326 புனித அந்தோணியார் ஆலயம், வாடிவிளை, நெய்யூர்


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : வாடிவிளை, நெய்யூர் (PO).

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : காரங்காடு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சவேரியார் ஆலயம், #மாங்குழி

பங்குத்தந்தை : அருட்பணி A. M அருள்தேவ்

குடும்பங்கள் : 165
அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு
செவ்வாய் மாலை 06.30 மணிக்கு நவநாள், திருப்பலி.

திருவிழா : ஜூன் 13-ஆம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

சிறப்பு : பேய் பிடித்தவர்கள் இவ்வாலயம் வந்து நலம் பெற்றுச் சென்றனர்.

மண்ணின் மைந்தர்கள் :

1. Fr. L அலோசியஸ்
2. Fr ஜஸ்டின் திரவியம்.

1.Sister ஜூலியட்

வழித்தடம் : திங்கள்நகரில் இருந்து மணவாளக்குறிச்சி செல்லும் சாலையில், 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வாடிவிளை.

பேருந்துகள் : திங்கள்நகர்-மணவாளக்குறிச்சி 47A, மற்றும் சிவரஞ்சனி மினிபஸ்.

வரலாறு :

குமரி மாவட்டத்தின் திங்கள்நகருக்கு தெற்கே மணவாளக்குறிச்சி செல்லும் சாலையில் ஒன்றரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம்.

கொள்ளை நோயிலிருந்து விடுபடவும், தங்களது தேவைகளுக்காக ஜெபிக்கவும், கி.பி 1917 -ஆம் ஆண்டு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து குருசடி ஒன்று கட்டி அதில் புனித அந்தோணியார் சுரூபத்தை பாதுகாவலராக கொண்டு இறைவனிடம் ஜெபித்து வந்தனர்.

மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வந்த புனிதர், 1975-ஆம் வருடம் மே 30 -ம் நாளில் புதுமை ஒன்றை இங்கு நிகழ்த்தினார். இதனையறிந்த மக்கள் சாதி சமய பேதமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் புனிதரை நாடி வந்து நலம் பெற்றுச் சென்றனர். இதனால் இறைமக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்ததால், அன்றைய வட்டார முதன்மைப் பணியாளர் அருட்பணி இயேசு ரத்தினம் அவர்களின் முயற்சியாலும், ஆன்றைய மாங்குழி பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் ராஜ் அவர்களின் அயராத முயற்சிகளாலும் 02-04-2002 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் மாங்குழி பங்கின் கிளைப் பங்காக வாடிவிளை புனித அந்தோணியார் ஆலயம் உயர்த்தப்பட்டது.

பின்னர் பங்கு மக்களின் அயராத உழைப்பு மற்றும் முயற்சியால் புதிய ஆலயம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அருட்பணி S மரியதாஸ் அவர்களின் பணிக்காலத்தில் பணிகள் நிறைவு பெற்று, 12-06-2006 அன்று முளகுமூடு வட்டார முதன்மை பணியாளர் அருட்பணி S. இயேசுரத்தினம் அவர்கள் முன்னிலையில், கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

02-03-2008 அன்று தூய அந்தோணியார் செப இல்லம் கட்ட அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 19-05-2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி M. கலிஸ்டஸ் பணிக்காலத்தில் அழகிய மணிமண்டபம் கட்டப்பட்டு 17-06-2012 அன்று பேரருட்பணி சகாயதாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி ரொமேரிக் ததேயுஸ் பணிக்காலத்தில் புதிய கொடிமரம் வைக்கப்பட்டு 09-06-2017 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

தற்போது அருட்தந்தை அருள்தேவ் அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது வாடிவிளை புனித அந்தோணியார் ஆலய இறை சமூகம்.