928 புனித பதுவை அந்தோனியார் ஆலயம், சுண்டம்பட்டி

     

புனித பதுவை அந்தோனியார் ஆலயம்

இடம்: சுண்டம்பட்டி (a) சுண்டனபள்ளி, ஒரப்பம், 635108

மாவட்டம்: கிருஷ்ணகிரி 

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: கிருஷ்ணகிரி

நிலை: பங்குதளம் 

கிளைப்பங்கு: புனித வனத்து சின்னப்பர் ஆலயம், சூரங்குட்டை 

பங்குத்தந்தை: அருட்பணி. M. சூசை

குடும்பங்கள்: 194

அன்பியங்கள்: 8+1

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி

திங்கள், புதன், வியாழன் திருப்பலி காலை 06:15 மணி

செவ்வாய், வெள்ளி, சனி திருப்பலி மாலை 05:00 மணி

மாதத்தின் முதல் செவ்வாய் காலை 11:00 மணிக்கு சிறப்பு திருப்பலி

கிளைப்பங்கு திருப்பலி நேரங்கள்:

ஞாயிறு காலை 06:30 மணி

புதன் மாலை 06:30 மணி

திருவிழா: ஜூன் இரண்டாவது அல்லது  மூன்றாம் ஞாயிறு

மண்ணின் இறையழைத்தல்கள்:

Rev.Fathers

1. அருள்பணி. அழகு செல்வன்

2. அருள்பணி. ஜான் கென்னடி

3. அருள்பணி. பீட்டர் பெர்னாண்டஸ், CHC

4. அருள்பணி. அந்தோணி சாமி, OSF

5. அருள்பணி. பிரான்ஸிஸ் சேவியர்

6. அருள்பணி. ஞானப்பிரகாசம்

7. அருள்பணி. பெஞ்சமின்

8. அருள்பணி. அந்தோணி நெல்சன், OFM Cap.

Rev.Brother

Bro. பிரான்சிஸ் சேவியர், MLM 

Rev.Sisters:

1. Sr. இருதய மேரி, PBVM

2. Sr. குழந்தை தெரசா

3. Sr. கிளாரா, PBVM

4. Sr. மோனிகா

5. Sr. பிரிசில்லா மேரி, FIHM

6. Sr. லூர்து மேரி, Cluny

7. Sr. சகாய மேரி, DMI 

வழித்தடம்: கிருஷ்ணகிரி -சென்னை நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரியிலிருந்து 5கி.மீ. தொலைவில் சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

Map: https://maps.app.goo.gl/Lji5vGQyfvjvSNHJA

வரலாறு: 

எலத்தகிரியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தாங்கள் செய்துவந்த விவசாயத் தொழிலை முன்னிட்டு, சுண்டம்பட்டியில் நிலம் வாங்கி இப்பகுதியில் குடியேறினர்.

எலத்தகிரி திருமுழுக்குப் பதிவேட்டில் 02-05-1937இல் தான் முதன்முதலில் சுண்டம்பட்டி என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது (நாம் தேடிய வரை). சுண்டம்பட்டியில் வசித்த எட்டி குடும்பம், சூசையப்பன் - ஞானமரியின் மகன் பிலிப்பின் திருமுழுக்கு அது.

பின்னர் பலர் எலத்தகிரியிலிருந்தும், காத்தாம்பள்ளத்திலிருந்தும், சுண்டம்பட்டி பகுதியில் குடியேறினர். இவற்றின் அடிப்படையில் சுண்டம்பட்டியில் 1930-1940 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் இக்குடியேற்றம் நடந்திருக்கலாம்.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகி வந்ததை உணர்ந்த அருள்பணி. மேத்யூ கடவில் (எலத்தகிரி பங்குத்தந்தை 1962-1964) சுண்டம்பட்டிக்கு வடக்கே 1963 ஆண்டில் 0.45 சென்ட் நிலத்தை வாங்கினார். இவ்விடத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் அன்றைய சேலம் ஆயர் மேதகு வெண்மணி செல்வநாதர் திருப்பலி நிறைவேற்றியதாக மக்கள் நினைவு கூர்கின்றனர். தற்போது அந்நிலத்தில் கல்லறையும், சிற்றாலயம் ஒன்றும் உண்டு.

பின்னர் எலத்தகிரி பங்குத்தந்தையாக (1964-1972) பணியாற்றிய அருள்பணி. இக்னேஷியஸ் களத்தில் அடிகளார், நெடுஞ்சாலையை ஒட்டி (இன்றைய ஆலயம் உள்ள இடம்) 0.92 சென்ட் நிலத்தை 1969இல் வாங்கினார். இந்நிலத்தில் குடிசைக் கோயில் அமைக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

1972-1980ஆம் ஆண்டுகளில் எலத்தகிரி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருள்பணி. ஜோவாக்கிம் அடிகளார் புனித அந்தோனியாருக்கு, அழகிய ஆலயம் ஒன்றை கட்டியெழுப்பினார். 16.01.1979 அன்று இவ்வாலயம் புனிதப்படுத்தப்பட்ட அன்றிலிருந்து, செவ்வாய்க்கிழமைகளில் மாலையில் புனித அந்தோனியாரின் நவநாள் திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் திருப்பலியும் எலத்தகிரி பங்குத்தந்தையர்களால் நிறைவேற்றப்பட்டது. ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பதுவை நகர் என்று பெயரிடப்பட்டது.

எலத்தகிரியில் 1992-1994 வரை பங்குத்தந்தையாக பணியாற்றியவர் அருள்பணி. எஸ். அமல்ராஜ் அடிகளார். சூரங்குட்டை பகுதியில் வசித்த கிறிஸ்தவர்களின் தேவையை உணர்ந்து, மக்களிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில் புனித வனத்து சின்னப்பருக்கு சிற்றாலயம் ஒன்றை கட்டினார்.

