817 அற்புத குழந்தை இயேசு ஆலயம், வல்லம் -செங்கல்பட்டு

     

அற்புத குழந்தை இயேசு ஆலயம், 

இடம்: வல்லம், செங்கல்பட்டு. 

மாவட்டம்: செங்கல்பட்டு. 

மறைமாவட்டம்: செங்கல்பட்டு. 

மறைவட்டம்: செங்கல்பட்டு. 

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. தூய ஆரோக்கிய மாதா ஆலயம், மேலமையூர்.

2. தூய லூர்து அன்னை ஆலயம், பாரதபுரம். 

பங்குத்தந்தை: அருட்பணி. பெலிக்ஸ், OFM Cap. 

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. ஜான் பீட்டர், OFM Cap. 

குடும்பங்கள்: 150

அன்பியங்கள்: 9

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி & மாலை 06:15 மணி. 

வாரநாட்களில் திருப்பலி மாலை 06:15 மணி. 

செவ்வாய் மாலை 06:15 மணி: புனித அந்தோணியார் நவநாள் & திருப்பலி. 

வியாழன் மாலை 06:15 மணி: அற்புத குழந்தை இயேசுவின் நவநாள் & திருப்பலி. 

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06:15 மணி: புனித அந்தோணியார் சிறுத்தேர்ப்பவனி, நவநாள் & திருப்பலி. 

மாதத்தின் முதல் வியாழன் மாலை 06:15 மணி: அற்புத குழந்தை இயேசுவின் சிறுத்தேர்ப்பவனி, நவநாள் & திருப்பலி. 

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணி: இறை இரக்க நவநாள், ஆராதனை & திருப்பலி. 

முதல் சனிக்கிழமை மாலை 06:15 மணி: அன்னையின் சிறுத்தேர்ப்பவனி & திருப்பலி.

வாரத்தின் அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் உடல் நிலை குன்றியவர்களுக்கும், முதியவர்களுக்கும் திவ்ய நற்கருணை வழங்கப்படுகிறது. 

திருவிழா:

ஜனவரி - பொங்கல் திருவிழா முடிந்த பின் வரும் வியாழன் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, வெள்ளி, சனி, ஞாயிறு. 

 ஆலய வரலாறு:

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம், செங்கல்பட்டு புனித சூசையப்பர் ஆலய பங்கின் கிளையாக, 15 குடும்பங்களுடன் 1965-இல் வல்லம் கிளைப்பங்கு கார்மேல் அன்னை ஆலயம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. அதன் காரணமாகவே இந்த ஆலயத்தின் தெருவின் பெயருக்கு, 'மாதா தெரு' என்று பெயர் சூட்டப்பட்டது.

35 ஆண்டுகால பயணத்திற்கு பிறகு, 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம், வல்லம்  செங்கல்பட்டு புனித சூசையப்பர்  பங்கிலிருந்து பிரிந்து, தனிப்பங்காக சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட ஆயர் மூலம் அறிவிக்கப்பட்டு, கப்புச்சின் சபையினரிடம் (OFM Cap) ஒப்படைக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக மதிப்பிற்குரிய அருள்பணியாளர் மத்தியாஸ், OFM Cap

அவர்கள் பொறுப்பேற்றார். 

அதன்பிறகு, மக்கள் மற்றும் குருக்களின் ஆலோசனையின்படி வல்லம் ஆலயம் அற்புத குழந்தை இயேசு ஆலயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

கிளைப் பங்குகளாக சோகண்டி, ஓழலூர், அடைவிலாகம், மணப்பாக்கம், மேலமையூர் ஆகியன செயல்பட்டு வந்தன.

2002 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மறைமாவட்டம் உதயமான போது, வல்லம் குழந்தை இயேசு ஆலயமானது, செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் கீழ் வந்தது.

2005 ஆம் ஆண்டு, அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. செல்வராஜ், OFM Cap அவர்களின் தலைமையில் குருக்கள், கன்னியர்கள், இறைமக்கள் அனைவரும் இணைந்து வல்லம் புதிய ஆலயம், மணி கோபுரம் மற்றும் அன்னையின் கெபி அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு அருட்பணி. ஆல்பர்ட், OFM Cap அவர்களின் முயற்சியால் கிளைப் பங்கான சோகண்டி, தனிப்பங்காக செங்கல்பட்டு மறை மாவட்டத்தின் ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால்  அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டிலேயே வல்லம் ஆலய வளாகம் முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு அருட்பணி. அலெக்ஸ் செல்லையா, OFM Cap அவர்களின் தலைமையில், NGGO நகர் மற்றும் காமராஜர் நகர் மக்களுக்காக ஆலயம் கட்ட காமராஜர் நகர் பகுதியில் இடம் வாங்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு அருட்பணி. ஜான்சன், OFM Cap அவர்களின் முயற்சியால், NGGO நகர் கிளைப் பங்காக அறிவிக்கப்பட்டது. 

