608 புனித குழந்தை தெரசாள் ஆலயம், மொளசி


புனித குழந்தை தெரசாள் ஆலயம் 

இடம் : மொளசி 

மாவட்டம் : நாமக்கல் 

மறைமாவட்டம் : சேலம் 

மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோழசிராமணி 

பங்குத்தந்தை : அருட்பணி. K. பிரசன்னா

குடும்பங்கள் : 28

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு. 

திருவிழா : அக்டோபர் மாதம் 2ம் தேதி. 

வழித்தடம் : சோழசிராமணியிலிருந்து பட்லூர் செல்லும் சாலையில் மொளசி அமைந்துள்ளது. 

Location map : https://maps.app.goo.gl/7fPjp58yy5BgWgsXA

வரலாறு :

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அழகிய சிறிய கிராமமான மொளசியில் அமைந்துள்ள புனித குழந்தை தெரசாள் ஆலய வரலாற்றைக் காண்போம். 

மொளசியில் புதிதாக கிறிஸ்தவம் தழுவிய மக்களை நாமக்கல் பங்குத்தந்தை அருட்பணி. மத்தேயு தெக்கடம் அவர்கள் வழிநடத்தி வந்தார்கள். 

1946 ம் ஆண்டு நாமக்கல்லில் இருந்து பிரிந்து பெருங்குறிச்சி தனிப்பங்காக ஆனது முதல் அதன் கீழ் மொளசி செயல்பட்டு வந்தது. 

தொடக்க காலத்தில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த ஆலயமானது மாற்றப்பட்டு, Iwatashi பங்குத்தந்தை அருட்பணி. J. பார்பியர் அவர்களின் உதவி மற்றும் மக்களின் நன்கொடையால், பெருங்குறிச்சி பங்குத்தந்தை அருட்பணி. மரியோ ரொடீசினி அவர்களால் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 09.12.2000 அன்று சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

2005 -ஆம் ஆண்டில் பெருங்குறிச்சி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு சோழசிராமணி தனிப்பங்காக உயர்த்தப்பட்டது முதல், அதன் கிளைப் பங்காக மொளசி ஆனது.

தொடர்ந்து சோழசிராமணி பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மொளசி புனித குழந்தை தெரசாள் ஆலய இறைசமூகம். 

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. K. பிரசன்னா.