பெனிக்னா

2. அருள்சகோதரி. P. அருள்மேரி 

3. அருள்சகோதரி. பெலின்டா C.T.C

4. அருள்சகோதரி. லூட்ஸ் மேரி

5. அருள்சகோதரி. ஜெசிந்தா 

6. அருள்சகோதரி. ரோஸ்லின் தாசன் C.T.C

7. அருள்சகோதரி. C. மெர்சி 

8. அருள்சகோதரி. ஸ்டெல்லா பல்தசார் 

9. அருள்சகோதரி. அல்போன்ஸ் கபிரியேல்

10. அருள்சகோதரி. ரெமோல்டா மேரி

11. அருள்சகோதரி. P. சேசுமேரி

12. அருள்சகோதரி. ஆனிபால் 

13. அருள்சகோதரி. A. பெலிக்ஸ் ரோஸ் 

14. அருள்சகோதரி. B. லூர்து மேரி 

15. அருள்சகோதரி. ஆன்சி 

16. அருள்சகோதரி. டீனா 

17. அருள்சகோதரி. மரிய அருள் சீலி 

18. அருள்சகோதரி. அருள் ஜோதி 

19. அருள்சகோதரி. ஜோதி 

20. அருள்சகோதரி. குணசீலி

21. அருள்சகோதரி. M. சோனியா மேரி

22. அருள்சகோதரி. L. அருள்சீலி 

23. அருள்சகோதரி. மேரி ஏஞ்சல் 

24. அருள்சகோதரி. பிரிஜிட் லதா 

25. அருள்சகோதரி. R. டெல்பின் மேரி

26. அருள்சகோதரி. கேதரின் ஹெலன்

27. அருள்சகோதரி. ஆன்டோ ஆரதி 

28. அருள்சகோதரி. ஜெசி ரபேல் 

29. அருள்சகோதரி. S. பிரிஜிட் 

30. அருள்சகோதரி. ஆன்ட்ரூஸ் மேரி ராபின்சன் 

31. அருள்சகோதரி. பெர்லின் பிரஜா 

32. அருள்சகோதரி. J. B. ஜெயா

33. அருள்சகோதரி. ஜெர்மீனாள் 

34. அருள்சகோதரி. மேரி சிந்தியா ராபின்சன் 

35. அருள்சகோதரி. V குழந்தை திரேஸ் 

36. அருள்சகோதரி. M. அற்பிதா 

37. அருள்சகோதரி. பிரபா

38. அருள்சகோதரி. ஆன்றனி பிரீனாதாஸ்

39. அருள்சகோதரி. J. ஹெர்பர்ட் ஷைலா.

40. அருள்சகோதரி. ஜோனி

41. அருள்சகோதரி. பிரிஜிட்

42. அருள்சகோதரி. வித்யா ரெஜி

43. அருள்சகோதரி. வசந்தி

44. அருள்சகோதரி. ப்ரபின் பெனி

45. அருள்சகோதரி. மேரி ஷாலினி

46. அருள்சகோதரி. சகாய சகித்தா

47. அருள்சகோதரி. மேரி பெனிலா.

வழித்தடம் : நாகர்கோவில் -செட்டிகுளம் வழியாக சங்குதுறை கடற்கரை சாலை.

Location map : https://g.co/kgs/ysCJbc

வரலாறு :

பள்ளம் பங்கின் வரலாறு கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் புனித தோமையார் காலத்திலேயே கிறிஸ்தவம் வேரூன்றி விட்டது என்பதற்கு சாட்சியாக சின்னமுட்டம் கல்வெட்டு (கி.பி 1464), கன்னியாகுமரி அருகே கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு (கி.பி 1526) மற்றும் பார்க்கர் ஹெராஸ் அடிகளார், வின்சென்ட் ஸ்மித், தியோகோ கொன்சால்வஸ் போன்ற அறிஞர்களின் எழுத்துகள் ஆகியவற்றையும் அருள்பணி. நற்சீசன் மேற்கோள் காட்டுகிறார். 