2015 ஆம்  ஆண்டில், வல்லம் பணித்தளமானது, கிளைப்பங்காக உருவெடுத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த விழாவானது விமரிசையாக கொண்டாடப்பட்டது. அச்சமயம், அருட்பணி. அலெக்சாண்டர், OFM Cap அவர்களின் முயற்சியால், புனித அந்தோணியார் திருவுடை திருப் பண்டமானது உரோமை நகரிலிருந்து கொண்டுவரப்பட்டு, ஆலயத்தில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறுவப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜூபிலி கட்டிடம் கட்டப்பட்டது. 2018 ஆம் ஆண்டு NGGO நகரில் புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜூபிலி கட்டிடத்தின் கீழ்தளத்தில் மக்களை சந்திப்பதற்காக குருக்களுக்கான அறைகளும்,  ஜூபிலி கட்டிட முழுமை பணிகளும், ஆலய வளாகத்திலுள்ள அன்னையின் கெபி புதுப்பித்தல் பணிகளும் அருட்பணி. திமோத்தி, OFM Cap அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மேலமையூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த, பழுதடைந்த ஆலயத்தை இடித்து, புதிய ஆலயம் கட்டும் பணியானது அருட்பணி. திமோத்தி  தலைமையில் பெப்ரவரி 2021இல் தொடங்கப்பட்டு, அக்டோபர் 2021இல் மிகவும் சிறப்பாக முடிக்கப்பட்டது. அதே வேளையில், ஒழலூர் கிளைப்பங்கில், பழுதடைந்த ஆலயத்திற்கு மாற்றாக புதிய ஆலயம் கட்டுவதற்கான அடித்தள பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டது. NGGO நகர் ஆலயத்தில் கிடப்பிலிருந்த பணிகள் முடிக்கப்பட்டதோடு, புதிய பங்காக உதயமாக சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

மே மாதம் 2022 இல், அருட்பணி. பெலிக்ஸ் OFM Cap, அவர்களின் பணிக்காலத்தில் NGGO நகர் தனிப்பங்காக உதயமானது.

15 குடும்பங்களுடன் கிளைப்பங்காக தொடங்கப்பட்ட வல்லம் பகுதி, இப்பொழுது சோகண்டி மற்றும் NGGO நகர் என்ற பங்குகளின் தாய் பங்கு என்ற பெருமையை பெற்று, அந்த இரண்டு பங்குகளுக்கும் பிள்ளைகளை கொடுத்தது போக, தற்போது 150 குடும்பங்களோடு சிறந்து விளங்குகிறது. கடந்த 22 ஆண்டுகளாக, இப்பங்கை வழிநடத்திக் கொண்டு வந்துள்ள கப்புச்சின் துறவிகள் அனைவருக்கும், பங்கு மக்கள் என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. பெண்கள் பணிக்குழு

3. நிதித்குழு

4. மறைக்கல்வி

5. பாடகற்குழு

6. பீடச்சிறார்

7. பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை

8. இளையோர் குழு

9. திருவழிபாட்டுக் குழு 

ஞாயிற்றுக்கிழமைகளில் நடனப் பயிற்சி, பாடல் பயிற்சி, Spoken English ஆகியன நடத்தப்பட்டு வருகிறது.

Religious:

1. அமல அன்னை இளம் குருமாணவர் இல்லம்.

2. Infant Jesus Friary (OFM Cap)

3. Sisters of St. Ann's of Providence

St. Anne’s Provincialate, Animation Centre, Dispensary, 

St Ann's Matriculation School, 

அருட்சகோதரிகள் பயிற்சி இல்லம் ஆகியவற்றை புனித அன்னாள் சபையினர் வழிநடத்தி வருகின்றனர்.

4. பாதை மையம், இயேசு சபையினர் (SJ) நடத்தி வருகின்றனர்.

5. Hearts Home - பிரெஞ்சு அருட்பணியாளர்கள் வழிநடத்தி வருகின்றனர்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Rev. Fr. Mathias, OFM Cap (2000-2002) 

2. Rev. Fr. Selvaraj, OFM Cap (2002-2005) 

3. Rev. Fr. Henry, OFM Cap (2005-2006) 

4. Rev. Fr. Albert, OFM Cap (2006-2007) 

5. Rev. Fr. Mariadass, OFM Cap (2007-2008) 

6. Rev. Fr. Alex Maria Chelliah, OFM Cap (2008-2011) 

7. Rev. Fr. Johnson, OFM Cap (2011-2013) 

8. Rev. Fr. Louis Ruban, OFM Cap (2013-2015) 

9. Rev.Fr. Alexander, OFM Cap (2015-2018) 

10. Rev. Fr. Timothy, OFM Cap (2018-2021)

11. Rev.Fr. Felix, OFM Cap (2021---). 

வழித்தடம்: மகாபலிபுரம்- கல்பாக்கம் சாலையில் வல்லம் உள்ளது. செங்கல்பட்டு இரயில் நிலையத்தின் பின்புறத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Church address:

Infant Jesus Church, 

Madha Koil Street, 

86, Vallam PO, 

Chengalpattu - 603 003.

Location map: https://g.co/kgs/R5yTQt

அற்புத குழந்தை இயேசுவின் அருளைப் பெற்றுச் செல்ல வருகைதரும் அனைவரையும் வல்லம் இறைசமூகம் அன்புடன் வரவேற்கிறது...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி.‌ பெலிக்ஸ், OFM Cap அவர்கள்.