புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : கோட்டார்
மறைவட்டம் : கன்னியாகுமரி
நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருட்பணி. ஆன்றனி பென்சிகர்
குடும்பங்கள் : 150
அன்பியங்கள் : 6
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு
நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு.
திருவிழா : செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் பத்து நாட்கள்.
வழித்தடம் : நாகர்கோவில்- சுசீந்திரம் - வழுக்கம்பாறை வழியாக அழகப்பபுரம், அஞ்சுகிராமம் செல்லும் வழியில் மயிலாடி அமைந்துள்ளது.
Location map : Mylaudy, Tamil Nadu 629403 https://maps.google.com/?cid=4422835373126640830
வரலாறு :
குமரி மாவட்டத்தில் மயிலாடி ஊரில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய வரலாற்றைக் காண்போம்..
மயிலாடி பரவர் சமுதாய மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக 1925 ஆம் ஆண்டு ஒரு சிறு குருசடி அமைக்கப்பட்டது.
1935 ஆம் ஆண்டு ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும், பங்குத்தந்தை அருட்பணி. இன்னாசி அவர்களின் முயற்சியாலும் குருசடி அகற்றப்பட்டு ஓட்டுக்கூரை கொண்ட சிறு ஆலயம் ஒன்று அமைக்கப் பட்டது.
மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே பெரிய அளவிலான ஆலயம் கட்ட, மயிலாடி மக்கள் மேற்கொண்ட முயற்சியாலும், ஆயர் அவர்களின் உதவியாலும், பங்குத்தந்தை அருட்பணி. அம்புறோஸ் அவர்களின் உதவியாலும் 04.10.1985 அன்று மேதகு ஆயர் ம. ஆரோக்கியசாமி அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டது.
புதிய ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 21.09.1986 அன்று அர்ச்சிக்கப் பட்டது.
மயிலாடி பங்கானது, தொடக்கத்தில் இராமனாதிச்சன்புதூர் பங்கின் கிளைப்பங்காகவும், பின்னர் சகாயபுரம் பங்கின் கிளைப்பங்காகவும் தொடர்ந்து கொட்டாரம் பங்கின் கிளைப்பங்காகவும், இறுதியாக, மீண்டும் சகாயபுரம் பங்கின் கிளைப்பங்காகவும் இருந்திருக்கிறது.
2017 மே மாதத்தில் மயிலாடி தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, அருட்பணி. பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்கள்.
தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. ஆன்றனி ரொசாரியோ பணிக்காலத்தில் 2018 ஆம் ஆண்டில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.
2019 ஆம் ஆண்டு முதல் பங்கின் பொறுப்பேற்று அருட்பணி. ஆன்றனி பென்சிகர் அவர்கள், மயிலாடி இறைசமூகத்தை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி, வளர்ச்சியை பாதையில் அழைத்துச் செல்கிறார்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்குப்பேரவை
2. மறைக்கல்வி
3. சிறார் இயக்கம்
4. தலித் இயக்கம்
5. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
7. திருவழிபாட்டுக் குழு
8. உள்நாட்டு மீனவர் சங்கம்
பங்கின் பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. பிரான்சிஸ் டி சேல்ஸ் (2017-2018)
2. அருட்பணி. ஆன்றனி ரொசாரியோ (2018-2019)
3. அருட்பணி. ஆன்றனி பென்சிகர் (2019 முதல் தற்போது வரை..)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஆன்றனி பென்சிகர் அவர்கள்.
ஆலய வரலாறு : கோட்டாறு மறைமாவட்ட பவளவிழா மலர்.