போர்த்துக்கீசியரின் வருகை:

போர்த்துக்கீசியரின் இந்திய வருகைக்குப் பின்னரே (கி.பி1498 மே 27) குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் கிறிஸ்தவம் வளரத் துவங்கியது. 

கி.பி 1535 -37 க்கும் இடைப்பட்ட காலத்தில் தூத்துக்குடி பகுதியில் முசுலீம் மற்றும் பிற படையெடுப்புகளின் தொல்லைகளிலிருந்து, பாதுகாப்பு வேண்டி 85 பரவர்குல பட்டங்கட்டிகள் கொச்சிக்கு வந்து போர்த்துக்கீசியரின் ஆதரவைக் கோரினர். ஆதரவு கிடைக்கவே பிரதிபலனாக பரவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாற முன்வந்தனர். அப்போது குமரி மாவட்டத்தில் பரவர்கள் அன்று வாழ்ந்து வந்த கன்னியாகுமரி, கோவளம், இராஜாக்கமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள  மக்கள் கி.பி 1535 டிசம்பரில் கிறிஸ்தவம் தழுவினர். 

முக்குவ கிறிஸ்தவர்கள் :

முத்துக்குளித்துறை பரத கிறிஸ்தவர்களை சந்திக்க சென்றுவரும் வழியில் அருள்தந்தை. ஜோன் த குரூஸ் அவர்கள் கி.பி 1537 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னரை சந்தித்து அவரது அரசிலுள்ள மீனவ மக்களை கிறிஸ்தவ மறையில் சேர்க்க அனுமதி பெற்றிருந்தார். அதற்கு ஈடாக அரசரின் குதிரைப் படைக்கு தேவையான குதிரைகளை போர்த்துக்கீசியர் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இதற்கு முன்னரே கி.பி 1517 ல் கொச்சியிலிருந்த முக்குவர், கிறிஸ்தவர்கள் ஆகியிருந்தனர். எனினும் குமரி மாவட்ட முக்குவர் மக்கள் கிறிஸ்தவர் ஆவதற்கு புனித சவேரியார் வருகை வரைக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. 

புனித பிரான்சிஸ் சவேரியார் :

கி.பி 1542 மே மாதத்தில் கோவா வந்திறங்கிய புனித சவேரியார், அக்டோபர் மாதத்தில் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார். அங்கிருந்து முத்துகுளித் துறையில் உள்ள பரதகுல புதுக் கிறிஸ்தவர்கள் நடுவில் கி.பி 1543 செப்டம்பர் வரை பணிபுரிந்தார். பின்னர் யாழ்ப்பாணம், கண்டி, கொச்சி போன்ற பணித்தளங்களுக்கு சென்றுவிட்டு கி.பி 1544 பெப்ரவரி மாதத்தில் மீண்டும் இப்பகுதிக்கு வந்தார். 

திருவிதாங்கூர் மன்னரை சந்தித்து கி.பி 1537 ல் போர்த்துக்கீசியரோடு, மன்னர் செய்த உடன்படிக்கையை புதுப்பித்தார். அதனால் மன்னருக்கு தேவையான குதிரைகளும் கிடைத்தன. கடலோரம் வாழ்ந்த முக்குவர் மக்கள் கிறிஸ்தவர் ஆவதற்கு அனுமதியும் கிடைத்தது. 

திருமுழுக்கு கொடுக்கும் பணியில் புனித சவேரியார் முழுமூச்சுடன் பணிபுரிந்தார். பூவாறு என்னும் கிராமம் தொடங்கி தெற்கு நோக்கி 13 கிராமங்களில், ஏறத்தாழ பத்தாயிரம் மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். அவ்வூர்கள் முறையே பூவாறு, கொல்லங்கோடு, வள்ளவிளை, தூத்தூர் பூத்துறை, தேங்காய்பட்டணம், இனையம், மிடாலம், வாணியக்குடி, குளச்சல், கடியபட்டணம், முட்டம், பள்ளம் ஆகியனவாகும்.

