466 புனித சந்தியாகப்பர் ஆலயம், உப்பத்தூர், சங்கராபுரம்

  

புனித சந்தியாகப்பர் ஆலயம்

இடம் : உப்பத்தூர், சங்கராபுரம்.

மாவட்டம் : விருதுநகர்
மறை மாவட்டம் : மதுரை உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : விருதுநகர்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : திருஇருதய ஆலயம், சாத்தூர்

பங்குத்தந்தை : அருட்பணி. M. போதகர் மிக்கேல் ராஜ்

குடும்பங்கள் : 400

மாதத்தில் இரண்டு நாட்கள் மாலை 07.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஜூலை 16 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, 24 -ஆம் தேதி திருவிழா.

வழித்தடம் : சாத்தூர் -உப்பத்தூர்.

கோவில்பட்டி -உப்பத்தூர்.
இறங்குமிடம் : சங்கராபுரம்.

Location map : Uppathur RdTamil Nadu 626205
https://maps.app.goo.gl/jjcushVUwQbauSQY9

வரலாறு :

அழகிய கிராமமான சங்கராபுரம் கிராம மக்கள் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கூலி செய்து வாழ்ந்து வந்தனர்.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் கொடிய நோய் தொற்று அதிகமான போது முன்னோர்கள் ஓலை கொட்டகை ஆலயம் அமைத்து புனித சந்தியாகப்பரை பாதுகாவலராகக் கொண்டு, இறைவனை வழிபட்டு வரவே கொடிய நோய் மாறியது.

அதன் பின்னர் இவ்வாலயம் ஓடு வாய்ந்த ஆலயமாக மாற்றப் பட்டது.

அருட்பணி. ஜெகனிவாசகர் சாத்தூர் பங்குத்தந்தையாக இருந்த போது, கான்கிரீட் ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

மக்களின் ஒத்துழைப்புடன் மணிக்கூண்டு கட்டப்பட்டு, 23.07.2009 அன்று சாத்தூர் பங்குத்தந்தை அருட்பணி. பிரிட்டோ சுரேஷ் அவர்களால் திறக்கப்பட்டது. .

பேய் பிடித்தவர்கள் இவ்வாலயம் வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்வது தனிச் சிறப்பு.

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

தகவல்கள் : ஆலய பொறுப்பாளர்கள்.