957 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பங்களாகுடியிருப்பு

   

அற்புத குழந்தை இயேசு ஆலயம்

இடம்: பங்களாகுடியிருப்பு, சிவசைலம் PO, 627412.

மாவட்டம்: தென்காசி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: அம்பாசமுத்திரம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், கருத்தப்பிள்ளையூர்

பங்குத்தந்தை அருள்பணி.‌ வினோத் பால்ராஜ்

குடும்பங்கள்: 25

அன்பியம்: 1

வியாழன் மாலை 07:00 மணி திருப்பலி

மாதத்தின் கடைசி வியாழன் மாலை 07:00 மணி திருப்பலி, நற்கருணை ஆசீர், திருஎண்ணெய் பூசுதல் 

திருவிழா: அக்டோபர் மாதத்தில் முதல் வெள்ளி, சனி, ஞாயிறு

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரர். ஜெரால்ட், பாளை மறைமாவட்டம்

வழித்தடம்: திருநெல்வேலி -அம்பை -ஆம்பூர் -கருத்தப்பிள்ளையூர் -பங்களாகுடியிருப்பு

கருத்தப்பிள்ளையூர் -பங்களாகுடியிருப்பு 3கி.மீ

Location map:

https://maps.app.goo.gl/G7kJN9AterXHm6Vs5

வரலாறு:

கருணை ஆறு என அழைக்கப்படும் கடனா நதி, திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி, திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணியில் கலக்கிறது. கடனாநதி மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது. 

கடனாநதி நீர்த்தேக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அணை மற்றும் பூங்கா நோக்கி வருகின்றனர். மேலும் குற்றாலம் சீசனிலும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இங்கு காணலாம். இந்த அணையின் பங்களாகுடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள, அற்புத குழந்தை இயேசு ஆலய வரலாற்றைக் காண்போம்.

பாளையங்கோட்டை மறைமாவட்டம், அம்பாசமுத்திரம் மறைவட்டத்தைச் சார்ந்த  சார்ந்த கருத்தப்பிள்ளையூர் புனித அந்தோனியார் ஆலயமானது, 1944 ஆம் ஆண்டில் தனிப் பங்கான போது, கடனா நதி அணைக்கு அருகில் பங்களாகுடியிருப்பில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு கருத்தப்பிள்ளையூர் ஆலயத்தையே சார்ந்திருந்தனர்.

1962ஆம் ஆண்டிலிருந்தே  திரு. கோயில் அவர்களின் குடும்பத்தினர் பங்களாகுடியிருப்பில் ஒரு குருசடி அமைத்துத் தரவேண்டும் என்று பங்குத்தந்தையர்களையும், ஆயர்களிடமும் கேட்டுக் கொண்டே இருந்தனர். இந்த முயற்சி 2012 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே இருந்தது.

01.06.2012 அன்று அருட்பணி. சூசை செல்வராஜ் அவர்கள் கருத்தப்பிள்ளையூர் பங்கின் பொறுப்பேற்ற போது, பங்களாகுடியிருப்பில் ஆலயம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது இங்கு 18 கத்தோலிக்க குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த கோரிக்கையானது ஆயரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆயரும் அனுமதி வழங்கினார். 

ஆலயம் அமைக்க 3 1/2 சென்ட் நிலமானது திரு. கோவில் அவர்கள் குடும்ப மக்களான திரு. ஆண்டனி பர்னாந்து அவர்களால் இலவசமாக கொடுக்கப்பட்டது. இதில் பங்களாகுடியிருப்பு மக்கள், கருத்தப்பிள்ளையூர் பங்கு மக்கள் மற்றும் குழந்தை இயேசுவின் பக்தர்கள் நன்கொடையில் அருட்பணி. சூசை செல்வராஜ் அவர்களின் வழிகாட்டலில், அற்புத குழந்தை இயேசு ஆலயமானது கட்டி முடிக்கப்பட்டு, 29.09.2013 அன்று பாளை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அற்புத குழந்தை இயேசுவின் அருளைப் பெற்று, இறையாசீர் பெற பங்களாகுடியிருப்பு ஆலயம் வாருங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. வினோத் பால்ராஜ் அவர்கள்.