புனித சவேரியாரின் திட்டப்படி மணக்குடி வரை அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால் பள்ளம் ஊரில் இருக்கும் போது, இலங்கை மன்னாரில் கிறிஸ்தவம் தழுவிய புதுக்கிறிஸ்தவர்களை யாழ்ப்பாணம் அரசர் துன்புறுத்துவதாக செய்தி வந்ததால் மன்னார் நோக்கி பயணமானார். புறப்படும் முன்னர் மணப்பாட்டிலிருந்து தன் உதவியாளர் பிரான்சிஸ் மன்சிலாசுக்கு, மணக்குடி செல்லுமாறு 1544 டிசம்பரில் கடிதம் எழுதினார். மேலும் இக்கடிதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் கல்வி கற்க ஒரு பள்ளிக்கூடத்தையும் ஓர் ஆசிரியரையும் ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறார். 

மன்னாரிலிருந்து திரும்பி வந்ததும் திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய 20,000 பணத்தைக் கொண்டு 20 சிற்றாலயங்கள் அமைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இதில் ஒன்று பள்ளம் ஊரிலும் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது..! 

போர்த்துக்கீசியரின் ஆதிக்கம் :

புனித சவேரியார் கடற்கரை ஊர்களில் கணக்கபிள்ளை, மெலிஞ்சி, மூஸ்குகள் போன்ற பணிகளை உருவாக்கி வழிநடத்தச் செய்தார். கொம்பிரிய சபைகள் எனப்படும் சீருடை அணிந்த சபைகள் போர்த்துக்கீசியர் தொடங்கி வைத்தவைகளேயாகும். தூத்துக்குடி, கோட்டாறு மறைமாவட்டங்களின் கடலோர பங்குகள் தற்சார்புடையனவாக அன்றும் இன்றும் விளங்கி வருவதற்கு போர்த்துக்கீசியரின் வழிகாட்டுதலே காரணம். 

16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொல்லம் முதல் கன்னியாகுமரி வரை 30 ஆலயங்களும், 14,000 கிறிஸ்தவர்களும் இருந்தனர். இதில் 17 ஆலயங்களும் 7500 கிறிஸ்தவர்களும் இன்றைய கோட்டார் மறைமாவட்டப் பகுதியில் இருந்தனர் என்று சுர்காமர் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இவர்களை கவனிக்க இரண்டு குருக்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவர் குளச்சலிலிருந்து சவரா வரைக்கும் உள்ள வடபகுதியையும், மற்றவர் கன்னியாகுமரி வரையிலான தென்பகுதிகளையும் கவனித்து வந்தார். 

இக்காலகட்டத்தில் குமரி கிறிஸ்தவர்கள் பெரும் துன்பங்களுக்கு உட்படுத்தப் பட்டனர். காரணம் எப்போதெல்லாம் திருவிதாங்கூர் மன்னரும், போர்த்துக்கீசியர்களும் மோதிக் கொண்டார்களோ அப்போதெல்லாம் இங்கு வாழ்ந்த மக்கள் துன்பத்திற்கு ஆளாயினர். கி.பி 1572 ல் கடலோர கிராமங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன. 

17 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் புத்தன்துறை, குளச்சல், கடியபட்டணம், இராஜாக்கமங்கலம், கோட்டாறு ஆகிய 5 ஊர்களில் குருக்கள் தங்கியிருந்தனர். 370 கிறிஸ்தவர்களைக் கொண்ட பள்ளம், இராஜாக்கமங்கலத்தில் இருந்த குருவின் கண்காணிப்பில் இருந்தது. 

