656 பரலோக அன்னை ஆலயம், வெங்கடாசலபுரம்

       

புனித பரலோக அன்னை ஆலயம் - புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் 

இடம் : வெங்கடாசலபுரம், கருப்பூர் அஞ்சல், உப்பத்தூர் வழி, எட்டயபுரம் தாலுகா, 

மாவட்டம் : தூத்துக்குடி 

மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

மறைவட்டம் : கோவில்பட்டி

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் : 

1. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கருப்பூர் 

2. கடலையூர் (ஆலயம் இல்லை) 

பங்குத்தந்தை : அருள்பணி. S. அல்போன்ஸ் 

குடும்பங்கள் : 306 (பங்கு 240, கிளைப்பங்குகள் 66)

அன்பியங்கள் : 4

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி அதிகாலை 04.30 மணி, காலை 07.00 மணி, காலை 11.30 மணி

திங்கள், புதன் திருப்பலி : காலை 06.00 மணி

செவ்வாய், வியாழன், வெள்ளி திருப்பலி : மாலை 07.00 மணி

தமிழ் மாத கடைசி சனிக்கிழமை காலை 10.30 மணி நவநாள் திருப்பலி, மாலை 06.00 மணியிலிருந்து புனித மிக்கேல் அதிதூதர் தேர்பவனி, நவநாள் திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை ஆசீர், அசன உணவு

திருவிழா : ஈஸ்டர் பண்டிகை முடிந்த 40வது நாளாகிய இயேசுவின் விண்ணேற்பு பெருவிழா நாளில் 

செப்டம்பர் மாதம் 30 ம் தேதி புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா. காலையில் தியானம், தொடர்ந்து ஒப்புரவு, திருப்பலி, இரவு உணவு

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்பணி. அந்தோணிராஜன், மதுரை உயர் மறைமாவட்டம் 

2. அருள்பணி. S. A. அந்தோணிசாமி

3. அருள்பணி. மிக்கேல் பிரகாசம் 

4. அருள்பணி. சவரிமுத்து, வாரணாசி (late) 

5. அருட்சகோதரி. சூ எலிசபெத் செல்வி, FSS 

6. அருட்சகோதரி. சூ. மரியமிக்கேல் 

7. அருட்சகோதரி. சவரியம்மாள், OSM (ஜான்சி) 

8. அருட்சகோதரி  ம. ஜோஸ்பின், FSJ

9. அருட்சகோதரி. கா. வேளாங்கண்ணி, FSJ

10. அருட்சகோதரி. அ. தேவசகாயராணி, SND

11. அருட்சகோதரி. இ. மிக்கேல் வென்சி, FSS

12. அருட்சகோதரி. சூ. மிக்கேல் செளமியா

வழித்தடம் : கோவில்பட்டி -கடலையூர் -வெங்கடாசலபுரம்

கருப்பூர், முத்தலாபுரம் செல்லும் பேருந்துகள் 

Location map : 

St. Michael Shrine

Venkatasalapuram - Karupoor Rd, Venkatasalapuram, Tamil Nadu 628502

095666 44740

https://maps.app.goo.gl/VVLJm3qWjFPdgZ7f7

வரலாறு :

கோவில்பட்டியிலிருந்து 18 கி.மீ தூரத்திலும், எட்டயபுரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலும், உப்பத்தூரிலிருந்து 2 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள எளிய கிராமம் வெங்கடாசலபுரம். 

வெங்கடாசலபுரத்தில் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பனை ஓலைக் குடிசையில் தொடங்கிய கிறிஸ்தவ விசுவாச பயணம் புனித பரலோக அன்னையின் அரவணைப்பிலும், இணைப் பாதுகாவலரான புனித மிக்கேல் அதிதூதரின் பாதுகாவலிலும் இன்று வரையிலும் தொடர்கிறது. 

வெங்கடாசலபுரமானது தொடக்கத்தில் காமநாயக்கன்பட்டி பங்கின் ஒரு பகுதியாக விளங்கியது. கி.பி 1898 ஆம் ஆண்டு ரூ. 8000 பொருட்செலவில் பாரம்பரியமிக்க இந்த திருத்தல ஆலயம் கட்டப்பட்டது. 

பின்னர் 1953 ஆம் ஆண்டு முதல் கோவில்பட்டி பங்கின் கீழ் வெங்கடாசலபுரம் செயல்பட்டு வந்தது. 

06.06.2010 அன்று வெங்கடாசலபுரம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, நம்பி வருபவர்களுக்கு புகலிடமாக திகழ்கிறது. 

இவ்வூரின் அமைப்பு மற்றும் வழிபாட்டு முறை ஆன்மீகத்தின் ஆழமான பாரம்பரியத்தை விளக்கி சொல்கிறது. காரணம் ஊரில் நுழையும் போது புனித குழந்தை தெரசாள் குருசடியும், மறுமுனையில் புனித சவேரியார் குருசடியும், இன்னொரு புறம் புனித செபஸ்தியார் குருசடியும் அமைந்திருப்பது இறைபராமரிப்பில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. இதன் அடிப்படையில் தற்போதைய ஆலயத்தின் வடபகுதியில் புனித மிக்கேல் அதிதூதர் குருசடியும் (பனை ஓலை குருசடி) இருந்துள்ளது. எனவே மக்களிடையே பரலோக அன்னை மீது கொண்ட பக்தி போன்று புனித மிக்கேல் அதிதூதர் மீதும் ஆழமாக வளர்ந்து வந்துள்ளது. 

திருவிழாவின் போது சென்னைவாழ், வெங்கடாசலபுரம் பங்கு மக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று, இணைந்து சிறப்பிப்பது தனிச்சிறப்பு. மேலும் பங்கின் வளர்ச்சியிலும் இவர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. 

சனிக்கிழமை மாலையில் திருப்பயணிகள் திருத்தலத்தில் தங்கி இருந்து ஜெபிக்கின்றனர். ஞாயிறு காலை 04.30 மணிக்கு திருப்பயணிகளுக்காக திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகின்றது. 

எண்ணற்ற அற்புதங்கள் இத்திருத்தலத்தில் நடந்து வருவதால் மறைமாவட்ட திருத்தலமாக உயர்த்தப்பட்டு, மக்களின் ஆன்மீக புகலிடமாக திகழ்கிறது. 

ஆலயத்தில் புதுமைக் கிணறு ஒன்று உள்ளது. ஆலயத்திற்கு வருகிற திருப்பணிகள் கிணற்றில் குளித்து விட்டு, ஆலயத்தை சுற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

புனித வளனாரின் பிரான்சிஸ்கு சபை (FSJ) அருட்சகோதரிகள் இல்லம் உள்ளது. 

அருட்சகோதரி. லில்லி மேரி

அருட்சகோதரி. ஜெனட்

அருட்சகோதரி. வேளாங்கண்ணி

புனித மிக்கேல் மருந்தகம் 

இனிகோ தொடக்கப்பள்ளி

அசனக்கூடம்

மிக்கேல் அதிதூதர் மண்டபம் 

மாணவர் இல்லம் ஆகியவையும் உள்ளன. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. திருக்குடும்பசபை

2. இளைஞர் இயக்கம் 

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

4. பீடப் பூக்கள் 

5. பாடகற்குழு 

6. பாலர்சபை 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்:

1. அருள்பணி. V. S. அந்தோணிராஜ் (2010-2015)

2. அருள்பணி. மைக்கேல் வில்சன் (2015-2019)

3. அருள்பணி. S. அல்போன்ஸ் (2019 முதல் தற்போது வரை)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் :

பங்குத்தந்தை அருள்பணி. S. அல்போன்ஸ்