180 தூய அலங்கார அன்னை ஆலயம், குழிவிளை


தூய அலங்கார அன்னை ஆலயம்

இடம் : குழிவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : வேங்கோடு

நிலை : கிளைப்பங்கு

பங்கு : தூய கார்மல் அன்னை ஆலயம், #வாவறை

குடும்பங்கள் : 115
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணிக்கு

வியாழன் : மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் மன்றாட்டு வழிபாடு மாலை 6.00மணி ( புனித அந்தோணியார் குருசடி - காலனி)

பங்குத்தந்தை : அருட்பணி ச. மரிய இராஜேந்திரன்

திருவிழா :

பங்கின் குடும்பவிழா செப்டம்பர் மாதத்தில் 5 நாட்கள்

கிறிஸ்து அரசர் விழா நவம்பர் மாதம்

புனித அந்தோணியார் திருவிழா குருசடி யில் ஜுன் மாதத்தில் நடைபெறும்.

குழிவிளை ஆலய வரலாறு :

சுமார் 188 ஆண்டுகளுக்கு முன்பு 12 உள்நாட்டு மீனவர் குடும்பங்கள் இணைந்து, ஓலையில் வேயப்பட்ட சிறு குடிசையில் சிறு குடிசையில் இறை வழிபாடுகள் செய்து வந்தனர்.

இதற்காக அந்தப் பகுதியில் உள்ள, நல் உள்ளம் கொண்ட நாயர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் 38 சென்ட் நிலம் கொடுத்தார்.

ஏறத்தாழ 178 ஆண்டுகளுக்கு முன் மரத்தாலான புனித அலங்கார அன்னையின் இரண்டு சுரூபங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கடல் வழியாக அனுப்பப்பட்டு, வள்ளவிளை கடற்கரையில் மீனவர்களால் கரைக்கு கொண்டு வரப்பட்டு, குலுக்கல் முறையில் ஒன்று குழிவிளை க்கும், மற்றொன்று வள்ளவிளைக்கும் கிடைத்ததாக கூறப்படுகிறது.

ஓலைக்குடில் ஆலயம் மாற்றப்பட்டு 143 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணால் ஆன ஆலயம் கட்டப்பட்டது.

1895 ம் காலகட்டத்தில் ஓடுகள் வேய்ந்த இரண்டு அறை ஆலயம் கட்டப்பட்டது.

அதன் பின்னர் 1972 ல் புதிய ஆலயப் பணிகள் துவக்கப்பட்டு 07-04-1973 ல் பேராயர் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1992 ம் ஆண்டு அருட்பணி ஜோக்கிம் பணிக்காலத்தில் பூகோள அடிப்படையில் குழிவிளை பங்கிற்குட்பட்ட அனைத்து ஜாதி (உள்நாட்டு மீனவர், நாடார், தலித்) கத்தோலிக்க மக்களுக்கும் பங்கு உறுப்பினர் உரிமை வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வாவறை, புதுக்கோடு மற்றும் கோனசேரி இறைமக்களும் குழிவிளை பங்கு மக்களோடு, அனைத்து நிகழ்வுகளிலும் இணைந்து செயல்படுவது உறவுக்கு வலு சேர்க்கிறது.

தற்போதைய புதிய ஆலயத்திற்கு 09-11-2017 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகளாலும், பங்குத்தந்தை அருட்பணி ச. மரிய இராஜேந்திரன் அவர்களின் சீரிய வழி காட்டுதலாலும் வெறும் 13 மாதங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 20-12-2018 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கிறிஸ்து பிறப்பு விழா தவக்கால நிகழ்வுகளும் இக் கிளைப் பங்கில் நடைபெறும்.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி ச. மரிய இராஜேந்திரன் அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்தி இறை திட்டத்தின்படி வளர்ச்சிப் பாதையில் குழிவிளை இறை சமூகத்தை முன்னெடுத்து செல்கிறார்.

வழித்தடம் :

களியக்காவிளை -யிலிருந்து புதுக்கடை மற்றும் இரயுமன்துறை செல்லும் வழி மற்றும் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் களியக்கவிளை யிலிருந்து 3 கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.