இப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த இயேசுசபை குருக்கள், அரசியல் காரணங்களுக்காக போர்த்துக்கீசியரால் வெளியேற்றப்பட்டு, கி.பி 1759-60 காலகட்டத்தில்  பிரான்சிஸ்கன் குருக்களின் கண்காணிப்பில் விடப்பட்டன. ஆனால் உள்நாட்டுப் பகுதியில் 27 ஆலயங்களில் இயேசு சபை குருக்கள் பணி செய்ய திருவிதாங்கூர் மன்னர் அனுமதித்தார். 

1765 ஆம் ஆண்டு குறிப்பு :

அப்போது கடற்கரையில் 30 ஆலயங்கள் மற்றும் சிற்றாலயங்கள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் மூன்றில் பிரான்சிஸ்கன் குருக்களும், மலபாரைச் சேர்ந்த ஒரு மறைமாவட்ட குருவும் பணியாற்றினார். 

இதில் பள்ளத்தை உள்ளடக்கிய நான்காவது பகுதிக்கு அருள்பணி. ஜான் தெ கிறிஸ்டோ, OFM பொறுப்பாக இருந்தார். 1774 ம் ஆண்டில் பிரான்சிஸ்கன் சபையினரும் வெளியேற்றப்பட்டனர். 1777 ல் மீண்டும் அனுமதிக்கப் பட்டனர். அப்போது புத்தன்துறை -பள்ளம் இரண்டும் இணைந்து அருள்பணி. ஆன்றனி தெ கொன்சேகாவின் பொறுப்பில் இருந்தன. 

பள்ளத்தில் அப்போதே புனித மத்தேயுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயம் ஒன்று இருந்தது. 

ஆங்கிலேயரின் ஆதிக்கம் :

திப்பு சுல்தானின் படையெடுப்பை எதிர்கொள்ள திருவிதாங்கூர் மன்னருக்கு ஆங்கிலேயரின் உதவி தேவைப் பட்டது. எனவே 'துணைப் படைத்திட்டத்தை' ஏற்றுக்கொண்டு தனது அரசில் ஆங்கில அரசப் பிரதிநிதியாகவும் திவானாகவும் மன்றோ பிரபுவை தங்க வைத்தார். புரோட்டஸ்டான்ட் சபை, லண்டன் மிஷனரிகளின் உழைப்பால் (London missionary society) வேகமாக உள்நாட்டுப் பகுதிகளில் பரவியது. கடற்கரை மீனவர்கள் முன்பே கிறிஸ்தவம் தழுவியிருந்ததால் இங்கு பரவவில்லை. 

மறைபரப்பு செயலகம் (Propaganda Fide) :

சில கார்மல் சபை மற்றும் கப்புச்சின் சபை குருக்களின் முயற்சியால் மறைபரப்பு செயலகம் 22.01.1622 ல் உரோமையில் உருவானது. இது திருத்தந்தையின் செயலகங்களில் ஒன்றாக செயல்பட்டு, மறைபரப்பு நாடுகளின் நற்செய்தி அறிவிப்புப் பணியை உரோமை நேரடியாக கண்காணித்து வந்ததால், இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் சமய அதிகாரம் கோவா -வுடன் வரையறை செய்யப்பட்டு, ஏனைய பகுதிகள் பல மறைமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒன்று கோட்டார் மறைமாவட்ட பகுதிகள் அடங்கிய வெராப்புழை மறை மாவட்டம்.

01.09.1886 அன்று கொல்லம் தனி மறைமாவட்டமாகியது. கோட்டாறு அதன் கீழ் இருந்தது.