1994இல் சுண்டம்பட்டியில் ஆலயத்தின் முன்புறம் சாலையை ஒட்டி அழகான கோபுரம் ஒன்றையும் அருள்தந்தை. அமல்ராஜ் கட்டினார். நிதி பற்றாக்குறையால் தனது இருசக்கர வாகனத்தை விற்று, அத்தொகையை கோபுரம் கட்டுவதற்கு செலவழித்தார் என்பதை சுண்டம்பட்டி மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவுகூறுகின்றனர். நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது இக்கோபுரம் அகற்றப்பட்டது. இன்றைய கோபுரம் 2005 ல் கட்டப்பட்டது.

1982இல் எலத்தகிரி பங்குத்தந்தை அருட்பணி. அருள் சுந்தரம் அடிகளாரின் முயற்சியால் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கல்லறைக்கு 0.11 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. பின்னர் 2001இல் 0.22 சென்ட் நிலம் பெறப்பட்டு, கல்லறை விரிவாக்கம் செய்யப்பட்டது.

2.6.1998 அன்று சுண்டம்பட்டி புதிய பங்காக உருவாக்கப்பட்டது. சூரங்குட்டை ஆலயமாகும், சுண்டம்பட்டியின் கிளைப் பங்கானது.

புதிய சுண்டம்பட்டியின் பங்கு பொறுப்பை கப்புச்சின் சபை துறவிகள் ஏற்றனர். முதல் பங்குத்தந்தையாக கப்புச்சின் சபையைச் சார்ந்த அருள்பணி. ஜோசப் அவர்கள் நியமிக்கப்பட்டார். எலத்தகிரியில் தங்கியிருந்து, சுண்டம்பட்டியில் பங்கு அலுவலகம் மற்றும் துறவிகள் இல்லம் கட்டினார். இரு இல்லங்களும் 25.2.1999 அன்று திறந்து வைக்கப்பட்டன. 19.2.2000 அன்று சுண்டம்பட்டியில் கட்டப்பட்ட தியான இல்லத்தை ஆயர் புனிதப்படுத்தி திறந்து வைத்தார். 

புனித தோமையாரின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் 1999 முதல் சுண்டம்பட்டி பங்கில் பணியாற்றத் தொடங்கினர். இவர்கள் மருத்துவம் மற்றும் மேய்ப்பு பணிகளில் பங்கு தந்தையருக்கு பெரிதும் உதவி வருகின்றனர்.

2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுண்டம்பட்டி பங்கின் பொறுப்பு மறைமாவட்டமே ஏற்றுக்கொண்டது. தருமபுரி மறைமாவட்ட குருவான அருள்பணி. P. சேவியர் அடிகளார் சுண்டம்பட்டி பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். பதினைந்து ஆண்டுகளாக சுண்டம்பட்டி பங்கினை திறம்பட வழிநடத்தி வந்த கப்புச்சின் சபையினரை, நன்றியுடன் நினைவு கூருகின்றனர் பங்கு இறைசமூகத்தினர். கப்புச்சின் சபையின் தியான இல்லம், உளவியல் ஆற்றுப்படுத்துநர் பயிற்சி தரும் The Fountain கல்லூரி வழியாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சுண்டம்பட்டி பங்கில் கப்புச்சின் சபை துறவிகள் தொடங்கிய நற்பணிகளை, அருள்பணி. சேவியர் அவர்கள் தொடர்ந்து செய்து வந்தார்.

மேலும் அருள்பணி. P. சேவியர் அடிகளார் மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு ₹33 இலட்சம் செலவில், புனித அந்தோணியார் ஆலயத்தை விரிவுப்படுத்தி, புதுப்பித்துள்ளார். விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலயத்தை தருமபுரி ஆயர் மேதகு. லாரன்ஸ் பயஸ் அவர்கள் 24.5.2015 அன்று புனிதப்படுத்தினார்.

ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் சுண்டம்பட்டி தலத்திருச்சபை வளர்ந்து, 194 (மார்ச் 2022 கணக்கெடுப்பின்படி) குடும்பங்களைக் கொண்ட விசுவாசம் மிக்க பங்காகத் திகழ்கிறது.

பங்கில் உள்ள சபைகள் / இயக்கங்கள் : 

பங்குப் பேரவை

மரியாயின் சேனை

புனித வின்சென்ட் தே பவுல் சபை

லிஸ்பன் இளையோர் சபை

பங்கில் உள்ள கன்னியர் இல்லம்:

புனித தோமையர் பிரான்சிஸ்கன் (FST)

பங்கில் பணியாற்றிய பங்குதந்தையர்கள்:

1. Fr. ஜோசப், OFM Cap (1998-1999) 

2. Fr. அகஸ்டின், OFM Cap (1999-2002) 

3. Fr. அருளானந்தம், OFM Cap (2002-2005) 

4. Fr. ஆரோக்கியராஜ், OFM Cap (2005-2008) 

5. Fr. ஜெய்கர், OFM Cap (2008-2009) 

6. Fr. இருதயசாமி, OFM Cap (2009-2011) 

7. Fr. தெர்ஸ்நாதன், OFM Cap (2011-2012) 

8. Fr. திவாகர், OFM Cap (2012-2013) 

9. Fr. P. சேவியர் (2013-2016) 

10. Fr. K. லூர்து சாமி (2016-2021) 

11. Fr. ஜார்ஜ் (2021-2023) 

12. Fr. M. சூசை (2023...)

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. சூசை அவர்கள்

புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பில் உதவி: திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி மற்றும் கோவில்பிள்ளை திரு. மதலைமுத்து & ஆலய உறுப்பினர் திரு. சகாயம் ஆகியோர்.