181 தூய சவேரியார் ஆலயம், சேவியர்புரம்


தூய சவேரியார் ஆலயம்

இடம் : சேவியர்புரம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

பங்குத்தந்தை : அருட்பணி ஐசக் ராஜ்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், #மைலகோடு (மைலோடு)

குடும்பங்கள் : 130
அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு

புதன் மாலை 06.00 மணிக்கு நவநாள் திருப்பலி

மாதத்தின் இரண்டாம் ஞாயிறு சிறார் திருப்பலி.

திருவிழா : டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் பத்து நாட்கள்

வரலாறு :

நூறாண்டுகளுக்கு முன்னர் 25 குடும்பத்தினர் இணைந்து புனித சவேரியாரை பாதுகாவலராகக் கொண்டு குருசடி ஒன்றை அமைத்து தினமும் செபமாலை செபித்து வந்தனர்.

1955 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாளில் அருட்பணி சூசை மரியான் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

1968 ஆம் ஆண்டு அருட்பணி. அந்தோணிமுத்து அவர்களால் ஆலயம் அமைக்க 10 சென்ட் நிலம் திரு. இன்னாசிமுத்து அவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்று, புதிய ஆலயம் கட்டப்பட்டு 19.12.1977 ல் மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

2002 ஆம் ஆண்டு அருட்பணி. ஜார்ஜ் பொன்னையா அவர்களின் முயற்சியால் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

ஊர் எல்லையில் குருசடி ஒன்று அமைக்கப் பட்டு 28.12.2003 அன்று பேரருட்பணி. இயேசுரெத்தினம் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

21-12-2018 அன்று தூய லூர்து மாதா கெபி அர்ச்சிக்கப்பட்டது.

மைலோட்டில் இருந்து ஒரு கி.மீ உட்புறமாக சென்றால் இவ்வாலயத்தை அடையலாம்.