ஆயர் பென்சிகர் :

கொல்லம் ஆயர் மேதகு பெர்டினார்ட் ஓசி 1905 ல் காலமானதைத் தொடர்ந்து, துணை ஆயராக இருந்த மேதகு அலாய்சியுஸ் மரிய பென்சிகர் அவர்கள் ஆயராக பொறுப்பேற்றார். முறையான கல்விக்கூடங்களை ஒவ்வொரு பங்கிலும் நிறுவினார். சிற்றாலயமாக இருந்த பள்ளம் தூய மத்தேயு ஆலயம் 1921 ல் பெரிதாக்கப் பட்டது. அத்துடன் அழகிய நெடிதுயர்ந்த தேர் ஒன்றும் செய்யப்பட்டது. ஆனால் ஆயர் அவர்களுக்கு தேரானது தேவையெனப் படவில்லை. எனவே அவரது ஆளுகையின் காலத்தில் தேர் ஓட அனுமதிக்கவேயில்லை. 1935 ம் ஆண்டுக்கு பிறகு தான் தேர் ஓடத் தொடங்கியது. 

26.05.1930 ல் கோட்டார் புதிய மறைமாவட்டமாக உதயமானது. முதல் ஆயராக மேதகு லாரன்ஸ் பெரைரா 05.10.1930 அன்று திருநிலைப் படுத்தப் பட்டார். அப்போது 25 பங்குகளும், 28 மறைமாவட்ட குருக்களும் இருந்தனர். இவர்களில் பள்ளம் ஊரைச் சேர்ந்த அருள்தந்தை. தனிஸ்லாஸ் மரியா அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

1939 -ஆம் ஆண்டு வரையில் புத்தன்துறையின் கிளைப் பங்காக பள்ளம் செயல்பட்டு வந்தது. 

பள்ளம் பங்கின் வளர்ச்சி:

1939 ஜூலை மாதத்தில் பள்ளம் தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. எனினும் 1941 அக்டோபரில் தான் முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. பிரான்சிஸ் போர்ஜியா பீட்டர்ஸ் நியமிக்கப் பட்டார். 

அருள்பணி. A. J. ஜோசப் அவர்கள் ஆலயத்திற்கு தரைஓடு தளம் அமைத்தார். 

அருள்பணி. ஜெரோம் மற்றும் அருள்பணி. ரிச்சர்ட் ரொசாரியோ ஆகியோர் ஆன்மீகப் பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு பக்தி முயற்சிகளை மேற்கொண்டனர். 

அருள்பணி. பர்ணபாஸ் நேவிஸ் பணிக்காலத்தில் ஆலயத்திற்கும், தொடக்கப்பள்ளிக்கும் மின் இணைப்பு பெறப்பட்டது. கத்தோலிக்க சேவா சங்கத்தினரின் முயற்சியால், தெங்கம்புதூர் கோயில்விளை பகுதியில் பலர் கிறிஸ்தவம் தழுவினர். 

அருள்பணி. இராயப்பன் (1967-1974) அவர்களின் பணிக்காலம், பள்ளம் பங்கின் பொற்காலம் எனப் போற்றப் படுகிறது. அவரது தொலைநோக்குப் பார்வையால் உருவானவைகள் தான் தூய யூதா ததேயு நடுநிலைப்பள்ளி, தூய வளனார் கன்னியர் இல்லம், சிறுமலர் தொழிற்பயிற்சிக் கூடம், சகாய அன்னை மருந்தகம் மற்றும் தாய்மை இல்லம் ஆகியவை. பல்வேறு பங்கேற்பு அமைப்புகளை உருவாக்கினார். பங்கிலிருந்து பலர் இறையழைத்தல் பெற்று அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகளாக உருவாகக் காரணமாக இருந்தார். பல்வேறு துறைகளில் பள்ளம் பங்கினை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற அருள்பணி. இராயப்பன் அவர்களை போற்றும் விதமாக நடுநிலைப் பள்ளி கட்டிடத்திற்கு "தந்தை I. இராயப்பன் நினைவுக் கட்டிடம்" என பங்கு மக்கள் பெயர் சூட்டியுள்ளனர். 

அருள்பணி. செபாஸ்டின் அவர்கள் நடுநிலைப் பள்ளியை, 1978 ல் உயர்நிலைப் பள்ளியாக்கினார். மண்ணின் மைந்தர் அருள்பணி. A. P. ஸ்டீபன் அவர்களின் உதவியோடு உயர்நிலைப் பள்ளி கட்டிடத்திற்கு அடித்தளமிட்டார். 

