520 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வாவத்துறை


புனித ஆரோக்கியநாதர் ஆலயம் 
இடம் : வாவத்துறை

மாவட்டம் : கன்னியாகுமரி 
மறைமாவட்டம் : கோட்டார் 
மறைவட்டம் : கன்னியாகுமரி 

நிலை : பங்குத்தளம் 
பங்குத்தந்தை : அருட்பணி. M. லிகோரியஸ் 

குடும்பங்கள் : 360
அன்பியங்கள் : 15

ஞாயிறு திருப்பலி காலை 06.30 மணிக்கு 
திங்கள், புதன், வெள்ளி, சனி : திருப்பலி காலை 06.15 மணிக்கு. 
செவ்வாய் மாலை 06.30 மணிக்கு செபமாலை, திருப்பலி. 
வியாழன் மாலை 06.30 மணிக்கு புனித ஆரோக்கியநாதர் நவநாள், திருப்பலி. 

தனிச்சிறப்பு :

மாதத்தின் முதல் வியாழன் மாலை 06.30 மணிக்கு புனித ஆரோக்கியநாதர் நவநாள், நோயாளிகளுக்கான சிறப்பு குணமளிக்கும் வழிபாடு. 

புனித ஆரோக்கியநாதர் நோயாளிகளின் சிறப்பு பாதுகாவலர் என்பதால் மாதத்தின் முதல் வியாழன் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் வருகை தருவார்கள். நலம் பெற்றவர்கள் புனித ஆரோக்கியநாதருக்கு சாட்சியம் பகிர்வார்கள். அன்றைய தினம் சிறப்பு திருப்பலியும் நற்கருணை ஆசீரும் நடைபெறும். 

மாதத்தின் முதல் வெள்ளி காலை திருப்பலியைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு நற்கருணை வழங்கப்படும். 

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ரால்ஃப் கிரான்ட் மதன், Kottar diocese 
2. அருட்பணி. பிரபு, Kottar diocese 
3. அருட்பணி. ஜெர்ரி, Kolkatta Asansol diocese 
4. அருட்பணி. லூக்காஸ், MMI 
5. அருட்பணி. ஆன்றனி மைக்கேல் ராஜ், SJ
6. அருட்சகோதரி. ஜோஸ்பின் 
7. அருட்சகோதரி. தைனஸ் 
8. அருட்சகோதரி. ரோஸி 
9. அருட்சகோதரி. மேரி மஜல்லா 
10. அருட்சகோதரி. சகாய ரம்யா
11. அருட்சகோதரி. காட்பிரைட் சுப்ரியா

வழித்தடம் : கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் பார்க்கும் இடம். 

Location map : St. Roch's Church Vavathurai, Kanyakumari, Tamil Nadu
https://maps.google.com/?cid=696534829781037959

வரலாறு :

கன்னியாகுமரி கடற்பரப்பில் அமைந்துள்ள அழகான ஊர் தான் வாவத்துறை. இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் ஒரு ஓலைக்குடில் குருசடி அமைத்து, புனித ஆரோக்கியநாதரை பாதுகாவலராகக் கொண்டு, கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் ஒரு பகுதியாக இருந்து கி.பி 2000 ஆண்டு வரை செயல்பட்டு வந்தனர்.

26.08.2001 அன்று புதுக்கிராமம் தனிப்பங்கான போது வாவத்துறை அதன் கிளைப் பங்காக ஆனது. 

அருட்பணி. ஜோசப் பணிக்காலத்தில் குருசடி இடிக்கப்பட்டு, மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டப்பட்டு 16.04.2010 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

அருட்பணி. ஜிம் அவர்களின் பணிக்காலத்தில் 16.08.2013 அன்று பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. 

08.03.2014 அன்று வாவத்துறை தனிப்பங்காக (கோட்டார் மறைமாவட்டத்தின் 176 வது பங்காக) உயர்த்தப்பட்டு, அருட்பணி. ஹென்சன் (2014 -2019) அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார்கள். மேலும் ஆலயத்திற்கு கொடிமரம் வைக்கப் பட்டது. 

17.05.2019 முதல் அருட்பணி. லிகோரியஸ் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். 

ஆலய நுழைவாயில் கட்டப்பட்டு 16.08.2019 அன்று வட்டார முதல்வர் அருட்பணி. ரொமால்டு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

2020 மார்ச் மாதத்தில் மீனவர் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் அருட்பணி. லிகோரியஸ் அவர்களின் முயற்சியால் 'சூப்பர் அன்பியம்' என்கிற பெயரில் அன்பியங்களின் பங்கேற்பையும் செயல்பாட்டையும் அதிகரிக்கும் விதமாக மாதந்தோறும் நிகழ்வுகள் அமைத்து சிறப்பாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

பங்கில் உள்ள நிறுவனங்கள், இல்லங்கள் :
1. பங்குத்தந்தை இல்லம் 
2. நூலகம் 
3. அங்கன்வாடி 

குருசடிகள்:
1. புனித பனிமய மாதா குருசடி :ஆகஸ்ட் மாதம் 05 ஆம் தேதி திருவிழா கொண்டாடப்படுகிறது. 

2. புனித ஜார்ஜியார் குருசடி: மே மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப் படுகிறது. 

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்குப்பேரவை
2. அன்பிய ஒருங்கிணையம்
3. பக்தசபை ஒருங்கிணையம்
4. மரியாயின்சேனை
5. இயேசுவின் திருஇருதய சபை
6. கத்தோலிக்க சேவா சங்கம் 
7. கார்மல் மாதா சபை
8. பிரான்சிஸ்கன் 3 ம் சபை
9. CPD தோழமை சங்கம் 
10. சாந்திதான் பெண்கள் இயக்கம் 
11. திருவழிபாட்டுக் குழு
12. மறைக்கல்வி மன்றம் 
13. பாலர்சபை 
14. சிறார் இயக்கம் 
15. இளம் கிறிஸ்தவ மாணவர்கள் இயக்கம் 
16. பீடச்சிறார் 
17. பாடகற்குழு.

புனித ஆரோக்கியநாதரின் பரிந்துரையால் எண்ணற்ற அற்புதங்கள் அதிசயங்கள் நடந்து வருவதால், பல பகுதிகளில் இருந்தும் இறைமக்கள் வாவத்துறை வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்கின்றனர். மேலும் கன்னியாகுமரி கடற்பரப்பில் சூரிய உதயம் காண சரியான இடமாகவும் இவ்வாலயம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. வாருங்கள்.. புனித ஆரோக்கியநாதரின் வழியாக இறைவனின் அருள் வரங்களை பெற்றுச் செல்லுங்கள்.. 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. லிகோரியஸ் அவர்கள்.