அருள்பணி. சிரில் பர்னாண்டோ பணிக்காலத்தில் 1980 -ம் ஆண்டில் பள்ளம் பங்கின் கிளைப்பங்காக இருந்த காட்டுவிளை, புத்தன்துறை பங்கின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது. 

1982 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட புதூர் மண்டைக்காடு கலவரத்தில் பள்ளம் ஆலயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.  ஆலயத்தில் உள்ள சுரூபங்கள் நொறுக்கப் பட்டன. நெடிதுயர்ந்த அழகிய தேர் எரித்து சாம்பலாக்கப் பட்டது. 

அப்போது மாவட்டத்தில் சமய நல்லிணக்கத்தை உருவாக்க மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி, தவத்திரு குன்றக்குடி அடிகளார், மற்றும் இசுலாமிய தலைவர்களடங்கிய "திருவருள் பேரவை" அமைக்கப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் ஓர் அமைதிக்குழு உருவாக்கப் பட்டது. 

ஆலய சீரமைப்பு :

1982 ம் ஆண்டு மே மாதத்தில் அருள்பணி. V. ஹிலாரியுஸ் அவர்கள் பொறுப்பேற்று ஆலயத்தை சீரமைத்தார். மார்ச் மாதக் கலவரத்தில் வீடிழந்தவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட வீடுகள் சீரமைத்து கொடுக்கப் பட்டன. வீடிழந்தவர்களுக்கு கோட்டாறு சமூக சேவை சங்கத்தின் உதவியுடன் ஊருக்கு அருகில் நிலம் வாங்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டன. 

மேலும் தாமரைக்குளத்தின் அருகே இருந்த 2.25 ஏக்கர் நிலத்தை வேலைக்கு உணவு திட்டத்தின் அடிப்படையில் பண்படுத்தி, வாழை, தென்னை மரங்களை நட்டு வைத்து வருவாய் ஈட்டச் செய்தார். 1985 ல் முதல் அருட்பணிப் பேரவை அமைத்தார். 

அருள்பணி. A. கஸ்பார் பணிக்காலத்தில் கல்விப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதுடன், இறையழைத்தல்கள் ஊக்கப்படுத்தப் பட்டது. 

அருள்பணி. S. இயேசு ரத்தினம் பணிக் காலத்தில் தரைத்தளத்தோடு நின்ற உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தில், KSSS உதவியோடு மேல்தளம் அமைத்தார். மேலகிருஷ்ணன் புதூரிலிருந்து குடிநீர் கொண்டுவர ஏற்பாடு செய்தார். 

1996 ல் பொறுப்பேற்ற அருள்பணி. P. மரியசூசை பணிக்காலத்தில் பங்கின் 75 ஆம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. 

அருள்பணி. பிரான்சிஸ் M. வின்சென்ட் பணிக்காலத்தில் பள்ளம் தூய யூதா ததேயு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆனது. 1999 ஆம் ஆண்டில் பள்ளம் பங்கின் கிழக்குப் பகுதி,  பிரிக்கப்பட்டு கோட்டாறு பங்கின் கிளைப் பங்காக (அன்னைநகர்) மாற்றப்பட்டது. 

அருள்பணி. ஜான் ரூஃபஸ் பணிக்காலத்தில் ஆலயத்தில் இடப்பற்றாக்குறை இருந்ததால், ஆலயத்தை விரிவாக்கம் செய்ய 07.02.2004 அன்று குருகுல முதல்வர் பேரருள்பணி. E. ஜான்குழந்தை அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டது. 

2004 ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் பள்ளம் பங்கு பெரிதும் பாதிக்கப்பட்டது. 

2005 ல் பொறுப்பேற்ற அருள்பணி. பிரான்சிஸ் M. போர்ஜியா அவர்கள், சுனாமியால் வீடிழந்தவர்களுக்கு,  நிலம் வாங்க அரசு நிர்ணயித்த தொகைக்கு மேல் நிதி தேவைப்பட, அருள்பணி. G. ஜெரோமியாஸ் அவர்களும், அவர்தம் தொண்டு நிறுவனமும்

உதவிசெய்ய, காரித்தாஸ் KSSS நிறுவனம் அமைத்துக் கொடுத்த 34 வீடுகள், 14.08.2006 அன்று மாவட்ட ஆட்சியர் சுனில்பாலிவால் தலைமையில் மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

பங்குத்தந்தையின் சீரிய முயற்சி, பங்கு மக்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் ஆலயப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, 21.09.2007 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பங்கில் உள்ள குருசடிகள் மற்றும் திருவிழாக்கள்:

1. புனித மத்தேயு குருசடி

2. புனித இராயப்பர் குருசடி

3. புனித அந்தோனியார் குருசடி:

திருவிழா மூன்று நாட்கள். 1 ம் நாளில் கொடியேற்றம் மற்றும் திருப்பலி. 

2 ம் நாள் நற்கருணை ஆராதனை 

3 ம் நாள் திருவிழா திருப்பலி மற்றும் சமபந்தி விருந்து. 

4. புனித லூர்து மாதா குருசடி

திருவிழா : முதல் நாள் கொடியேற்றம் மற்றும் திருப்பலி 

2ம் நாள் நற்கருணை ஆராதனை 

3ம் நாள் திருவிழா திருப்பலி மற்றும் சமபந்தி

5. காரமல் அன்னை சபையினர் திருவிழா (பங்கு ஆலயத்தில்)

#முதல் நாள் கொடியேற்றம் மற்றும் திருப்பலி

#2 -ம் நாள் நற்கருணை ஆராதனை

#3 -ம் நாள் திருவிழா திருப்பலி மற்றும் சமபந்தி.

ஆகிய விழாக்கள்  சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பங்கின் சிறப்புகள்:

1. புனித யூதா ததேயு தொடக்கப்பள்ளி

2. புனித யூதா ததேயு மேல்நிலைப்பள்ளி

3. அஞ்சல் அலுவலகம்

4. கிராம நூலகம்

5. மீனவர் கூட்டுறவு சங்கங்கள்1,2,3

6. பங்கு மக்கள் வங்கி

7. புனித மத்தேயு வணிக வளாகம்

8. தூய காணிக்கை அன்னை சபை இல்லம்

9. தூய வளனார் கன்னியர் இல்லம்

10. சகாய மாதா சுகாதார நிலையம் மருந்தகம் மற்றும் தாய்மை இல்லம் 

11. பங்கு அலுவலகம் மற்றும் பங்குத்தந்தை இல்லம் 

12. பாலர் பள்ளி

13. அங்கன்வாடி மையம்

14. சமுதாய நலக்கூடம்

15. Grand lodge of India திருமண மண்டபம்

‍16. விளையாட்டு மைதானம்

17. மீன் நிறுவைக்கூடங்கள்

18. பஞ்சாயத்து அலுவலகம்

19. தாமரைக்குளம்

20. நியாய விலைக்கடை

21. அரசுப்பேருந்து வசதி (36, 36A, 36B,36D,303)

22. மீனவர் ஓய்வுக்கூடம்

23. வலை பழுதுபார்க்கும் கூடம்

24. கடல்தொழில் பாதுகாப்பிற்கான தூண்டில் வளைவு.

25. அழகிய சங்குதுறை கடற்கரை....

மற்றும் பல சிறப்புகளை கொண்டுள்ளது பள்ளம் கடற்கரை கிராமம்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்கு அருள்பணிப் பேரவை

2. பக்தசபைகள் ஒருங்கிணையம்

3. திருவழிபாட்டுக்குழு

4. பீடப்பூக்கள் 

5. பாடகற்குழு

6. கிறிஸ்தவ வாழ்வு சமூகம் 

7. முக்கடல் ஆண்கள் இயக்கம் 

8. மீன்பிடித் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 

9. மறைக்கல்வி மன்றம் 

10. பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை

11. கத்தோலிக்க சேவா சங்கம் (ஆண்கள்) 

12. கோல்பிங் இயக்கம் 

13. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

14. பெண்கள் பணிக்குழு

15. பாலர் சபை

16. சிறார் இயக்கம்

17. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் (Ycs)  

18. மரியாயின் சேனை

19. தோழமை தலைச்சுமடு பெண்கள் இயக்கம்

20. கார்மல் சபை

21. இளைஞர் இயக்கம்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. பிரான்சிஸ் போர்ஜியா பீட்டர்ஸ் (1941-1944)

2. அருள்பணி. A. J. ஜோசப் (1944-1947)

3. அருள்பணி. ஜெரோம் பர்னாண்டோ (1947-1949)

4. அருள்பணி. ரிச்சர்ட் ரொசாரியோ (1949-1953)

5. அருள்பணி. S. தர்மநாதர் (1954-1961)

6. அருள்பணி. J. பர்ணபாஸ் நேவிஸ் (1961-1967)

7. அருள்பணி. I. இராயப்பன் (1967-1974)

8. அருள்பணி. செபாஸ்டின் பர்னாண்டோ (1974-1980)

9. அருள்பணி.  சிறில் S. பர்னாண்டோ (1980-1982)

10. அருள்பணி. Y. ஹிலாரியுஸ் (1982-1985)

11. அருள்பணி. A. கஸ்பார் (1985-1989)

12. அருள்பணி. S. இயேசு ரத்தினம் (1989-1992)

13. அருள்பணி. A. ஜோசப் ஆஞ்சலோ (1992-1994)

14. அருள்பணி. V. ஜான் போஸ்கோ (1994-1995)

15. அருள்பணி. P. மரிய சூசை (1996-1997)

16. அருள்பணி. பிரான்சிஸ் M. வின்சென்ட் (1997-1998)

17. அருள்பணி. J. பிரான்சிஸ் சேவியர் (1999-2002)

18. அருள்பணி. T. ஜான் ரூஃபஸ் (2002-2005)

19. அருள்பணி. பிரான்சிஸ் M. போர்ஜியா (2005-2009)

20. அருள்பணி. ஜெரோமியாஸ் (2009-2010)

21. அருள்பணி. மரியசூசை (2010-2013)

22. அருள்பணி. அந்தோணிபிச்சை (2013-2016)

23. அருள்பணி. ஜான்சன் (2016-2017)

24. அருள்பணி. சேவியர்ராஜ் சாம் 

25. அருள்பணி. சூசை ஆன்றனி (2017 முதல் தற்போது வரை..)

ஆசிரியர்கள், 

மருத்துவர்கள்,

விளையாட்டு வீரர்கள்,

விஞ்ஞானிகள்,

பொறியாளர்கள்,

எழுத்தாளர்கள்,

அரசுப் பணியாளர்கள்,

குருக்கள்,

கன்னியர்கள்

போன்றோரையும்...

*இந்தியாவிற்கு ஆண்டுக்கு ரூபாய் 60,000 கோடி அந்நிய செலவாணியை ஈட்டித்தரும்  பாரம்பரியம் மிக்க கடல் தொழில் செய்யும் மீனவர்களையும்* ஆண்டுதோறும் உருவாக்கித் தந்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் பெருமையை கொண்ட அமைதியான ஊர், அரப்பிக்கடலோரத்தில் அமைந்துள்ள  பள்ளம் துறை.

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. சூசை ஆன்றனி

ஆலய வரலாறு : ஆலய அர்ச்சிப்பு விழா மலர். 

புகைப்படங்கள் : ஆலய உறுப்பினர்.